<$BlogRSDUrl$>

Thursday, June 02, 2005

ஹாலிவுட்- கல்லா கட்டும் இந்திய சினிமா

ஹாலிவுட் திரைப்படங்களின் அவுட் சோர்ஸிங் வேலைகள் இந்தியா பக்கம் வர ஆரம்பித்துள்ளன. குறைந்த சம்பளம், திறமையான ஆட்கள் போன்ற பல சாதகமான அம்சங்களால் பல துறைகளின் வேலைகள் வளர்ந்த நாடுகளிலிருந்து அடுத்த நாடுகளுக்கு அனுப்பப்படுவது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த அவுட் சோர்ஸிங் வேலைகளுக்குக் கவர்ச்சிகரமான இடமாய் இந்தியா இருந்து வருகிறது. இந்த வகையில் இப்போது ஹாலிவுட் சினிமா சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப வேலைகள் இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு வரத் துவங்கியுள்ளன.

இந்தியப் பாரம்பரிய கதாபாத்திரங்களின் அனிமேசன் படங்களும் ஹாலிவுட்டின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பி இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் பல பில்லியன் டாலர் வருமானம் இவ்வகையில் வரும் சாத்தியம் பிரகாசமாய் இருப்பதாய்க் கணிக்கப்பட்டுள்ளது.

ஆர்வமுடையவர்களுக்காக
ரெடீஃப்
தினமலர்
சுட்டி3
சுட்டி4
| | |
Comments:
தலைப்பு புரியலையே!! கல்லா அல்லது கலை ஆ முத்து
 

போஸ்கோ,
கல்லாதான் அது. இது உனக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. கல்லா-கல்லாப் பெட்டி :-).
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com