<$BlogRSDUrl$>

Monday, June 13, 2005

இலங்கைக்கு இந்தியாவின் ராணுவ உதவி

வலைப்பதிவுகளில் சில சமயம் முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்படுவது கொஞ்சம் மகிழ்ச்சியைத் தருகிறது. முகமூடி தனது வலைப்பதிவில் இந்தியா இலங்கை அரசுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தனது கருத்தையும், அதற்கான காரணங்களையும் தெரிவித்திருந்தார்.

இந்தியா இலங்கைக்கு ஆக்கப்பூர்வமான உதவி செய்யவேண்டும்(இலங்கை அரசுக்கு மட்டுமல்ல). மக்களைக் கொன்று குவிக்கும் ஆயுதங்களை எந்த நாடு யாருக்குக் கொடுத்தாலும் அது பெரும் கொடுஞ்செயலேயாகும்.

தனது நாட்டின் மக்கள் அனைவரையும் சமமாய்ப் பார்க்கத் தெரியாத ஒரு அரசாங்கத்தின் குரூரமுகம் எவ்வாறு இருக்கும் என்பதற்கு இலங்கையை விட சிறந்த உதாரணத்தைத் தேடித்தான் பார்க்கவேண்டும். இலங்கை அரசின் மனதை இந்தியா குளிர்விக்க செய்த உதவிகள் பலவற்றுக்கு இலங்கை அரசு செய்த கைம்மாறுகள் சின்னக்குழந்தைக்குக்கூடத் தெரியும்.

இந்தியாவுக்கு உதவும் வாய்ப்புக்கிடைத்தபோதெல்லாம் இலங்கை அரசு எதிர்நிலையையே எடுத்திருக்கிறது. இதற்குத் தொடர்ந்து பல உதாரணங்களைக் கூறமுடியும். 1971 போரின்போது நடுநிலை வகிப்பதாய்க் கூறிக்கொண்டே பாகிஸ்தானியப் போர் விமானங்கள் எரிபொருள் நிரப்ப வசதி செய்துகொடுத்ததில் இருந்து, இந்தியா ஒவ்வொரு நாளைக்கும் பல கோடிரூபாய் செலவுசெய்து அனுப்பிய அமைதிப்படையைத் திறம்படக் காய்நகர்த்தி இந்தியாவை, ஈழத்தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் எதிரானவர்கள் என்பதுபோல மாற்றியது, சுனாமி நிவாரணம் என்ற பெயரில் இலங்கையில் அமெரிக்க ராணுவ தளம் அமைக்க முயற்சிநடப்பதுபோல் பலவற்றைச் சொல்ல இயலும். இந்திய உதவியால் உருவான வங்கதேசத்தைக் கடைசியாய் அங்கீகரித்த நாடுகளில் இலங்கை முதலிடம் வகித்தது என்பதும் இங்கு சொல்லத் தேவையில்லை. இந்தியா கச்சுத் தீவை இலங்கைக் கொடுத்தது, அதற்குக் கைம்மாறாய் நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்களை இதுவரை இலங்கை அரசு கொன்றிருக்கிறது(இன்னும் கொல்லும்).

இது மிக எளிய கணக்குத்தான். சின்னக் குழந்தைகளுக்குக்கூடப் புரியக்கூடியதுதான். நேற்று, இன்று, நாளை என என்றுமே இலங்கை அரசு இந்தியாவின் நலனுக்கு எதிரானதாக மட்டுமே இருக்கும். ஏனென்றால் இலங்கை அரசோ அதன் பெரும்பான்மை மக்களோ (இரண்டும் வேறு வேறானதா ? ) இன்றைய இந்தியாவுடன் எந்த விதத்திலும் தொடர்புடையவர்களாய் இல்லை. ஆனால் இலங்கையின சிறுபான்மைத் தமிழ்மக்கள் இந்தியாவுடன் நீண்டகாலத் தொடர்பினைக் கலாச்சார ரீதியாக, மொழி ரீதியாகக் கொண்டிருப்பவர்கள். ஈழத்தமிழர்களுக்கும், இந்திய அரசுக்குமிடையில் நிகழ்ந்த பெரிய பெரிய தவறுகள் இலங்கை அரசின் ராசதந்திரத்துக்கு மிகப் பெரிய உதாரணம். ஒரே கல்லில் பல மாங்காய் என்பதாய் அவ்வரசு நகர்த்திய காய் நகர்த்தல் தந்திரத்துக்குப் பலியானது இந்தியா மட்டுமல்ல, ஈழத்தமிழர்களும்தான். கொஞ்சம் நிதானமாய்ச் சிந்திக்கும் எவராலும் இதை எளிதாய்ப் புரிந்துகொள்ள இயலும். இவ்வளவு ஏன்?, அமைதிப்படை இலங்கையில் இருந்த காலத்திலேயே அன்றைய இலங்கை அதிபர் இதை வெளிப்படையாய்ச் சிரித்துக்கொண்டே சொன்னார்தானே.

