<$BlogRSDUrl$>

Sunday, March 27, 2005

ஷாக் அடிக்கும் மின்சாரம் - உங்கள் உடலில்


பார்வையில் இருந்து மின்சாரம் பாய்வதும், உடலைத் தொட்டதும் மின்சாரம் பாய்வதும் கவிதையில் பார்த்திருக்கிறோம். இதுநடைமுறையில் சாத்தியமானதா?. ஆம். இது முழுவது நடக்கக்கூடியதே.

ஒவ்வொருவரின் உடலிலும் நிலைமின்சாரம்(Static Electricity) உண்டு. பல நேரங்களில் அது மிகக்குறைந்த அளவாய் இருப்பதால் உணர இயலுவதில்லை. குறைந்த படசம் 500 ஓல்டுக்கு மேல் இந்த நிலைமின்சாரம் தேங்கியிருந்தால் அதைத் தெளிவாக உணர முடியும். ஐநூறு ஓல்ட் என்றவுடன் புருவத்தை உயர்த்த வேண்டாம். நம் உடலில் சில சமயங்களில் 20,000 volt-க்குமேல்கூட நிலைமின்சாரம் தேங்குவது சாத்தியமானதுதான். இந்த அளவுக்கு மின்சாரம் உடலில் தேங்கும்போது நீங்கள் உடலிலிருந்து தீப்பொறி பறப்பதையே காண இயலும்.

சிலநாட்களுக்கு முன்னர் எனது நண்பர் ஒருவர் தனது டி-சர்டை வேகமாகக் கழற்றினால் தீப்பொறி பறப்பதாய்க் கூறினார். இதுவும் குறிப்பிட்ட ஒரு டிசர்டுக்கு மட்டும்தான் இது நடக்கிறதாம். இது முழுக்கவும் நிலைமின்சாரத்தால் நிகழ்வதுதான்.

கார் கதவைத் திறக்கக் கையை நீட்டும்போது ஷாக் அடித்த அனுபவமோ அல்லது விரல்களில் இருந்து தீப்பொறி பறந்த அனுபவமோ யாருக்காவது உண்டா ?. இது கடுங்குளிர் சமயத்தில் நடக்கூடியது. மிகக்காய்ந்த, மிகக்குளிரான தட்பவெப்பம் உள்ள நாளில் ஷூவைத் தரைவிரிப்பில் வேகமாகத் தேய்க்கும்போது உடலில் பல்லாயிரக்கணக்கான வோல்ட் நிலைமின்சாரம் தேங்குகிறது. பொதுவாக நம்மூரில் இது நடப்பதற்கான சாத்தியம் மிகக்குறைவு. ஏனென்றால் அந்தளவுக்குக் காய்ந்த(dry weather), குளிரான தட்பவெப்பம் பொதுவாய் இருப்பதில்லை.

பட்டாசுத் தொழிற்சாலைகள் பற்றிய பரிச்சயம் உள்ளவர்களுக்கு இது தெரிந்திருக்கும். இதுபோன்ற நிலைமின்சாரத்தால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில விதிகள் உள்ளன. பட்டாசுத் தொழிற்சாலையில் வெடிமருந்தினைத் தொட்டுவேலை செய்பவர்கள் வெளியே அங்குச் சுவரில் பதிக்கப்பட்டிருக்கும் உலோகத்தகட்டில் தனது கைகளைத் தேய்த்துவிட்டு நுழைவார்கள்.

நமது உடை நிலைமின்சாரத்தைத் தேக்கிக்கொள்வதில் முன்னிலை வகிக்கிறது. கீழே சில வகை உடைகள் நம் உடலில் தேக்கும் நிலைமின்சாரத்தின் உச்சஅளவு.

பருத்தி - 7,000 வோல்ட்ஸ்
கம்பளி - 9,000 வோல்ட்ஸ்
நைலான் - 21,000 வோல்ட்ஸ் - இந்த நேரத்தில் நாம் நிஜமாகவே இரும்புக்கை மாயாவிதான் ;-)

எனது இன்னொரு நண்பர் ஒரு குறிப்பிட்ட ஷூவை அணிந்திருக்கும் நாட்களில் எதையாவது எடுக்கக்கையை நீட்டும்போது "ஷாக்" அடிக்கும் திகில் அனுபவத்தை அடிக்கடிப் பெற்றார். காரணம் அந்த ஷூ செய்யப்பட்டிருந்த செயற்கைப் பாலிமரின் கைங்கர்யம்தான்.

