<$BlogRSDUrl$>

Sunday, June 19, 2005

முத்தொட்டில் - யாருக்காவது தெரியுமா?

அந்தக் காலத்துல இந்த முத்தொட்டிலுக்கு ஆசைப்பட்டவர்கள் பலர். அந்தக் காலம் என்றால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இல்லை. ஒரு ஐம்பது அறுபது வருஷத்துக்கு முன்னால்தான். பலர், குறிப்பாய் ஆண்கள் இதைப் பெரிய பெருமையாய்க் கருதினர், பெண்களும்தான். இம்மாதிரி முத்தொட்டில் போடுவது மிகவும் அபூர்வமான ஒன்றாய்க் கருதப்பட்டதாய்க் கேள்விப்பட்டிருக்கிறேன். இதில் பெருவிருப்பம் கொண்டிருந்தோரில் பலர் நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது வருந்தத்தக்கது :-).

சரி. முத்தொட்டில் என்பது என்னவென்று சொல்லாமலே நீட்டி முழக்கிக்கொண்டு போகிறாயே என நீங்கள் நினைப்பது புரிகிறது. முத்தொட்டில் என்பது வீட்டில் மூன்று தொட்டில் கட்டியிருப்பதுதான். இதில் என்ன பெரிய விஷேசம் என்று நினைக்கத் தோன்றலாம். யார் நினைத்தாலும் மூன்று தொட்டில் வீட்டில் கட்டிக்கொள்ளலாமே எனக் கேட்க நினைப்பவர்கள் அடுத்தவரியைப் பார்த்துவிட்டுக் கேளுங்கள். மூன்று தொட்டிலிலும் குழந்தை இருக்கவேண்டும். அதுவும் மூன்றுபேரின் குழந்தைகளாய். அம்மா, மகள், மருமகள் என மூன்று பேரும் அவரவர் கணவர்மார்களுடன் ஒரே சமயத்தில் தத்தமது குழந்தையைத் தாலாட்டுவதே இதன் சிறப்பம்சம். ஆண்கள் ஏன் இந்த முத்தொட்டில் மீது ஆர்வமாய் இருந்தனர் என்று இப்போது புரியும். இந்தியாவின் மக்கள்தொகை இந்த அளவுக்கு இன்று இருப்பது ஏனென்றும் கொஞ்சம் புரியும்.

சரி. அது போகட்டும். இப்போதும் யாராவது இந்தியாவில் முத்தொட்டிலில் ஈடுபாடு கொண்டிருக்கிறார்களா என்றுதான் தெரியவில்லை. வெளிநாட்டில் இது பெரிய விதயமில்லை. ஆனால் வெளிநாட்டுப் பெண்கள் ஐம்பது வயதுக்குமேல் குழந்தை பெறுவதைப் பெருமையாய் நினைக்கிறார்கள்.
| | |
Comments:
முத்து எங்கிருந்து இத்தனை விடயங்கள் பிடிக்கின்றீர்.... ஆச்சரியப்படுத்துகின்றீர்...
 

சில மாதங்களுக்கு முன்னர் குமுதத்தில் வாசித்தது... யாரோ ஒரு கொள்ள்ள்ளுப்பாட்டி ரொம்ப சின்ன வசயிலேயே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம்.அவான்ர கடைசி மகளுக்கும் மூத்த மகளுடைய இரண்டு மகள்களுக்கும் இன்னும் யாருக்கோவுமாக மொத்தமா அந்தக் கொள்ளுப்பாட்டி வீட்ட ஆறு தொட்டில் கட்டினார்களாம் ஒரே நேரத்தில்
 

குழலி,
நீங்கள் இதைக் கேள்விப்பட்டதில்லையா?.இது நான் சிறுவயதில் கேள்விப்பட்ட ஞாபகம்.

அந்தக் காலத்தில் இது சாதாரணம்தான். அண்ணனின் பையன் தம்பியின் வயதில் இருப்பது வெகு சாதாரணம் அந்தக் காலத்தில். அண்ணி=அம்மா, தம்பி மனைவி=மகள் என்ற நமது கலாச்சார உறவுமுறை ஒப்புமைகளுக்கு இதுவே முக்கியக் காரணம்.
 

சிநேகிதி,
நீங்கள் சொன்னது நிச்சயம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய ஒன்றுதான். இது வெகு அபூர்வம். வெளிநாடுகளில் பல பெண்கள் குழந்தையே வேண்டால் என நினைப்பது அதிகமாகிக் கொண்டுவருகிறது.
 

This comment has been removed by a blog administrator.
 

This comment has been removed by a blog administrator.
 

This comment has been removed by a blog administrator.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com