இந்தியா இலங்கை அரசுக்கு ராணுவ உதவி செய்தாலும் செய்யாவிட்டாலும், நாளை இந்தியாவுக்கென ஒரு இக்கட்டான நிலை வந்தால் இலங்கை அரசு எதிர்நிலையையே எடுக்கும் என்பது கடந்த காலத்தைக் கொஞ்சம் திருப்பிப் பார்த்த எவருக்கும் புரியும்.
| | |
Comments:
ஒரு முத்துவுக்கும்ம், தங்கமணிக்கும் தெரிந்த இந்த விவரங்கள் இந்திய கொல்கை (கொள்கையல்ல) வடிப்பாளர்களுக்கு தெரியாதென நினைக்கிறீர்களா? அப்படி இருந்தும் அவர்கள் தமிழர்களுக்கு எதிரான முடிவுகளை எடுப்பது ஏன்? அமைதிப்படையை தமிழர்களுக்கு எதிரிகளாக்கி யார் கொல்லப்பட்டாலும் லாபமடையும் தந்திரத்தை பிரேமதாசா யாரிடமிருந்து கற்றுக்கொண்டார் என்று நினைக்கிறீர்கள்? அதை அந்நாட்டு பத்திரிக்கைகளே எழுதியுள்ளன.

இந்தக்கேள்விகளும் விடையும் தான் முக்கியமானவை முத்து.
 

தங்கமணி,
பிரேமதாசா யாரிடம் கற்றுக் கொண்டார்?. இதைத் தெரிந்தும் இந்தியா ஏன் வலையில் விழுகிறது?. இலங்கை அரசு இந்தியாவுக்குச் சாதகமாக இல்லையெனத் தெரிந்தும் வீணே உதவுவது ஏன்?. புரியவே இல்லை.

தமிழீழம் உருவாவது தனித்தமிழகக் கோரிக்கையை ஏற்படுத்தும் என யாரும் நம்புவார்கள் என நான் நினைக்கவில்லை. வங்கதேசம் உருவானதால் மேற்குவங்கம் தனியாகிவிட்டதா என்ன?.
 

சரியான சமயத்தில் சில வினாக்களை எழுப்பியுள்ளீர்கள். இலங்கை துரோகம் செய்தாலும்/செய்யும் என்றாலும் ஏன் இந்தியா உதவி செய்கிறது என்பதைத்தான் நான் விளக்க வந்தேன். என்னுடைய அடுத்த பதிவில் இதற்கு விடை காண முயற்சிக்கிறேன்.. வேலை பளுவால் எழுத நேரமின்றி கிடக்கிறேன். இன்று இரவுக்குள் பதிந்துவிட வேண்டும் என்பதுதான் என் ஆவல்... அடுத்தவரின் எண்ணத்தையும் - தன்னளவில் சரியோ தப்போ - அதற்கான அவரின் காரணத்தையும் ஆரோக்கியமாக எடுத்துக்கொண்டதற்கு நன்றி
 

நன்றி முகமூடி. நான் நினைப்பதை நான் சொல்கிறேன். நீங்கள் சொல்வதை நீங்கள் சொல்கிறீர்கள். இன்னொருவர் எண்ணத்தை இன்னொருவர் சொல்வார். அவ்வளவுதானே.
 

முகமூடி அவர்களின் பதிவில் இலங்கைத்தமிழரை ஆதரித்தது போலத் தெரியவில்லை. இங்குள்ள தமிழர்கள் அனைவரும் புலிகள் என்பது போல சித்தரித்துள்ளார்!

அதிமுகவினருக்கும் பார்ப்பன கட்சிகளுக்கும் இதர பார்ப்பனர்களுக்கும் இலங்கைத் தமிழர்களை பிடிக்காமல் போனது ஏன் என்று தெரியவில்லை.

நளினியை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றியது ராஜீவ் அவர்களின் மனைவி சோனியா என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
 

இலங்காபுரன் எந்த இடத்தில் ஈழத்தமிழர் எல்லாம் புலிகள் என்று சொன்னேன் என்று கூற முடியுமா??? புலிகள் எல்லாம் தமிழர் என்று சொன்னேன், தமிழர் எல்லாம் புலிகள் என்று சொல்லவில்லை இலங்கை தமிழர் மேல் பாசம் இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள். புலிகளை விமர்சிப்பவர்கள் இலங்கை தமிழரை வெறுப்பவர் என்பது தவறான பிரச்சாரம்.
 

அப்படி தமிழர் அல்லாதோர் புலிகளாக இருந்தால் அது என் அறியாமை காரணமாக என்று கொள்க.
 

என்னுடைய இந்த பதிவையும் படித்துவிட்டு சொல்லுங்கள்
 

பொதுவாக நான் இலங்கை சார்ந்த திரிகளில் இடுகைகள் போடுவதில்லை. நான் ஏதாவது உளறிக் கொட்டிவிடக் கூடாதே என்பதற்காக. அதாவது ஈழத்துச் சகோதரர்கள் வேதனைகளை நேரடியாகச் சந்திக்க பயந்து கொண்டுதான் அப்படிச் செய்வது.