நண்பர்களே, உங்களில் யாருக்காவது இதுபோன்ற நிலைமின்னதிர்ச்சி அனுபவம் உண்டா ?.
| | |
Comments:
இந்த குளிர்காலத்தில் 'நிலை மின்சாரம்' என்பது ஒரு பழக்க தோஷமாகவே மாறிவிட்டது.
அலுவலகத்தில் இப்போது இரும்பில்லான எதைத்தொட நேர்ந்தாலும் முதலில் நுனிவிரலால் தொட்டுப்பார்த்துவிட்டுத்தான் பின்னர் மற்ற விரல்களால் தொடர்கிறேன். சில சமயம், 'ஷாக்' அடிக்காதபோது, அட ஏன் இப்படி ஆகி விட்டேன் என என்னை நானே நொந்து கொள்வதும் உண்டு!

அப்படியே, இரும்புக்கை மாயாவியையும் நினைவு படுத்தி விட்டீர்கள். கூடவே காமிக் புத்தகங்களுக்காக காத்திருந்த அந்தநாள் நினைவுகளை!
 

//அலுவலகத்தில் இப்போது இரும்பில்லான எதைத்தொட நேர்ந்தாலும் முதலில் நுனிவிரலால் தொட்டுப்பார்த்துவிட்டுத்தான் பின்னர் மற்ற விரல்களால் தொடர்கிறேன்.//

ஜீவா,
பக்கத்தில் இருப்பவரை ஒரு விரலால் தொட்டுப் பாருங்கள் :~).
 

எனக்கு இருக்கிறது.
கார் கதவைத் தொடும் போதும் வேலையிடத்தில் உரிய கொழுவியில் ஐக்கற்றைக் கொழுவும் போதும்..
இன்னும் பல சந்தர்ப்பங்களில். இப்போதெல்லாம் காருள் ஏறும் போதும் காரிலிருந்து இறங்கும் போதும் புறங்கையால் மெதுவாகத் தட்டி விட்டே சரியான முறையில் பிடிக்கிறேன்.
 

சந்திரவதனா,
கேட்கச் சுவாரசியமாய் இருக்கிறது (ம்ம் .. இருக்கும், தனக்கு ஷாக் அடித்தால்தானே தெரியும் :-) ).
கார் கதவைத் திறக்கக் கைநீட்டியவுடன் விரலிலிருந்து தீப்பொறி பறக்கக் கண்டிருக்கிறீர்களா ?.
 

அடுத்தவரை தொடும் போது என்ன? காரை தொடும்போது கூட தீப்பொறி பறக்கக் கண்டிருக்கிறேன். எனக்கு ஒரு பெரிய கவலை. கையில் பறக்கும் தீப்பொறி காலில் பறக்கவில்லையே என்று. அப்படி பறந்தால் சூப்பர் ஸ்டாருக்கு இணையாகி கோட்டையை பிடித்திருப்பேன். அட்லீஸ்ட் வாயில் பொறி பறந்தால் கனல் கக்கும் வசனம் பேசும் பெர்ய அரசியல்வாதி ஆகியிருப்பேன்.
 

விஜய்,
ரஜினி சிகரட்டை தீப்பெட்டியே இல்லாமல் முறைத்துப் பார்த்து பற்ற வைப்பதுகூட நடக்கக்கூடியதுதானோ .. ? , அதுபோல் முயன்று பார்த்திருக்கிறீர்களா ? :-)
 

முத்து அவர்களே!
அருமையான கட்டுரை!
எனக்கு அண்மைக்காலமாக இதே பிரச்சனையுண்டு! பல மணித்தியாலயங்கள் கணனியில் வேலை செய்துவிட்டு கதவை தொட்டால் போதும் நெருப்பு பொறி பறக்கும், இதனால் உடலுக்கு ஏதேனும் ஆபத்து வருமா? இதை இல்லாமல் செய்ய வழியுண்டா?
 

முத்து! ஹரி உன்னை மருத்துவ ஆலோசகராக ஆக்கிவிட்டுட்டார். அதை தக்க வைக்க பதில் சொல்லிடு. எனக்கும் கூட தெரிந்து கொள்ள ஆசை தான்.
 

