<$BlogRSDUrl$>

Wednesday, June 08, 2005

பையனுக்குக் காது குத்தினா தப்பா?

குழந்தை நடக்க ஆரம்பிக்கும் முன்பே அதற்குக் காதுகுத்தி கடுக்கன் போட்டுப் பல நூற்றாண்டாய் அழகு பார்த்துக்கொண்டிருக்கிறோம். இப்படி ஒருத்தர் தன்னோட 2 வயது பையனுக்குக் காதுகுத்த ஆசைப்பட்டுச் செய்ய அது பலரின் விமர்சனதுக்குள்ளாகியிருக்கிறது. குழந்தை அனுமதியில்லாமல் அதற்கு காதுகுத்துவது நியாயமானதல்ல என்று நிறையப் பேர் விமர்சிக்கிறார்களாம். இது நடந்தது பிரபல கால்பந்தாட்ட வீரர் பெக்காமிற்குத்தான்( அடடே.. Bend it Like Beckham அப்படின்னு ஒரு படம்கூட வந்ததே).

ஒருவாரத்துக்கு முன்னால் தலைமுடியை பின்னால் இழுத்துக் கட்டிப் பையன் காதில் இருக்கும் கடுக்கன் தெரியுமாறு பத்திரிக்கையில் வந்த நிழற்படம்தான் இவற்றுக்கெல்லாம் காரணமாய் இருந்திருக்கிறது. இதுபோல் காதுகுத்துவது சரியா தவறா என இணையத்தில் வாக்கெடுப்புக்கூட நடக்கிறது, இதுவரை ஆறாயிரம்பேருக்கு மேல் ஓட்டும் போட்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

உலகத்துல ஒருசில இடத்துல பையன், பொண்ணுக்குக் கல்யாணம் முடிக்கக்கூட அவங்க சம்மதத்தைக் கேட்குறதில்லை, இதைப்போய் ஒரு பெரிய விஷயமாய் பேசுறாங்களே அப்படின்னு நீங்க நினைக்கலாம். இருந்தாலும் குழந்தைக்கு அதோட சம்மதம் இல்லாம காதுகுத்துறது தப்புத்தானோன்னு சந்தேகம் வர ஆரம்பிக்குது. அது போகட்டும், நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு மறக்காம ஒரு வரி சொல்லுங்க.

சுட்டி 1
சுட்டி 2
| | |
Comments:
'
 

தம்பி முத்து,

இந்தக் காது குத்தற விஷயமா எனக்கு ஒண்ணு நினைவு வருது.

என் மகளுக்கு அஞ்சு மாசக் குழந்தையா இருக்கறப்ப, மொட்டை அடிச்சுக் காதுகுத்துற
விழாவை நடத்தினோம். குழந்தைக்கு வலிக்குமேன்னு வலியை மரக்க வைக்கற மருந்தையும்
வாங்கி வச்சுக்கிட்டோம்.

ஆச்சு மொட்டை! அப்புறம் குளிப்பாட்டிட்டுக் காது குத்தணும். தமிழ் நட்டுலே இருந்து வந்த ஒரு
ஆசாரிதான் காது குத்தப்போறவர். குளிக்கவச்சு, காதுலே மருந்தையும்
தடவியாச்சு. அப்புறமும் காது குத்தச் சொல்ல குழந்தை ஒரேதா அழுதா!

ரெண்டு நாளைக்கப்புறம், யதேச்சையா அந்த மருந்து ட்யூபைப் பார்த்தப்பதான் தெரிஞ்சது,சுமார்
30 நிமிஷத்துக்கு முன்னே மருந்தைத் தடவி இருக்கணுமுன்னு!!!

இது நடந்து பல வருஷங்களுக்குப் பிறகு, அந்த வீடியோவைப் பார்த்துக்கிட்டு இருக்கேன் ஒருநாள்.
அப்பத்தான் கவனிக்கறேன், குழந்தை வலி தாங்காது கையை மூடி மூடித்திறக்குது, விரலெல்லாம் நடுங்குது.

எனக்கு மனசுக்குள்ளெ எப்படியோ ஆயிருச்சு. ச்சீ. என்ன மாதிரி அம்மா நானு, குழந்தை வலியைப்
பார்க்காம இப்படி சாஸ்த்திரம் சம்பிரதாயம்னு இருந்திருக்கேனே, ராட்சசின்னு என்னையே சபிச்சுக்கிட்டேன்.
படுபாவி, இப்படிப் பண்ணிட்டேனேன்னு மனசு வெம்பிருச்சு! சித்திரவதை செஞ்சிருக்கேன்.

அப்ப என் மகளுக்குச் சொன்னது, 'உன் பிள்ளைங்களுக்கு இது வேணாம். அதுங்க எப்ப ஆசைப்படுதோ
அப்பக் காது குத்து'ன்னு!

என்றும் அன்புடன்,
அக்கா
 

சின்ன வயசுல நமக்கு காது குத்துறதை பழிவாங்க வாழ்க்கை பூரா மத்தவங்களுக்கு காது குத்துறோமே? அப்புறம் என்ன?

