Friday, June 03, 2005
உளவியல் - Role Confusion
உலகத்தில் நடக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் முக்கியக் காரணம் ஒன்றே ஒன்றுதான். உளவியலில் அதன் பெயர் " Role Confusion".
ஒவ்வொரு மனிதரும் உலகில் தினம்தினம் நடக்கும் நாடகத்தில் நடிகராய் நடிக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒரு பாத்திரம் உண்டு. சில சமயம் ஒன்றுக்கு மேற்பட்ட வேசம் கட்டுவதும் உண்டு. வேடம் கட்டுவதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லை. பிரச்சினை ஆரம்பிக்கும் இடம் வேடத்தைத் தீர்மானிக்கும் நபர்கள்தாம். பெரும்பாலும் வேடத்தை விருப்பப்பட்டு நாமே தேர்வு செய்கிறோம், அது அவரின் உரிமை. ஆனால், நம்மில் பெரும்பாலோர் அடுத்தவரின் வேடத்தின்மீது ந்மது கவனத்தைத் திருப்பும்போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது.
ஒருவர் போட்டிருக்கும் வேடத்தின் தன்மை மற்றொருவருக்குப் பிடிக்காததால் வேடத்தை மாற்ற வேண்டும் என்று உடன் நடிப்பவர் அடம் பிடிக்கிறார். அதற்கு இரண்டு பேர் ஆமாம் போடுகிறார்கள். இன்னும் ரெண்டு பேர் எதிர்த்து நிற்கிறார்கள். இப்போது இருவரின் வேடத்தை மட்டும்தான் கணக்கில் எடுத்திருக்கிறோம். ஒரு பத்துப் பேரைக் கணக்கில் எடுத்தால் பெர்முடேஷன், காம்பினேஷன் என கணிதத்தினை பயன்படுத்தி கணக்கிட்டால் வரும் எண்ணிக்கையை விட பிரச்சினை பல மடங்காய் மாறியிருக்கும்.
வேடத்தின் தோற்றத்துக்கே இத்தனை பிரச்சினை வரும்போது ஒவ்வொரு கதாபாத்திரமும் எப்போது எப்படி நடிக்கவேண்டும், என்னவாய் நடிக்கவேண்டும் என்பதை அனைவரும் அவர்களுக்குள் தனித்தனியாய்த் தீர்மானிக்கும்போது பிரச்சினைகளின் எண்ணிக்கை உலகமக்கள்தொகையை விடப் பலமடங்கு அதிகமாகியிருக்கும்.
உலகில் தினம்தினம், நொடிக்கு நொடி எல்லா மூலையிலும் நடக்கும் பிரச்சினைகள் இந்தக் கதாபாத்திரக் குழப்பத்தால் வந்தவையே, ஆயிரம் வருஷத்துக்கு முன்னால் இது இருந்தது. இன்றைக்கும் இருக்கிறது. இன்னும் பத்தாயிரம் வருஷம் கழித்தும் இது இருக்கும்.
அடுத்தவரின் பாத்திரம் நம்மைப் பாதிக்காமல் இருந்தபோதிலும் தான் விரும்பியவாறு மாற்றச் சொல்லி அடம்பிடிக்கும் அக்கிரமக்காரர்கள் உலகின் அழிவுகளுக்கு ஆரம்பப்புள்ளியாய் இருப்பார்கள். உலகின் ஒவ்வொரு மனிதனின் மனநிம்மதிக்கும், அமைதியான வாழ்வுக்கும் இடையூறுகளாய் இருப்பவர்களும் இவர்களே. அடுத்தவரின் பாத்திரத்தைத் தீர்மானிக்கும் உரிமை தனக்கிருப்பதாய் மூர்க்கத்தனமாய், கண்ணை மூடிக்கொண்டு இவர்கள் செய்யும் செயல்கள்தாம் நாம் தினம் தினம் பார்ப்பது, படிப்பது, கேட்பது, சில சமயம் நாம் செய்வதும்.
நமக்குத் தெரிந்த, அறிந்த, செய்த, புரிந்த பிரச்சினைகளை இப்போது கொஞ்சம் ஒரு கணம் நமக்குள்ளேயே எண்ணிப்பார்த்து இந்த உளவியல் தத்துவத்தை நாமாகவே மதிப்பீடு செய்துகொள்ளலாம்.
| | |

Comments:
Post a Comment