<$BlogRSDUrl$>

Thursday, June 02, 2005

கலைஞர் கருணாநிதிக்கு நோபல் பரிசு ??

மிகச் சுவாரசியமான விதயங்கள் அவ்வப்போது ஆங்காங்கே தென்படுவதுண்டு. தினகரன் - இன்று ஒரு தகவலில் வந்திருக்கும் கட்டுரை இது. படித்துப் பயன் பெருக :-)).
| | |
Comments:
:-) :-)

முதல் பின்னூட்டம் என்னுடையதாய் இருக்கட்டும்.
 

பின்னே இந்த வயசிலேயும் சளைக்காம சிக்ஸர் அடிக்கிறாரு அதுக்காச்சி ஏதாவது விருது கொடுக்கனும். ஆனா நோபல் பரிசு (டூ மச்)?
 

நாய்ச் செயகாந்தனுக்கு ஞானபீடம் கிடைக்கும்போது., தலைவருக்கு நோபல் கிடைக்கக்கூடாதா?., வேற யாரும் காசு கொடுத்து வாங்கிறப் போறாங்க!. சீக்கிரம் நீவாங்கிக்க தல!!
 

அல்வாசிட்டி விஜய் சொல்வது போல....
நோபல் பரிசு த்ரீ மச்....
ஆனால் மருத்துவரும் திருமாவும் வளர்க்க நினைக்கும் தமிழை கலைஞர் கட்டிகாத்து வந்திருக்கிறார். (தாயநிதியையும் கலாநிதியையும் தவிர்த்து)...... அதனால் வேண்டுமானால் ஒரு விருது தரலாம்..
 

அரசியல் தவிர்த்து பார்தால் , கலைஞருக்கு நிச்சயம் தரலாம்...

அரசியலும் சேர்த்து பார்த்தால் 'நோ'பல் பரிசு வேனும்னா தரலாம்.. ! சரியா முத்து??
வீ. எம்
 

நோபல் பரிசு கொடுத்தால் அது தமிழுக்குக் கிடைத்த பெருமையாகும்.
கண்டிப்பாக அவ்விருதுக்கு கலைஞர் பொருத்தமானவரே என்பது எனது கருத்து!
 

இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், சமாதானம், இலக்கியம் என்ற பிரிவுகளில் நோபல் கொடுக்கப்படுகிறது. இதில் கருணாநிதி எந்த பிரிவில் கருணாநிதியை சிபாரிக்க வேண்டும் என்று அந்த கடிதவாதி தெரிவிக்கவில்லை... முதல் நான்கு வகையும் காலி. சமாதானத்துக்கு கொடுக்க ஜெயலலிதா ஒத்துக்க மாட்டார்(அதிமுக தமிழ்நாட்டுக்கு நல்லதுன்னு எது செய்தாலும் எதிர்க்கிறார் - அறிக்கை) இலக்கியத்துக்கு கொடுக்கலாம்னு பார்த்தால் ஜெயமோகன் ஒத்துக்க மாட்டார்... சரி டாக்டர் கருணாநிதியாச்சே, அதனால மருத்துவத்துல பரிந்துரைக்கலாம்.... அப்படியே இவங்களுக்கும் விருது கொடுக்கலாம்...துரைமுருகன், வைகோ - சிறந்த நடிப்புக்கான ஆஸ்கர் ; நெப்போலியன் - சிறந்த பின்பாட்டுக்கான கிராமி

நமது எம்.ஜி.ஆர் பத்திரிக்கைல பரிந்துரை பட்டியல்
ஜெயலலிதா - நோபல்
ஜெயலலிதா, எஸ்.எஸ்.சந்திரன், ராதாரவி, எஸ்.வி.சேகர் - ஆஸ்கர்
ஜெயலலிதா, எம்.பி, எம்.எல்.ஏ - கிராமி
 

கலைஞர் நோபல் பரிசுக்கு தகுதி ஆனவரே என்று ஆணித் தரமாக வாதிட இங்கு வரவில்லை.
ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் அவர் நடந்த வந்த பாதைகளில், எவ்வளவு போட்டிகள், ரணங்கள், தோல்விகள், போராட்டங்கள் இதுப் போல எத்தனை? எத்தனை? இந்த தள்ளாத வயதிலும் அவருடைய உழைப்பிற்கு ஈடு உண்டா? அரசியல் பணி, இலக்கியப் பணி, சமுதாயப் பணி, எழுத்து துறை, கலையிலும் பங்கு இப்படி பல்வேறு முகத்தை இந்திய வரலாற்றில் நீங்கள் பார்த்தது உண்டா? அரசியில் ரீதியாக சில தவறுகள் செய்து இருக்கலாம், குடும்ப அரசியல் செய்து இருக்கலாம்? ஆனால் இவற்றிற்கு அப்பாற்பட்டு அவர் அடைந்த சாதனைகள் எத்தனை எத்தனை? எவ்வளவுப் பெரிய தோல்வியில் இருந்தும் அவரைப் போல மீண்டு வரத்தான் முடியுமா? பெரியாருக்கு பிறகு, அண்ணாவிற்கு பிறகு, கலைஞருக்கு பிறகு இந்த மக்களை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் தகுதி யாருக்கு இருக்கிறது? தமிழக வரலாற்றில், ஏன் இந்திய வரலாற்றில் கலைஞர் ஓர் சகாப்தம்.
He is a GREAT LEGEND in Dravedian Culture!!! Nobody can deny that!!!

