<$BlogRSDUrl$>

Saturday, June 18, 2005

அன்னியன்

இப்போதுதான் இப்படத்தைத் தியேட்டரில் பார்த்துவிட்டு வருகிறேன். கிட்டத்தட்ட சந்திரமுகி கதைதான். ஷங்கர் ஏன் சந்திரமுகி படத்துடன் இதை வெளியிடவில்லை என்பது இப்படத்தைப் பார்த்தவுடன் அனைவருக்கும் புரியும். நம்ம அல்வாசிட்டி விஜய் ஏற்கனவே கதையைச் சொல்லிவிட்டார். திரும்ப அதையே நானும் சொல்லிப் போரடிக்க விரும்பவில்லை.

நாட்டில் நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்துக் கொதித்த அம்பி என்ற சாதுவான விக்ரம் அன்னியன் என்ற மனிதனாய் பிளவாளுமை கொள்கிறார். தவறு செய்தவர்களை நரகத்தில் கொடுக்கும் தண்டனைகள் என கருடபுராணத்தில் சொல்லியிருக்கும் தண்டனைகளைக் கொடுத்துக் கொல்கிறார். ஒருத்தரை மசால்பூசி எண்ணெயில் வறுத்தெடுக்கிறார். இன்னொருத்தரை அட்டைப்பூச்சிகளை விட்டு ரத்தத்தை உறிஞ்சவைத்துக் கொல்கிறார். எருமை மாடுகளை மிதிக்க வைத்தும் ஒருவரைக் கொல்கிறார். இப்படி விதவிதமாய்க் கொலை செய்கிறார்.

கொலை செய்வதைக்கூட ஒத்துக்கொள்ளாலாம், ஆனால் பலவற்றை இன்னும் கொஞ்சம் யதார்த்தமாய்க் காட்டியிருக்கலாம். பிளவாளுமையிலிருக்கும்போது அன்னியன் கிட்டத்தட்ட 100 கராத்தே(?) வீரர்களை தூக்கிப் பந்தாடி அவர்களைப் பறக்கவிடுவது எல்லாம் ரொம்ப ஓவர். ரஜினி அவ்வாறு பறந்து பறந்து அடிப்பதில் நியாயம் இருக்கிறது. எல்லாரும் இதையே செய்தால் எப்படி? :-).

சதாவைக் காதலிக்க ரெமோ என்ற இன்னொரு பிளவாளுமையாகவும் உருவெடுக்கிறார். ஐஸ்-க்குள் உறைந்திருக்கும்போது ( அட.. இது நிஜ ஐஸ் கட்டிங்க) திடீரென அப்பாவி அம்பி அன்னியனாய் மாறி கட்டியைத் தூள்தூளாய் உடைத்துக்கொண்டு வெளியே வந்து பிரகாஷ்ராஜின் எலும்பை உடைத்து மாவுக்கட்டுப் போடவைப்பது எல்லாம் கூட கொஞ்ச அதிகம்தான்.

கடைசில் கோர்ட் அவரைச் சட்டப்படி தண்டிக்கமுடியாததால் குணப்படுத்தும்வரை பாதுகாப்பாய் வைத்திருக்கிறார்கள். இரண்டு வருடத்தில் குணமாகிவிட்டார் என்று நினைத்து வெளியே விடும்போது இதுபோல் இன்னொரு குற்றம் செய்த நபரை ஓடும் ரயிலில் கொன்று வீசுவதுடன் அல்லது வீசிக்கொல்வதுடன் படம் முடிகிறது.

ஏகப்பட்ட காசைக் கொட்டி எடுத்திருக்கிறார்கள். விவேக் காமெடி ரசிக்கும்படி இருக்கிறது. பிரகாஷ் ராஜ் வழக்கம்போல நன்றாய் நடித்திருக்கிறார். சதாவின் நடிப்பும் பரவாயில்லை. கதை மொத்தமே அரைப்பத்திதான். இந்தியன், ஜெண்டில்மேன், நான் சிவப்பு மனிதன் என இதே கதையை இன்னும் எத்தனைநாள்தான் புதுமொந்தையில் பழைய கள்ளாய்த் தருவார்களோ தெரியவில்லை.
| | |
Comments:
அடப்பாவிகளா...நான் இப்பத்தான் சந்திரமுகியே பார்த்திருக்கேன் . அதுக்குள்ளே அடுத்த ரவுண்டு வந்துட்டீங்களே..
 

