<$BlogRSDUrl$>

Saturday, June 12, 2004

நெஞ்சு பொறுக்குதில்லையே ... !

பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் உள்ளன. அவற்றில் மிக மோசமான வழி ஒன்றினை இங்கு காண நேர்ந்தது. பொதுவாக ஜெர்மனியில் தான், தனது என்று இருக்கும் மக்களுடன் அடுத்தவருக்கு உதவும் எண்ணமுடைய நல்ல நெஞ்சங்களும் இருக்கிறார்கள். இவர்களின் நல்லெண்ணத்தைப் பயன்படுத்தி குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க எண்ணி சிலர் செயல்பட்டு வருவது வருந்தத்தக்க ஒன்றாகும்.

சில நாட்களுக்கு முன்னர் இங்கு ஒரு பிட் நோட்டீஸை நண்பர் ஒருவர் காட்டினார். அந்த விளம்பரத்தின் சாராம்சம் இதுதான்..

" ..... 50 யூரோ கொடுத்து உதவுங்கள். இந்தியாவில் தமிழ்நாட்டின் தென்பகுதியில் நடந்து வரும் கொடுமைகளைத் தவிர்க்க, துயர் தீர்க்க பணம் கொடுத்து உதவுங்கள். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் உயர்சாதிக்காரர்களின் கொடுமைகள் மிக அதிகம். இதனால் தாழ்ந்த சாதிக்காரர்கள் மிகப்பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தக் கொடுமைகளை எதிர்த்துப் போராட, தாழ்ந்த சாதிக்காரர்களுக்கு வீடு மற்றும் வசதிகள் செய்து கொடுக்க 50 யூரோ கொடுத்து உதவுங்கள்...."

இவ்வாறாகச் செய்யப்படும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் லட்சக்கணக்கான பணத்துக்காகச் சிலர் நாட்டின் பெயரைச் சீரழித்து வருகிறார்கள். சொந்த நாட்டைப் பற்றியே ஒரு பொய்யான தோற்றத்தைப் பணத்துக்காக மக்களிடம் உருவாக்கிவருகிறார்கள். இது போன்று போலி விளம்பரங்கள் செய்து லட்சக்கணக்கான பணம் சுருட்டும் கும்பல்கள் பல திண்டுக்கல் பகுதியில் செயல்பட்டு வருவதாய் அந்த நணபர் வருத்தத்துடன் சொன்னார். இவர்களை எல்லாம் என்ன செய்வது... ?
| | |
Comments:
இப்படிப்பட்டவர்களால் தான் இந்தியா என்றால் அது பிச்சைக்காரர்கள் மிகுந்திருக்கும் தேசம், தரித்திரம் பிடித்த இடம், ஹிந்து சாதி வெறியர்களின் ஆதிக்க பிரதேசம் என்று நம் நாட்டைப் பற்றி படு கேவலமாக அயல்நாட்டினர் நினைக்கின்றனர்.

சொந்த நாட்டுக்கு பெருமை தேடி தராவிட்டாலும் இப்படி அவமானங்களை ஏற்ப்படுத்தாமல் இனிமேலாவது இவர்கள் இருக்க கடவார்களாக :(
 
Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com