Saturday, October 15, 2005
உன் ஐஸ் கிரீமாய் நானிருந்தால்...
அன்று கொஞ்சம் கவலையில் இருந்தார் அந்த நண்பர். என்னவென்று விசாரித்தேன். அவருக்குத் தெரிந்த ஒரு பெரிய மனிதர் பற்றி வருத்தத்தில் இருப்பதாய்ச் சொன்னார். நண்பர் சிரியா நாட்டைச் சேர்ந்தவர். கவலைக்குக் காரணம் சிரியா நாட்டின் அமைச்சராம், சிலநாட்களுக்கு முன்னால் தற்கொலை செய்து இறந்துவிட்டாராம். சரி, நண்பரின் மூடை மாற்ற எண்ணி, உங்கள் நாட்டின் மக்கள் எப்படி?, குறிப்பாய் இளைய வயது ஆண்கள், பெண்கள் எப்படி என்று கேட்டேன்.
".. எங்கள் சிரியா மக்கள் ஒன்றும் அவ்வளவு மோசமில்லை, கலகலப்பானவர்கள்தாம், பெண்களையும் சேர்த்துத்தான். ஆனால் அதற்காய் இங்கே ஜெர்மனி போல் ஒரு பெண்ணிடம் அவர் அழகைப் புகழ்ந்து அவருக்கு ஐஸ் வைப்பது சாத்திமில்லை... "
"..நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அதுபோல் அங்கே பலமுறை முயற்சி செய்து பார்த்திருப்பீர்கள் போலத் தெரிகிறதே..", என்றேன் சுவாரசியமாய்.
நண்பர் புன்னகையுடன் தொடர்ந்தார். ".... சில ஆண்டுகளுக்கு முன்னால் கல்லூரியில் படிக்கும்போது பலமுறை முயன்றதுண்டு. ஒரு அனுபவத்தைக் கேளுங்கள். ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் இந்த ஐஸ்கிரீமாய் நானிருந்தால் என்று சொல்லிப் புன்னகைத்தேன். நான் முழுதும் என்று சொல்லிக்கூட முடிக்கவில்லை, அந்தப் பெண் ஐஸ்கிரீமைக் கீழே வீசி "நச்" என்று நாலு மிதிவிட்டார், ஐஸ்கிரீமைத்தான். ஆளைவிட்டால் போதுமென ஓடிவந்துவிட்டேன்..., அதுசரி இந்தியாவில் எப்படி?..."
"...இந்தியாவில் பெண்கள், ஆண்கள் எல்லாரும் நல்லவர்கள்தாம். என்றாலும் இதுவரை நான் பெண்களிடம் வம்பு எதுவும் செய்ததில்லையாதலால் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்று எனக்குத் தெரியாது..", என்றேன் நல்ல பிள்ளையாய் :-).
| | |

Comments:
என்றும் எந்தன் இன்பத் தமிழினமே!
எழுச்சி கொண்டே நீபுறப் படுவாய்!
இன்றுவரை ஈழத்தில் எம்மினம் ஆற்றுகின்ற
ஏற்றமிகு புரட்சிதனை எண்ணிப் பார்த்திடுவாய்!
தென்றலாள் தமிழன்னை தரணியிலே தலைநிமிர
தேன்தமிழ் மக்கள் திக்கெலாம் கூடிநின்று
ஒன்றிணைந்து ஒரேகுரலில் உறுதிமொழி எடுத்தே
உலகே வியந்திட அலையெனத் திரண்டார்!
காலையிற் கண்விழித்துக் கைத்தொலை பேசியில்
கடல்கடந்த விடயங்கள் கலந்துரை யாடியே
நாலுவேளை நாவினுக்கு நல்சுவை விருந்தொடு
நளினமா யுடையணிந்து தளர்நடை பயின்று
சாலையோரம் மகிழுந்தில் சற்றே பவனிவந்து
சந்திகளிற் கூடிநின்று தர்க்கம் புரியும்நாம்
காலநேரம் கருதியெம் கவனத்தைத் திசைதிருப்பிக்
கண்மணியாம் திருநாட்டில் செலுத்த விழைந்திடுவோம்!
ஏடுகளைப் புரட்டிப்பார் எழில்மிகு காட்சிகள்
இணையிலா எம்மினத்தின் எழில்மிகு தோற்றங்கள்
கூடியே திரண்டுளார் குவலயத்தில் யார்க்குமிலா
குணம்படைத் தோரிவர் குன்றேறி நின்றோர்பார்!
பேடொன்று முட்டைதனை இட்டவுடன் தானங்கு
பெரிதாகக் குரலிட்டு கூவுதல் போல்நாமும்
சாடையாய்ச் சிறுதொகை தாமிங்கு வழங்கிச்
சாதித்தோம் என்றே சாற்றுதல்தான் நன்றோ?