தம்பி முத்து,

எங்களுக்கு இந்தப் படம் வர நாளாகும்.

இன்னும் கொஞ்சம் 'கள்ளூ' பழசாகட்டும்!

அதுதான் நல்லது:-)

என்றும் அன்புடன்,
துளசியக்கா

இதுதான் சுடச் சுட விமரிசனம்ன்றது!!!
 

ஒரு வார்த்தை சொல்லுங்க சார் :-) பிடித்திருந்ததா? பிடிக்க வில்லையா?
 

//ரஜினி அவ்வாறு பறந்து பறந்து அடிப்பதில் நியாயம் இருக்கிறது. எல்லாரும் இதையே செய்தால் எப்படி?//

அட! அதென்ன நியாயமுங்கோ?;-)

விக்ரம் வேற தேசியவிருது பற்றியெல்லாம் இந்தப்படத்த வச்சுக் கதைச்சிருக்கிறார். நீங்கள் இப்படிச் சொல்லிறியள். விக்ரம் மேலயும் தேசியவிருது மேலயும் இருந்த மதிப்புத்தான் பிளவுபட்டுப்போகுதுபோல.
 

/// ஒரு வார்த்தை சொல்லுங்க சார் :-) பிடித்திருந்ததா? பிடிக்க வில்லையா?//

பாலா,
ஒரு தடவை பார்க்கலாம், விக்ரமின் நடிப்பு அருமை. பிரகாஷ் ராஜும் கலக்கியிருக்கிறார். பிளேடு என ஒதுக்கவும், ஆகோ ஓகோவென புகழவும் மனம் வராத படம்.
 

///அட! அதென்ன நியாயமுங்கோ?;-)
விக்ரம் வேற தேசியவிருது பற்றியெல்லாம் இந்தப்படத்த வச்சுக் கதைச்சிருக்கிறார். நீங்கள் இப்படிச் சொல்லிறியள். விக்ரம் மேலயும் தேசியவிருது மேலயும் இருந்த மதிப்புத்தான் பிளவுபட்டுப்போகுதுபோல.///

வசந்தன்,
இந்த நியாயம் அப்படித்தான் :-)))).

விக்ரமின் நடிப்பு அருமை, மூன்று பாத்திரத்திலும். ஆனால் கதைதான் பழைய மாவை, திரும்பத் திரும்ப அரைப்பதுபோல் ஒரு தோற்றம் தருகிறது.
 

தாசு, துளசியக்கா,
உங்கள் கருத்துக்கு நன்றிகள்.
 

இந்த DID பற்றி ஆங்கிலபடங்களில் எடுத்து எடுத்து ஓய்ந்து விட்டார்கள்.
இப்போது நம்மூரில் கொஞ்ச நாள் ஓட்டுவார்கள் என்று நினைக்கிறேன். அதுவும் சந்திரமுகி போலவே அந்நியனும் வெற்றிபெற்று விட்டால், கேட்கவே வேண்டாம்.

இதற்கு தொடர்பில்லாமல், schizophrenia உள்ளவராக ஜானி டெப் நடித்த secret window பார்த்தீர்களா? pirates அடுத்து உடனே வந்த படம் என்று நினைக்கிறேன். கலக்கல் படம்.

---
இராமநாதன்
 

//ரஜினி அவ்வாறு பறந்து பறந்து அடிப்பதில் நியாயம் இருக்கிறது. எல்லாரும் இதையே செய்தால் எப்படி? :-).
//

அதானே ரஜினிக்கு பேடன்ட் செய்ததையெல்லாம் மற்றவர்கள் பிடுங்கிவிட்டால் அடுத்த படத்திற்கு ரஜினி என்ன செய்வார்...

ஏற்கனவே ரஜினி பஞ்ச் வசனம் பேசினால் விஜய் மாதிரி ரஜினி பஞ்ச் வசனம் பேசுகிறார் என சொல்ல ஆரம்பித்துவிட்டனர்...

