<$BlogRSDUrl$>

Tuesday, June 15, 2004

ஆறு நூறாகிவிட்டது ... !


ஏற்கனவே பேசிக்கொண்டிருந்த விஷயம்தான். கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நான் கூட இங்கு எழுதியிருந்தேன். அதாகப்பட்டது யாகூ இலவச மின்னஞ்சல் சேவை 6 MB யில் இருந்து 100 MB ஆக மாறப்போகிறது என்று பேசப்பட்டது உண்மையாகிவிட்டது. ஜூன் 15 ஆம் தேதியில் இருந்து(இன்று) பல யாகூ பயனாளர்களின் கணக்கு 6 MB யில் இருந்து 100 MB ஆக மாறிவிட்டது. ஆனால் அனைவருக்கும் இவ்வாறு மாற்றப்படவில்லை. நான் இன்று காலையில் யாகூவைத் திறந்து பார்த்தபோது இந்த மாற்றம் நடந்து விட்டிருந்தது. பணம் செலுத்தி சேவையைப் பயன்படுத்தும் பயனாளர்களின் மின்னஞ்சல் கணக்கு 1000 MB ஆக மாறியிருக்கிறது. மேலும் இலவச சேவையில் இனிமேல் மிகப் பெரிய கோப்புக்களை இணைப்பாக அனுப்ப இயலும். இதற்கு முன்னால் 1 MB க்கு மேற்பட்ட கோப்புகளை அட்டாச்மெண்டாக அனுப்ப இயலாது, அந்த மின்னஞ்சல் இணைப்பின் உச்ச அளவு 10 MB ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இங்கே என் நண்பர் ஒருவர் ஆறிலும் மின்னஞ்சல் நூறிலும் மின்னஞ்சல் என்ன பெரிய வித்தியாசம் என்கிறார். ஆனாலும் ஒரு வரி ஹாய் மின்னஞ்சலைக் கூட அழிக்க மனம் வராத பிரின்ஸஸ் பவித்ரா, நான் போன்ற ஜீவன்களுக்கு இது மிக உபயோகமாய் இருக்குமென்பதில் சந்தேகமில்லை .


| | |
Comments:
முத்து, நான் ஏற்கனவே இது பற்றி எனது வலையில் எழுதியிருக்கிறேன் . போட்டா போட்டி ஹா.... ஹா.....
 

enakkum santhosam.
 

முத்து எல்லோருக்கும் யாகூ 100 MB கொடுத்துள்ளதாக சிலர் சொல்கிறார்கள்.
ஜி-மெயில் கிடைத்தவர்களைப்பார்த்து காதில் புகை வந்து கொண்டிருந்த எனக்கு 100 MB வரப்பிரசாதம் தான். யா..கூ ஊஊஊஉ... எல்லாம் ஒரு சந்தோஷம்தான் :)
 

கார்த்திக் ..
உங்களுக்கு ஜிமெயில் வேண்டுமானால் சொல்லுங்கள்...
எனது நண்பரிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறேன் ...
 

கார்த்திக்..
ரீடிஃப் இப்பொது 1 GB தருவதால் ஜிமெயிலின் மவுசு குறைந்துவிட்டது.. ;)
 

முத்து உங்க்லள் இரக்கத்துக்கு நன்றி. இப்பொது வேண்டாம் தேவை என்றால் சொல்கிறேன்.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com