தமிழன்னை சிறைமீட்கத் தன்னுயிர் நீத்த
தன்னிகரில் திலீபனின் தூய திங்களிது!
உமிழ்நீர் வற்றியே உலர்ந்து உலகறிய
உயிர்நீத்த அளப்பரிய கொடைதனை அறிவாயே!
தமக்கென வாழாத் தமிழுக்காய் நாட்டிற்காய்த்
தம்முயி ரைத்தற் கொடையாய்த் தானீந்தும்
எமக்காய் இவ்வுலக இன்பங்கள் துறந்த
எண்ணிலா மாவீரர் தீரர்கள் எத்தனைபேர்?
பொங்குதமிழ் நிகழ்ச்சிதனிற் பூங்காவிற் கூடினோம்
பொய்க்கவில்லை தம்பிபார்த் தீபன் புகன்றவுரை!
எங்குமுள்ள தமிழரெலாம் ஒன்றிணைந்து கூவுகின்றாh
எதிரியின் முகத்திரை அழித்திட முனைகின்றார்!
கங்குலது கழிந்திட வேண்டுமெனச் சீறியே
கடல்கடந்த நாட்டினிலும் நம்தமிழன் கூடுகின்றான்
சங்கமித்துச் சாடுகின்றான் சிங்களத்தின் சீரற்ற
செயல்களைத் தேசங்கள் தாமறிந் திடவே!
செந்தமிழர் நாட்டினிலே சேனையென ஒன்றிணைந்தார்
சேதிதா னறிவாயோ துணைப்படை யெழுச்சி!
பைந்தமிழர் பயில்கின்றார் பகைதனை விரட்டவே
பாசறை புகுந்திடப் பண்புசால் பெண்களும்
வந்தோரை வரவேற்கும் வண்டமிழ் ஈழத்தில்
வளமான மண்ணதிலே வானம திர்ந்திட
முந்தி விழுந்து முதியோரும் இளையோரும்
மூச்சாய்ப் பயிற்சிதனில் முனைந்து நிற்கின்றார்!
யாழ்நகரில் நேற்றிருந்த பொங்குதமிழ் அறிவாயா?
யாப்புறுத்தி முழங்கினார்! யாதுமே செய்யிலாக்
காழ்ப்புடன் சிங்களம் கலங்குதல் காண்பாயவர்
கைகட்டி வாய்பொத்தும் காலம் தூரமில்லை!.
சூழ்ச்சிதான் புரிந்தார் சூதினாலவர் தொலைந்தார்
சூரியத் தலைவனின் சுடரினிற் சாய்வார்!
தாழ்ச்சியுமவர்க் கேயன்றித் தமிழனுக் கல்லவே
தங்கத் தமிழன்னை தவவலிமை அறிவாயே!
ஆதலின் புறப்படுவாய் அன்புடைத் தமிழா!
அன்னிய நாடுகளின் அறியாமை நீக்கிடவே
ஈதலில் ஒப்பிலா எம்தலைவன் உள்ளவரை
எம்மினம் அஞ்சாது இம்மியும் அசையாது
மோதலில், வென்றவர்நாம் மூத்த இனமெனவும்
முன்மொழிந்து நிற்போம். முட்டுக்கள் நீக்கெனச்
சாதலிலும் இறுதியாய்த் தமிழீழமே மூச்செனச்
சாற்றியே அவர்பால் சத்தியம் செய்வோம்!
ஐப்பசித் திங்களிது அளவான குளிர்காலம்
ஐ.நா சபைக்கோர் அன்பான வேண்டுகோள்
கைப்பட எழுதிநாம் கடுகியே அனுப்புவோம்!
காரணம் தடைக் கெதுவெனக் கேட்போம்!
எப்பகையும் எமக்கில்லை எவருக்கும் தீயரில்லை
உட்பகை தாம்புரிந்த உண்மைதனைப் புரியாது
தப்பாக எம்மீது சாற்றிடும் பொய்யுரையைத்
தகர்த்திடக் கூடுவோம் பூங்காவிற் பேசுவோம்!
பி.இரயாகரன்

வணக்கம் முத்து, சுகமா இருக்கீங்களா..? மீண்டும் வலைப்பூவைத் தொடர்வது கண்டு மிக்க மகிழ்ச்சி. ஆனாலும் அநியாயம்... ஊருக்கு வந்ததை ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் என்ன..? சந்தித்திருப்பேனே..? இன்னும் ஊரில்தான் இருக்கிறீர்களா...? இல்லை ஜெர்மனிக்கு வந்தாச்சா...? உங்களை கொஞ்ச நாட்களாக காணாமல் சங்கடமாக இருந்தது. உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. அண்ணா மீண்டும் மன்றம் வருகிறார். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது வந்தால் நாங்கள் அனைவரும் மகிழ்வோம். உங்கள் உடல்நலனைப்பார்த்துக்கொள்ளுங்கள்.
Post a Comment