அடுத்த படத்தில் ரஜினி நூறு பேரை அடித்தால் விக்ரம் மாதிரி ரஜினி நூறு பேரை அடித்தார் என சொல்லுவார்கள்...

ம்.... நாடு போற போக்கு நல்லா இல்லை அவ்ளோதான்

//ஐஸ்-க்குள் உறைந்திருக்கும்போது ( அட.. இது நிஜ ஐஸ் கட்டிங்க) //
ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ குசும்பு
 

///இந்த DID பற்றி ஆங்கிலபடங்களில் எடுத்து எடுத்து ஓய்ந்து விட்டார்கள்.
இப்போது நம்மூரில் கொஞ்ச நாள் ஓட்டுவார்கள் என்று நினைக்கிறேன். அதுவும் சந்திரமுகி போலவே அந்நியனும் வெற்றிபெற்று விட்டால், கேட்கவே வேண்டாம்.

இதற்கு தொடர்பில்லாமல், schizophrenia உள்ளவராக ஜானி டெப் நடித்த secret window பார்த்தீர்களா? pirates அடுத்து உடனே வந்த படம் என்று நினைக்கிறேன். கலக்கல் படம்.
---
இராமநாதன்///

இராமநாதன்,
பிளவாளுமை இன்னும் கொஞ்ச நாள் தமிழ்நாட்டில் ஓடும்போலத்தான் தெரிகிறது. மக்கள் யாரும் அதுபோல ஆகாமல் இருந்தால் சரிதான். secret window படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை.
 

குழலி,
உங்கள் கருத்துக்கு நன்றிகள். ஐஸுக்குள் உறைந்திருக்கும்போது என்றால் நீங்கள் வேறென்ன நினைத்தீர்கள் :-).
 

//உறைந்திருக்கும்போது என்றால் நீங்கள் வேறென்ன நினைத்தீர்கள் :-).//

//ஐஸ்-க்குள் உறைந்திருக்கும்போது//
இத்தோடு நிறுத்தியிருந்தால் நேராகத்தான் யோசித்திருப்பேன்....

// ( அட.. இது நிஜ ஐஸ் கட்டிங்க) //

இதைப்பார்த்தவுடன் கோணல் புத்தி விழித்துக்கொண்டது...
 

///// ( அட.. இது நிஜ ஐஸ் கட்டிங்க) //

இதைப்பார்த்தவுடன் கோணல் புத்தி விழித்துக்கொண்டது...///

எழுதிய நோக்கமும் அதுதான் குழலி அப்படின்னு அங்க யாரு மூலையில் இருந்து சவுண்ட் கொடுக்குறது?.. பிச்சுப்புடுவேன் பிச்சு.
 

எங்க பாத்தாலும் திரைப்பட விமர்சனம், மெட்டி ஒலி விமர்சனம், திருவாசகத்துக்கான முன் விமர்சனம்னு என்னப்பா நடக்குது இங்க (இலவசமா விளம்பரம் செஞ்சுக்க பின்ன என்னன்னு எழுதறதாம்)
 

அட.. இது நிஜ ஐஸ் கட்டிங்க என்பதான இரட்டை அர்த்த வசனங்களை பேசி இளைஞர்களை கெடுக்கும் (இல்லன்னா எல்லாரும் ஒழுக்கசீலருங்கதான்) முத்துவின் வலைப்பூக்கள் போன்றவற்றை தணிக்கை செய்யவேண்டும் அல்லது தார் பூசுவோம் என்று பச்சோந்தி கட்சி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்
 

முகமூடி,
இது ரொம்ப அநியாயங்க. எனக்குத் தெரிந்தவரை ஐஸ் என்பதற்கு ஒரே ஒரு அர்த்தம்தான். இன்னொரு அர்த்தம் என்ன என்று நீங்களே சொல்லிவிடுங்கள் :-).
 

///(இலவசமா விளம்பரம் செஞ்சுக்க பின்ன என்னன்னு எழுதறதாம்)///

படம் நல்லாயிருக்கு, ஆகா ஓகோ அப்டின்னா அது விளம்பரம் மாதிரி இருக்கும். படம் இன்னொரு படத்தோட காப்பி, போர் அப்படின்னு யாராவது விளம்பரம் செய்வாங்களா?
 