பொண் கொழந்தைகளுக்கு காது குத்தினா அவங்க பின்னாடி நகைகள் மாட்டி அழகு பார்த்துகிடுவாங்க. பசங்களும் காது குத்தி கடுக்கண் போட்டுகிடுவாங்க(இப்போ இதானே பேஷண்). சின்ன வயசுல பெற்றோருங்க காது குத்தாட்டி பிற்காலத்துல அதுவா குத்திக்கிட போகுது. அதுக்கு தான் பேரண்ட்ஸ் நாங்க காது குத்துனதா இருக்கட்டுமுன்னு குழந்தைகள் அனுமதி இல்லாம முந்திக்கிறாங்க.
 

எனது குழந்தைகளுக்கு வலிக்குமே என்ற ஒரே காரணத்துக்காக பிறந்த 3 மாதங்களுக்குள் காது குத்திவிட்டேன்(சதை இளசாக இருக்கும் அதனால் எளிதாக இருக்கும் வலி ரொம்ப தெரியாது). அதுவும் இங்கே லண்டனில் குத்திய போது ஒரு ஸடேப்பிலர் கண் (Gun) மாதிரி வைத்துக் கொண்டு ஒரு நொடியில் குத்தி விட்டார்கள். குழந்தை லேசாக அழுதது அப்புறம் உடனே சரியாகிவிட்டது.

நம்மூரில் பெண்குழந்தைகளுக்கு காது குத்தாமல் முடியாது. பேஷனுக்குககாக குத்துவதைத் தான் மனது ஒத்துக்கொள்ள மாட்டேன்கிறது. அது அவர்கள் எடுக்கவேண்டிய முடிவு.
 

Muthu,

I think we could make better judgement if we also consider the medical benefits of such events. I have read that piercing at some spots of the ear help cure asthma.

I strongly believe that many ceremonies that we follow have some strong scientific reasoning which we are not able to reason out now but were none the less created for some good reason and coated with superstition to enforce people to follow.

-Suni
 

துளசியக்கா,
நீங்கள் சொன்ன நிகழ்ச்சி நெஞ்சைத் தொட்டுவிட்டது.
 

//// சின்ன வயசுல நமக்கு காது குத்துறதை பழிவாங்க வாழ்க்கை பூரா மத்தவங்களுக்கு காது குத்துறோமே? அப்புறம் என்ன?///
விஜய்,
சின்ன வயசில் குழந்தைங்களுக்கு நாம காதுகுத்தறோம், வளர்ந்தபிறகு குழந்தைகள் நமக்குக் காதுகுத்தும். என்ன ஒரு சுவாரசியம் பாருங்க, நாமா காதுகுத்துறப்போ குழந்தைங்களுக்கு அறியாத வயசு, குழந்தைங்க நமக்குக் காதுகுத்துறப்போ நமக்கு அறியுற வயசுதான்னாலும், நாம அறியாத மாதிரி நமக்குக் காதுகுதுத்தும் வயசு குழந்தைங்களுக்கு. எல்லாம் கிவ் அண்ட் டேக் பாலிஸ்தான். :-)))).
 

//நம்மூரில் பெண்குழந்தைகளுக்கு காது குத்தாமல் முடியாது. பேஷனுக்குககாக குத்துவதைத் தான் மனது ஒத்துக்கொள்ள மாட்டேன்கிறது. அது அவர்கள் எடுக்கவேண்டிய முடிவு.///
டுபுக்கு,
இன்னும் கொஞ்ச காலத்துக்குத்தான் நம்மால் பெண்குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வளர்க்க முடியும். அதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தெரிய ஆரம்பித்துவிட்டன.
 

///காது குத்த வேண்டுமா?
சடங்கு/சம்பிரயாதாயதிற்காக செய்யவேண்டுமா?
இது தனி மனித விருப்பம்.///

கணேசன்,
தனிமனித விருப்பம் என்பதாய்க் கொள்ளப்பட்டால் அறியாத குழந்தைகளுக்கு காதுகுத்துவது நமது விருப்பங்களை அவர்களின் மீது திணிப்பது என்பது போல தோற்றமளிக்கும் சாத்தியம் உண்டு.
 

///Muthu,

I think we could make better judgement if we also consider the medical benefits of such events. I have read that piercing at some spots of the ear help cure asthma.

I strongly believe that many ceremonies that we follow have some strong scientific reasoning which we are not able to reason out now but were none the less created for some good reason and coated with superstition to enforce people to follow.

-Suni///

Suni,
காது குத்துவதால் அறிவு வளர்ச்சி அதிகரிக்கிறது என்பதுபோல கேள்விப்பட்டிருக்கிறேன். அதை முழுவதும் மறுக்கவோ, முழுவதும் ஏற்றுக்கொள்ளவோ இன்னும் சரியாக அறிவியல்பூர்வ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டால்தான் தெரியவரும்.
 

Hey, you have a great blog here! I'm definitely going to bookmark you!

I have a paul sorvino asthma site/blog. It pretty much covers paul sorvino asthma related stuff.

Come and check it out if you get time :-)

Thanks
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com