நன்றி
மயிலாடுதுறை சிவா...
 

முத்துத்தம்பி,
இது அவருக்குப் பொறந்தநாள் பரிசா?

சரி சரி. வயசாச்சு! குடுத்துருங்க!!!!

போயிட்டுப் போகுது:-)
 

விஜய், அப்படிப்போடு, கணேஷ், வீ.எம், அனானிமஸ், கனல், முகமூடி, சிவா, அல்வாசிட்டி சம்மி, துளசியக்கா அனைவரின் கருத்துக்கும் நன்றி.
 

///அரசியலும் சேர்த்து பார்த்தால் 'நோ'பல் பரிசு வேனும்னா தரலாம்.. ! சரியா முத்து??
வீ. எம்///

வீ.எம்,,
´நோ´கமெண்ட்ஸ் :-))).
 

அப்படிப் பார்த்தால் நாட்டில் ஒவ்வொரு குடும்பத் தலைவனுக்கும் தங்கள் குடும்பம் சிறப்பாக வாழ வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுவதற்காக நோபல் பரிசு (அதுக்கெல்லாம் கூடவா கொடுப்பார்கள்?!) கொடுக்க வேண்டி வரும். எதுவாக இருப்பினும் இந்த ஆண்டின் தலை சிறந்த ஜோக் இது என்று கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும் தினகரனை!

ஆனால் பாருங்கள் அரசியலில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் குடும்பத்தை கட்டிக் காப்பதற்காக இப்படி ஒரு பரிசு என்றால் இப்போது வேறு ஒருவரும் அதற்கு போட்டிக்கு வந்து கொண்டிருக்கிறார்.
 

""அரசியல் தவிர்த்து பார்தால், கலைஞருக்கு தரலாம்""

""இந்த ஆண்டின் தலை சிறந்த ஜோக் இது""
 

இங்கு நான் கண்ட பெரும்பாலான பின்னூட்டங்களிலிருந்து நான் அறிவது, தமிழர்கள் கிணற்றுத்தவளைகள் என்பதே. கருணா நிதியின் ஆட்சியால் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடியதோ?. அரசியலில் அவர் திமுக என்ற தனியார் நிறுவனத்தின் தலைவர் அவ்வளவே!. அவரது நூல் எதையும் நான் படித்திராததால் அதைப்பற்றி கருத்துக் கூற விரும்பவில்லை.
 

நல்ல வேளை ஆஸ்கார் விருது கொடுக்க வேண்டும் என்று சொல்லாமல் இருந்தார்களே, அது வரைக்கும் மகிழ்ச்சி. :-)
 

//நல்ல வேளை ஆஸ்கார் விருது கொடுக்க வேண்டும் என்று சொல்லாமல் இருந்தார்களே, அது வரைக்கும் மகிழ்ச்சி. :-)//

என்ன இப்படி சொல்லீட்டீங்க சுரேஷ்... ஆஸ்கார் விருதுக்கு முழு தகுதி வாய்ந்த ஒரே அரசியல் தலைவர் அவர் தான் தெரியாதா?!
 

மாயவரத்தான், குமரேஸ், வெற்றி, சுரேஷ்,
உங்களின் கருத்துக்கு நன்றி.
 

//நல்ல வேளை ஆஸ்கார் விருது கொடுக்க வேண்டும் என்று சொல்லாமல் இருந்தார்களே, அது வரைக்கும் மகிழ்ச்சி. :-)//

என்ன இப்படி சொல்லீட்டீங்க சுரேஷ்... ஆஸ்கார் விருதுக்கு முழு தகுதி வாய்ந்த ஒரே அரசியல் தலைவர் அவர் தான் தெரியாதா?!////

சுரேஷ், மாயவரத்தான்,
நோ கமெண்ட்ஸ். :-))
 

நோபல் பரிசு எதற்க்கு??

ஐந்தாவதே படித்து, திருட்டு ரயில் ஏறி சென்னை வரும்போது பழம் திருடி தின்றவருக்கு இன்று ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து! அதற்க்காகவா??
 

இவர்களைத் திருத்தவே முடியாது முத்து அவர்களே. இப்படி எல்லாம் நடக்கும் என்று முன்பே தெரிந்து இருந்தால் நோபல்பரிசு தொன்றியே இருக்காது. ஜெயலலிதாவின் அபத்தம் உச்சகட்டம்.
 

விடாதுகருப்பு அவர்களே,
இவர்களுக்குக் கிடைக்காது என்பது அவர்களுக்கும் நன்றாகவே தெரியும், எல்லாம் ஒரு ஸ்டண்டுதான் :-).
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com