இது இந்தியாவின் நிலைப்பாட்டைப் பற்றி என்பதால் என்னுடைய கருத்தைப் போடுகிறேன்.

இந்தியா இலங்கை அரசுக்கு எந்த விதத்திலும் ஆயுத உதவி செய்யக் கூடாது என்பதே ஒரு இந்தியனாக எனது கருத்து. இதற்கு எதிராக நூறு கருத்துகள் கூறினாலும் அவை வெறும் "புலிகளின் மீதான வெறுப்புணர்ச்சி" என்ற மாய விலங்கின் மீதான அச்சமேயாகும்.

இந்திய அரசாங்கம் இலங்கை குறித்த நிலைப்பாட்டில் மாறுபாடு கொள்ள வேண்டும். இன்னமும் ஆக்கமாக செயல்பட்டு அங்கே அமைதி நிலவச் செய்ய வேண்டும். அல்லது இருப்பதைக் கெடுக்காமலாவது நடுநிலையாக இருக்க வேண்டும்.

எனக்குத் தெரிந்து இந்த விஷயத்தில் வைகோதான் கொஞ்சமேனும் பாடுபடுகிறார். ஆனால் பாருங்கள். அதனாலேயே அவருக்கும் கஷ்டம். இருந்தும் அவர் முடிந்தவரை செய்கிறார்.
 

இலங்காபுரன், ராகவன்,
கருத்துக்கு நன்றிகள்.
 

//தமிழீழம் உருவாவது தனித்தமிழகக் கோரிக்கையை ஏற்படுத்தும் என யாரும் நம்புவார்கள் என நான் நினைக்கவில்லை. வங்கதேசம் உருவானதால் மேற்குவங்கம் தனியாகிவிட்டதா என்ன?.//

சரியாக சொன்னீர்கள் முத்து...

இந்திய அரசாங்கம் எப்போதுமே ஈழப்பிரச்சினையில் ஒரு மாதிரியான குழப்ப நிலையில் இருப்பதற்கு தமிழக தமிழர்களும் தனி நாடு கேட்பார்கள் என்ற அச்சம் தான் காரணமோ என்ன நினைக்கின்றேன்...

எது எப்படியானாலும் தமிழர்களை கொல்ல இந்தியா ஆயுதம் தரக்கூடாது...

//இந்தியா கச்சுத் தீவை இலங்கைக் கொடுத்தது, அதற்குக் கைம்மாறாய் நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்களை இதுவரை இலங்கை அரசு கொன்றிருக்கிறது(இன்னும் கொல்லும்).
//
அமெரிக்கா தளம் அமைக்கும் என பயந்து பயந்து கச்சத்தீவை கொடுத்து நம் மீனவர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் கொடுமை சொல்லிலடங்கா, கச்சத்தீவு சம்பந்தப்பட்ட ஒப்பந்த்ததின் ஒரு வரியை கூட சிங்கள அரசு மதிக்கவில்லை...

கச்சத்தீவை திரும்ப பெறக்கோரி மருத்துவர் அய்யா சில ஆண்டுகளுக்கு முன் சில முறை போராடி கைதானார்...
 

கச்சத் தீவை மீட்கக் கோரி சுப்ரமணிய சாமிதான் ஆரம்பம் முதலே போராடினார். அதையெல்லாம் வசதியாக மறந்து விடுவீர்களே குழலி?! ;)
 

muthu,
theLivAna karuththukkaL koNta pathivu.
 

அருமையான நிதானமான பதிவு முத்து.
 

அருமையான பதிவு!
ஈழத்தமிழர்கள் சார்பாக எனது நன்றிகள் உரித்தாகட்டும்!
 

"I just came across your blog about auction online diamond wedding bandand wanted to drop you a note telling you how impressed I was with the information you have posted here. I also have a web site & blog about **keyword** auction online diamond wedding band so I know I'm talking about when I say your site is top-notch! Keep up the great work, you are providing a great resource on the Internet here!
 

"I just came across your blog about ebay etailsolution softwareand wanted to drop you a note telling you how impressed I was with the information you have posted here. I also have a web site & blog about **keyword** ebay etailsolution software so I know I'm talking about when I say your site is top-notch! Keep up the great work, you are providing a great resource on the Internet here!
 

Hey, you have an awesome blog ! I'have just bookmarked you.

I have a ebay acitons misspelled auction search site. It pretty much is a search engine that allows you to search eBay for misspelled auctions and allows you to find some great bargains.

Come and check it out if you get time :-)
eBay misspelled auctions
 

I just came across your blog and wanted to drop you a note telling you how impressed I was with the information you have posted here.
I also have a web site & blog about diamond car insurance
so I know what I'm talking about when I say your site is top-notch! Keep up the great work!
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com