Saturday, October 15, 2005
துளசியக்கா தினமலரில்
எல்லோரும் நல்லா இருக்கீங்களா?. எழுதி சில மாதங்களாகிவிட்டது. இன்னும் கொஞ்ச நாள் போனால் எனது பிளாக்கர் பாஸ்வேர்டே மறந்தாலும் மறந்துவிடும்போலிருக்கிறது.
போனமாதம் கடைசிவரை ஊரில் இருந்தேன், சொந்த ஊரில். மூன்று வருடம் கழித்து சொந்தக் கிராமத்துக்குப் போனால் நிறைய மாற்றங்கள், குறிப்பாய் சிறுவர்களிடம். வீட்டுக்குப் போகும்போது எனது மடிக்கணினியையும் கொண்டுபோயிருந்தேன். ஆயிரக்கணக்கான புகைப்படங்களைக் கணினியில் சேமித்திருந்தேன். கொஞ்சம் ஒளித்துண்டுகளும் கூட உண்டு.
பல சிறுவர்கள் மடிக்கணினியைப் பார்த்திருக்கவே மாட்டார்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். புகைப்படங்களை மடிக்கணியிலிருந்து அவர்களுக்குக் காட்டிக்கொண்டிருக்கும்போது சடாரெனக் கேட்கிறார்கள், கம்ப்யூட்டர் இருக்கு, ஆனா மவுஸ் எங்கே ?. மவுஸை இங்கேயே விட்டுவிட்டுப் போய்விட்டேன், தொடும்பலகை வைத்துச் சமாளித்துக்கொண்டிருந்தேன்.
நம்ம ஊர் வடை, இட்லி, சட்னி, சாம்பார் என ஒரு ரவுண்ட் வந்தேன். சன் டிவி, ராஜ் டிவி, விஜய் டிவி என ஒன்றையும் விடாமல் தினமும் சீரியல், சினிமா என்று ஒரு மாதம் பொழுதுபோனதே தெரியவில்லை.
தமிழ் நாளிதழ்களை கடினப் பதிப்பாய்ப் படித்தேன். தினமலரில் தினமும் ஒரு தமிழ் வலைப்பூ பற்றி எழுதி வாசகர்கள் வாசிக்க வசதியாய் வலைப்பதிவின் இணைய முகவரியையும் கொடுக்கிறார்கள். ஒருநாள் தற்செயலாய்ப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, தனது வலைப்பூவுக்கு வருபவர்களை இவர் விருந்தாளியாகக் கருதுகிறார் என்று ஒரு வலைப்பதிவாளரைப் பற்றி எழுதியிருந்தார்கள். அட.. நமக்கு நன்றாய்த் தெரிந்தவர்போலத் தெரிகிறதே என்று கவனித்துப் பார்த்தால், அது நம்ம துளசியக்கா :). சில வாரங்களுக்கு முன்னால் என்றாவது ஒருநாள் துளசியக்காவின் பதிவில் ஹிட்ஸ் எகிறியிருந்தால் அது தினமலரின் உபயம்தான்.
ஜெர்மனிக்கு வந்த புதிதில் வாங்கும் ஒவ்வொரு பொருளின் விலையையும் ஐம்பதால் பெருக்கிப் பார்த்தது நன்றாய் நினைவிருக்கிறது. இப்போது கிராமத்துப் போனால் அங்கே வாங்கிய பொருட்களின் விலைகளை ஐம்பதால் வகுத்துப் பார்த்துச் சந்தோசப்படத் தோன்றுகிறது. உண்மையில் எந்த விலையும் பெரிதாய் மாறிவிடவில்லை, ஆனாலும் இப்படி ஒரு அற்பச் சந்தோசம்தான்.
உள்ளூர் விமானங்களில் பயணம் செய்வது மலிவான ஒன்றாயிருக்கிறது. சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரைக்கு டாக்ஸியில் வருவதைவிட உள்ளூர் விமானத்தில் வந்திறங்குவது மிக மலிவான ஒன்றாகிவிட்டிருப்பது
வசதியாயிருக்கிறது.
ஊருக்குப் போய்வந்ததைப் பற்றி நிறைய எழுத வேண்டும், சமயம் கிடைக்கும்போது.
| | |

