<$BlogRSDUrl$>

Saturday, June 18, 2005

டாவின்ஸி

கீழேயுள்ளவர்தான் மோனலிசா வரைந்தவர். இத்தாலியின் மிலனோ நகரில் பல காலம் தங்கியிருந்திருக்கிறார். நாங்கள் நண்பர்களுடன் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் மிலனோ சென்றிருந்தபோது எடுத்த புகைப்படம் இது. ஆங்.. சொல்ல மறந்துவிட்டேன், திருமதி சோனியாவின் சொந்த ஊர் இதுதான். சொந்த ஊர் என்றால் இந்த ஊர் முழுவதும் அவருக்குச் சொந்தமென அர்த்தம் கொள்ளவேண்டாம், அவர் பிறந்து வளர்ந்தது இங்கேதான் என்று சொல்ல வந்தேன்.

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com


ஓவியங்கள் தவிர பொறியியல், மருத்துவம், அறிவியல் என பல துறைகளிலும் புகுந்து விளையாடிய டாவின்ஸி ஒரு விஞ்ஞானியாக அக்காலத்தில் அங்கீகரிக்கப்படவில்லை, காரணம், அவர் கணிதம், லத்தீன் ஆகியவற்றில் முறையான கல்வித்தகுதியைக் கொண்டிருக்கவில்லை என்பதுதானாம். இது எல்லாக்காலத்திலும் நடக்கக்கூடியதான், இன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. கலாம் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய அறிவியல் கழகம், பெங்களூரில் பேராசிரியராக வர விரும்பியபோது அங்கு பேராசிரியராய் வருவதற்கு என நிர்ணயிக்கப்பட்டிருக்கும் முறையான தகுதிகள் பற்றிச் சில பேராசிரியர்கள் கேள்வி எழுப்பியதால் அவர் அங்குப் பேராசிரியராய் வருவதில் தடங்கல் ஏற்பட்டதாய்க் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கலாமைப் பேராசிரியராய்ப் பெற்று அந்தப் பெருமையைத் தட்டிச் சென்றுவிட்டது.
| | |
Comments:
ராஜ்,
நீங்கள் சொல்வது எனக்கு நினைவிருக்கிறது. தற்போதைய முதல்வர் ஜெயலலிதா கடந்த முறை பதவியில் இருந்தபோது இது நடந்தது. அப்போது கலாம் துணைவேந்தராக வரத்தடையாய் இருந்தவை இரண்டு காரணங்கள், நான் அறிந்தவரை.

1. திரு.கலாம் உச்ச கட்ட பாதுகாப்பான இசட் பிரிவு பாதுகாப்பில் இருப்பதால், அந்த அளவுக்குப் பாதுகாப்பு தர இயலாது என அன்றைய தமிழக அரசு கருதியது அல்லது காரணம் சொன்னது.

2.பாதுகாப்பு அமைச்சகம் அவரைப் பதவியிலிருந்து விடுவித்து துணைவேந்தராகச் செல்ல அனுமதி மறுத்துவிட்டது.

நான் இப்பதிவில் சொல்லியிருப்பது மிக சமீபத்தில் நடந்தது, அதாவது 2000 க்குப் பிறகு.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com