ஹரி அவர்களே,
இது சாதாரணமாய் குளிர்காலத்தில் நடக்கக்கூடியத்தான். இதைத் தவிர்க்க அடிக்கடி நமது உடலின் மின்நிலையை சுவரைத் தொட்டு சமன் செய்துகொள்ளலாம். இது குறைந்தபடசம் மின்னதிர்ச்சி, தீப்பொறி போன்ற போன்றவற்றைக் குறைக்கும். இதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் இன்னும் ஆய்வு நிலையில் இருப்பதாய்க் கூறுகிறார்கள்.

போஸ்கோ,
கிண்டல் பண்ணாதே :-).
 

Dr.முத்து அவர்களே!
உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி
 

ingu saudi arabia-vil idhu adikkadi ellOrukkum nigazhvadhuthaan

balarajangeetha
 

பாலராஜங்கீதா,

சவுதியில் இது நடக்கிறதா?, இது எனக்குப் புதுவிஷ்யம்தான். பொதுவாய் இது குளிர்ப்பிரதேசத்தில் நடப்பதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகம். அப்புறம், உங்கள் பெயர் புதுமையாக இருக்கிறது, இதுவரை இப்பெயரைக் கேள்விப்பட்ட ஞாபகம் இல்லை.
 

முத்து, அவர் ப(பா)லராஜன் கீதா. ஷாக் அடிச்சதுல ஒட்டிட்டீங்களா :))

சரி, எனக்கு இது வழக்கமாக நிகழும் ஒன்று. குறிப்பாய் ஆய்வகத்தில், (ஆய்வுக்கூட மேலங்கியைக் கழற்றும் போது). சுவரைத் தொட்டுக்கொண்டே கழற்றுவேன். பெட்ரோல் போடும் இடங்களில் இது ஒரு ஆபத்தான விதயம். போடுவதற்கு முன் காரைத் தொட்டு மின்சாரத்தை இறக்கிக் கொள்வது அவசியம்! அதுக்குத்தான்
மனுசன் தரையில நடக்கணும்னு பெரியவங்க சொல்றது :))
 

இதென்ன பெரிசு. சில பேருக்கு வேறு சிலரை பாத்தாலே ஷாக் அடிக்கும். இத்தனைக்கும் மருத்துவக் குடும்பமா இருக்கும். அப்படியும் தான்!! தெரியுமா? இப்போ வரிசையா உதாரணம் வரும் பாருங்க!!
 

/// முத்து, அவர் ப(பா)லராஜன் கீதா. ஷாக் அடிச்சதுல ஒட்டிட்டீங்களா :))///

சுந்தரவடிவேல்,
"balarajangeetha" இப்படி இருந்தது அதுதான் அப்படியே வாசித்து விட்டேன். "பிரித்துப் பொருள் உணர்தல்" எல்லாருக்கும் வராதுதானே. அது சுந்தரவடிவேல் மாதிரி சில திறமைசாலிகளால்தான் முடியும் :-).
 

//இதென்ன பெரிசு. சில பேருக்கு வேறு சிலரை பாத்தாலே ஷாக் அடிக்கும். இத்தனைக்கும் மருத்துவக் குடும்பமா இருக்கும். அப்படியும் தான்!! தெரியுமா? இப்போ வரிசையா உதாரணம் வரும் பாருங்க!!//

மாயவரத்தான்,
நான் எழுதியிருக்கும் ஷாக் கேள்விப்பட்டதுதான். நீங்கள் சொல்லும் ஷாக் பற்றி எனக்குப் பரிச்சயம் உண்டு :-).
 

The static electricity is created when the humidity is very low. Since there is no moisture available to conduct electricity, it is stored in our body as static electricity. During winter especially in US and Europe where the air is chilled to remove its moisture (the water molecules condense and fall off), the synthetic material like Polyster, Nylon etc when rubbed with our body induces static electricity. The same materials do not cause static whe the humidity is high. This is passed on to earth through metallic doors and handle. If it is wooden door you do not get spark. There are only 2 ways to stop it
1. Avoid Polyster clothes and choose Rayon and cotton based clothes and socks
2. Use your Key chain, hold a key between your fingures and discharge the electricity painlessly on door knobs before entering a door.
 

njsridhar,
Thanks for your nice comment.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com