Comments:
்நநும்பமநல்வரவு, முத்து. உங்கள் தாயக அனுபவங்கள் பற்றி மேலும் எழுதுங்கள். //தமிழ் நாளிதழ்களை கடினப் பதிப்பாய்........// hard copy என்பதை 'தாள் வடிவில்' என்று மொழிபெயர்த்திருக்கலாமோ? :)
சென்றப் பின்னூட்டத்தில் 'நல்வரவு' என்று உள்ளிட்டது ஏதோ காரணத்தால் பதிவாகவில்லை. ஆகவே, மீண்டுமொரு முறை - நல்வரவு!
வாய்ஸ் ஆப் விங்ஸ்,
நன்றிகள். ஹார்ட் காப்பி - சாப்ட் காப்பி என்பதை வழக்கமாய் மென்,வன் பதிப்பு எனக்கூறுவது தற்போது வழக்கம்தானே. கடினப் பதிப்பு என்பதை தாள் வடிவில் என்பதும் இவ்விடத்தில் நன்றாகத்தான் இருக்கிறது. அடுத்த தடவை நீங்கள் சொன்னபடியே குறிப்பிடுகிறேன்.

//வருக, வருக.
ஊருக்கு சென்றவந்த கதையெல்லாம் நேரம்கிடைக்கும்போது தொடர்ந்து எழுதுங்க.
//
anbu sonnathai vazi mozikiREn !!!

வாருங்கள் வாருங்கள்.
நான் கூட நினைத்ததுண்டு தினமும்
வலைபதிபவருக்கு என்ன நடந்தது என்று.ஊர் போயிருந்திருக்கிறீர்கள்.
நல்லது.பயண,ஊர் அனுபவங்களை
எழுதுங்களேன்.
நாளிதள்களை அச்சுப்பதிவு என்று
குறிப்பிடலாம் என்று நினைக்கிரேன்.
ந்ன்றி

என்ன முத்துத்தம்பி, நல்லா இருக்கீங்களா? ஊருலே எல்லாரும் நலம்தானே?
ஊர் அனுபவத்தையெல்லாம் எடுத்துவிடுங்க.
ஊர்லே ஜாலியா இருந்திருக்கீங்கன்னு தெரியுது. அப்ப 'இந்த அக்கா' ஞாபகம்கூட வந்திருக்கு!
சந்தோஷமா இருக்கு தம்பி.
இந்த தமிழ்மணம் வந்ததிலிருந்து நான் சம்பாரித்த மிகப்பெரிய சொத்து என்னன்னா,
நிறைய தம்பி தங்கைகளைத்தான் சொல்லணும்.
நல்லா இருங்க.
என்றும் அன்புடன்,
அக்கா

வாங்க வாங்க முத்து அவர்களே!
ஊரில அனைவரும் நலம் தானே.
பார்த்து பேசி பல மாதங்கள் ஆகிவிட்டது.
வாழ்த்துகள்.
ஊரில அனைவரும் நலம் தானே.
பார்த்து பேசி பல மாதங்கள் ஆகிவிட்டது.
வாழ்த்துகள்.
ஆகா. திரும்பவும் விடுமுறை முடிந்து வேலைக்கு வந்தாச்சா. நல்லது. இனிமே வலைல அடிக்கடி பாக்கலாம்.
துளசியம்மாவின் பதிவுகளை நானும் விரும்பிப் படிக்கின்றவந்தான். நியூசிலாந்து பற்றி அவர்கள் எழுதும் தொடரும் மிகச் சிறப்பாக இருக்கிறது.

"சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரைக்கு டாக்ஸியில் வருவதைவிட"
-- Periya aala irupeenga pola irukke..Chennai to Madurai taxilaya...emmadi
Post a Comment