Saturday, August 23, 2003
ஐந்து நிமிடத்தில் அனிமேஷன் கற்றுக்கொள்ளுங்கள் .. !
			  அனிமேட்டிங் படங்கள் உங்களின் இணையப்பக்கத்துக்கு ஒரு கவர்ச்சியை அளிக்கின்றன என்றால் அது மிகையாகாது.. அசையும் பொருட்கள், அசையாப் பொருட்களைவிட மனிதனின் கவனத்தைக் கவரும் என்று உளவியல் கூறுகிறது..  அத்தகைய அனிமேட்டிங் படங்கள் செய்வது பற்றி மிகச்சுருக்கமாகப் பார்க்கலாம் ...
1.அனிமேட்டிங் செய்ய முதலில் நமக்குத் தேவை தனித்தனிச் சட்டங்கள்(frames).. அதாவது படங்கள்.. உங்களுக்குத் தேவையான படங்களை நீங்களே தயாரித்துக்கொள்ளலாம்.. அல்லது www.google.com - ல் image search பயன்படுத்தித் தேவையான படங்களை எடுத்து அல்லது "paint" போன்ற ஏதாவது ஒரு மென்பொருளில் வரைந்து,வெட்டி, ஒட்டி...... உருவாக்கிக் கொள்ளுங்கள்... படங்கள் எந்த வரிசையில் இயங்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த வரிசையில் முதலில் பெயர் கொடுத்துக்கொண்டீர்களானால் வசதியாக இருக்கும் .. எடுத்துக்காட்டாக .. 1.jpg , 2.jpg , 3.jpg .....
2.சரி.. இப்போது தனித்தனிப் படங்களைத் தயாராக வைத்துக்கொண்டுவிட்டோம்..அடுத்ததாக அந்தப் படங்கள் அனைத்தையும் ஒரே பைலாக விரும்பிய வரிசையில் தைக்க வேண்டும்.
3.பின்னர் ஒரே படமாகத் தைத்த பைலை இயங்குகின்ற gif பைலாக மாற்றவேண்டும்.. அவ்வளவுதான் இப்போது நீங்கள் இயங்கும் gif படம் செய்துவிட்டீர்கள்.....
இப்போது நம் அனைவருக்கும் வருகின்ற சந்தேகம்... பல படங்களை எப்படி ஒரே படமாகத் தைப்பது? .. அதனை எப்படி இயங்கும் gif பைலாக மாற்றுவது? என்பதுதான்... இதைப்பற்றி நாம் அவ்வளவாகக் கவலைப் படவேண்டாம்.. இந்த வேலையை செய்ய உங்களுக்கு நிறைய மென்பொருட்கள் உள்ளன.. அதில் எளிமையான ஒரு மென்பொருளை நீங்கள் இணையத்திலிருந்து இறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளலாம்... இதற்காக நிறைய மென்பொருட்கள் இலவசமாகவே கிடைக்கிறது... அவற்றில் ஒன்று "அனிமேட்டர்9" என்பது. இது இந்த இணைப்பில் இலவசமாய்க் கிடைக்கிறது..
அந்தக் கோப்பை இறக்கி உங்களின் கணினியில் சேமித்துப் பின்னர் அதன்மேல் இருமுறை கிளிக் செய்தீர்களானால் எந்த இடத்தில் நிறுவ வேண்டும் என்று கேட்கும்.. இடத்தைத்தேர்வுசெய்து நிறுவிக்கொள்ளுங்கள்.. இந்த பைலின் அளவு 500 KB க்கும் குறைவுதான்...
இந்த "animator9" மென்பொருளைப் பயன்படுத்துவது மிகவும் எளிது... இதிலுள்ள "stitch" என்ற பட்டனைத் தட்டி உங்களின் படங்களைத் தேவையான வரிசையில் தேர்வு செய்து "done" என்ற பட்டனைத் தட்டி அனைத்தையும் ஒரே படமாகத் தைத்துக் கொள்ளலாம்.... பின்னர் "play" என்ற பட்டனை அழுத்தினால் படம் எவ்வாறு இயங்கும் என்று நமக்குத் தெரியும்.. படங்கள் இயங்கும் வேகத்தை "control" என்ற option - ஐ பயன்படுத்திக் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியும்.. அதன் பின்னர் "make" என்ற பட்டன் அழுத்தினால் உங்களின் அழகான இயங்கும் படம் தயார்... அப்புறமென்ன .... உங்கள் படம் இயங்குவதைப் பார்த்து ரசிக்கவேண்டியதுதான்..
மேலும் பல எளிதான மென்பொருள்களும் படங்களைத் தயாரிக்கக் கிடைக்கின்றன.. அவற்றில் ஒன்று .. மேஜிக் மார்ப் என்பதாகும் ... அதனை இங்கேயிருந்து இறக்கிக்கொள்ளலாம் .. இந்த மென்பொருளைப் பயன்படுத்திப் பல படங்களைத் தயாரிக்கலாம் ..
என்ன .. நண்பர்களே .. ! இப்போதே நீங்களும் இயங்கும் படம் தயாரிக்க ஆரம்பித்துவிட்டீர்கள் போலிருக்கிறதே ... :) . 
       
          (0) Your Comments   
          |  
      
|   |  |
	
Tuesday, August 19, 2003
மீண்டும்...
			  நேற்று மாலை ஏதாவது எழுதலாம்னு நெனைச்சேன் .. ஆனா.. என்னோட அறையில  இண்டெர்நெட் சரியாக வேலை செய்யலை..  அதனால எதுவும் எழுதமுடியல.. இந்த வலைப்பூக்கள் நல்லா வசதியா இருக்குங்க.. அதுவும் யுனிகோடு  பயன்படுத்தி எழுதினால் இன்னும் வசதி.. ஏன்னா மத்தவங்க எந்த மென்பொருளும் இறக்குமதி செய்யாமல் தமிழைப் படிக்கலாம்..
ஆனாலும் விண்டோஸ் 95, மற்றும் அதுக்கு முன்னாடி வந்த விண்டோஸ், மேலும் இண்டெர்னெட் எக்ப்ளோரர் 4 வைத்திருப்பவர்கள் யுனிக்கோடு எழுத்தைப் படிக்கமுடியாது என்று நினைக்கிறேன்.. அவர்கள் ஏதாவது யுனிக்கோடு எழுத்தை இறக்குமதி செய்துகொள்ள வேண்டும்.. என்றாலும் அது ஒன்றும் பெரிய கடினமான செயல் இல்லையே.. நிறைய எழுத்துருக்கள் இலவசமாகவே கிடைக்கின்றன..
இப்போது இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.. சந்திப்போம் மாலையில்... 
       
Monday, August 18, 2003
அறிமுகம் ...
			  தமிழ் வலைப்பூக்கள் அப்படின்னு கேள்விப்பட்டேன்.. சரி நாமும் முயற்சி செய்துபார்க்கலாமேன்னு ஆரம்பிச்சிருக்கேன்... ஆனா.. என்ன எழுதுரதுன்னுதான் தெரியலை..  தமிழ்லயே முதலில் ஆரம்பிக்கலாம்னு நெனச்சு ஆரம்பிச்சிருக்கேன்... சரிங்க மணி இரவு 12  மணி இப்ப.. அதனால இன்னைக்கு இத்தோட முடிச்சுக்கறேன்.. தூக்கமா வருது..
 
          (0) Your Comments   
          |  
      
|   |  |