// படம் இன்னொரு படத்தோட காப்பி, போர் அப்படின்னு யாராவது விளம்பரம் செய்வாங்களா? // ஹலோ.... "திருவாசகத்துக்கான முன் விமர்சனம" னு என்னோட பதிவ விளம்பரம் பண்ணிகிட்டேனே அத சொன்னேங்க... எல்லாத்தயும் ரெண்டு அர்த்தத்தோட பாக்குறதே இந்த வலை பதியரவங்களோட பொளப்பா போச்சி :)
 

எனக்குத் தெரிந்தவரை ஐஸ் என்பதற்கு ஒரே ஒரு அர்த்தம்தான். அப்படியே உங்க வயசும் 13ன்னு ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டுடுங்க
 

13 வயசா? நினைச்சுப் பார்த்தா நல்லாத்தான் இருக்கு. உண்மையில் எனக்குப் பதிமூணு வயசுதான், 15 வருஷத்துக்கு முன்னாடி :-).
 

Muthu, Really have you seen this movie in kino or in Papageihaus? Summa theaterla parthannu sollavenam.....

hehehe.....

virumandi from Bangalore
 

///Muthu, Really have you seen this movie in kino or in Papageihaus? Summa theaterla parthannu sollavenam.....
hehehe.....
virumandi from Bangalore///

பெங்களூர் விருவிருவிருமாண்டி,
சொன்னா நம்புங்க.. இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டுத்தான் எழுதினேன், எழுதிய நேரத்தைப் பாருங்கள் தெரியும். இதை எழுதி ரெண்டு நாள் கழித்து "கிளிவீட்டில்" ( அதாங்க.. Papageihaus) பார்த்தேன் :-).

ஆமா.. நீங்க இங்க தியேட்டருக்குத் தமிழ்படத்துக்குப் போயிருக்கீங்களா ?
 

முத்து, "அன்நியன்", "சந்திரமுகி" கதைதான் என்று எப்படிச் சொல்லுகின்றீர்கள். அன்நியன் "முதல்வன்" கதையைத் தழுவியது என்று வேண்டுமானால் கூறலாம்.
என் தளத்திலும் என் பார்வையை எழுதியிருக்கின்றேன் பாருங்கள். விக்ரத்தின் நடிப்பு ஒன்றும் கூறவில்லையே தாங்கள்.
மற்றப்படி சங்கரின் படத்தில் அம்சன்குமாரின் தரத்தைத் தேடாமல் பொழுதுபோக்கிற்காகப் பார்பதென்றால் பார்க்கலாம் என்பது என் கருத்து
 

கறுப்பி,
சந்திரமுகியிலும் இங்கும் பிளவாளுமையை வைத்துத்தான் கதை ஆரம்பிக்கிறது என்பதைச் சொல்ல வந்தேன். முதல்வனை விட இந்தியன் இன்னும் பொருந்துமெனத் தோன்றுகிறது.

சங்கரின் அருமையான நடிப்பைப் பற்றி நான் சொல்லாமலே விட்டதை இப்போதுதான் கவனிக்கிறேன்.
 

blore'la indha padam modha vaaram 100 naal.... ;) appuram oru ee, kaakka kaanom..... naan indha padatha paathu modhalla bayandhe poyitten.... cud vibe with ambi's feelings 100%.... remo is sweet but not found in real life.... padam paravayillai!
 

"I just came across your blog about online pet auctionand wanted to drop you a note telling you how impressed I was with the information you have posted here. I also have a web site & blog about **keyword** online pet auction so I know I'm talking about when I say your site is top-notch! Keep up the great work, you are providing a great resource on the Internet here!
 

"I just came across your blog about ebay templateand wanted to drop you a note telling you how impressed I was with the information you have posted here. I also have a web site & blog about **keyword** ebay template so I know I'm talking about when I say your site is top-notch! Keep up the great work, you are providing a great resource on the Internet here!
 

Great blog - you have just been bookmarked. Will let my visitors to my site know all about it.

I have a ebay acitons misspelled auction search site. It pretty much is a search engine that allows you to search eBay for misspelled auctions and allows you to find some great bargains.

Come and check it out if you get time :-)
eBay misspelled auctions
 

This comment has been removed by a blog administrator.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com