<$BlogRSDUrl$>

Sunday, April 24, 2005

ஓரினச் சேர்க்கையாளர்கள், புதிய போப், ஸ்பெயின்


ஐரோப்பிய நாடுகளிலேயே முதல் நாடாக ஸ்பெயின் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக அங்கீகரித்ததுடன் அவர்கள் குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ளவும் அனுமதித்துள்ளது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு எதிரானவர் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. செய்தி வெளியானவுடன் வாட்டிகனில் இருந்து கடும் கண்டனக் குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

வாடிகனில் உள்ள கார்டினல் மூலம் வெளியிடப்பட்ட செய்தியில், சட்டமாக்குவதால் மட்டும் தவறான ஒன்று சரியானதாய் ஆகிவிடாது. அரசாங்க அதிகாரிகள் இந்தச் சட்டத்தை ஆதரிப்பதைவிட வேலையை இழக்கத்தயாராக இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் விளக்கமான செய்திகளுக்கு.
| | |
Comments:
மிகவும் மகிழச்சியான செய்தி.
bill pass பண்ணப்பட்டுள்ளது என்றுதான் படித்தேன். சட்டமாக்கப்பட்டது நல்ல செய்தி.
 

பொடிச்சி,
நீங்கள் சொல்வதுதான் சரி. இப்போதைக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இது சட்டமாக இன்னும் ஓரிரு மாதமாகுமாம்.
 

// மிகவும் மகிழச்சியான செய்தி.//

பொடிச்சி,
இது அந்தளவுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாய் எனக்குத் தெரியவில்லை. மனிதன் இயற்கைக்கு முரணாய்ச் செல்வதுபோல் தோன்றுகிறது.
 

ஓரினச் சேர்க்கை என்பது இயற்கைக்கு முரணானது என்று யார் சொன்னது ?
 

நமது சமுதாயத்தில்(மனித சமுதாயத்துள்) 43வீதமானவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் .இது மானுடவியலாளரின் கருத்து.உண்மையும் அப்படியேதாமுள்ளதாக நமது தமிழ்பேசும் சமுதாயத்துள் நடவடிக்கைகாட்டுகிறது.ஓரினச்சேர்க்கையானது மிகவும் இயற்கையானது.இது அருவருக்கத் தக்கதாகக் காட்டுவது,நமது தூய்மைவாதம்தாம்.கியூபாவின் தலைசிறந்த இயக்குனர் திரு.கைத்திரியாஸ் அலியா மிகச்சிறந்த முறையில் இந்தப் பரச்சனைகுறித்து விவாதித்து நல்ல படம் தந்துளார்கள்.படம: ஸ்ரோபரி அன்ட் சொக்லேட்.எல்லோரும் பார்க்கவேண்டிய படம்.
 

நேற்று தான் இங்கே இந்தியாவில் ஒரு டிவி ஷோவில் இதைப் பற்றிய பேச்சு வந்தது. Section 377 என்று சொல்லப்படும் தன்பாலர்கள் மீதான சட்டத்தினை மறுபரீசிலனை செய்யுமாறு இந்தியாவின் உச்ச நீதிமன்றம், டெல்லி உயர்நீதி மன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கே/லெஸ்பியன் திருமணங்களை சட்டபூர்வமாக ஆதரிக்க வேண்டும் என்கிற குரல் உரத்து ஒலிக்கத்தொடங்கிவிட்டது. இதை தாண்டி, என்னளவில், இந்தியாவில் பாலியல் தொழிலையும் ஜெர்மனி போல அங்கீகாரம் செய்தல் வேண்டும் என்று பல குழுக்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.

இந்தியாவில் இவையெல்லாம் நடக்கவே இல்லை என்று ஜல்லியடிப்பவர்கள் தயவு செய்து Same-Sex Love in India : Readings from Literature and History by Ruth Vanita,Saleem Kidwai. படிக்கலாம். இந்த புத்தகம் நான் சமீபத்தில் கண்டறிந்த மிக அழமாக ஆய்வு செய்து எழுதப்பட்ட புத்தகம்.
 

அன்புள்ள தம்பி முத்து,

இங்கே எங்க நாட்டுலேயும் இதை அங்கீகரிச்சு, இப்பக் கல்யாணங்களும் நடக்குதேப்பா!
இங்கே ஒரு ஊர்லே இந்த ஸ்பெஷல் மணமக்களுக்கு ஹனிமூனுக்கு ஏற்ற இடமுன்னுவேற
விளம்பரங்கள் வந்துக்கிட்டு இருக்கே!

எல்லோரும் நல்லா இருந்தாச் சரி. இது அவுங்கவுங்க சொந்த விஷயமில்லையோ!

என்றும் அன்புடன்,
துளசி
 

ஸ்ரீரங்கன், நரைன்,
நன்றி உங்கள் கருத்துக்களுக்கு.

///எல்லோரும் நல்லா இருந்தாச் சரி. இது அவுங்கவுங்க சொந்த விஷயமில்லையோ!//

துளசியக்கா,
நேற்று சச்சின் படம் பார்த்தேன். நான் வழக்கமாக எனது நண்பர்களிடம் சொல்லும் ஒரு வசனத்தை விஜய் பேசி கொஞ்சம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

"...மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காத எதுவும் நல்லதுதான்.."
அதேதான் நினைவுக்கு வருகிறது.
 

"...மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காத எதுவும் நல்லதுதான்.."

"அடுத்தவன் மூக்கு நுனி வரை தான் ஒருவனுடைய சுதந்திரம் இருக்குது" என்று R.K.நாராயணன் சொன்னது தான் இது.
 

நான் இருக்கும் நாட்டிலும் ஓர் இன சேர்கை அங்கிகரிக்கபட்டுள்ளது. விரும்பினால் குழற்தைகளையும் தத்து எடுத்துக்கொள்ளளாம்!
ஓரு பாரில் இரு பெண்கள் ஒருத்தருக் ஒருவர் உதட்டில் முத்தம் குடுத்ததை பார்த்தது வெளியேற்றிய உரிமையாழருக்கு நீதி மண்றம் நேற்று அபராதம் விரித்துள்ளது.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com