<$BlogRSDUrl$>

Monday, March 28, 2005

சிறிய சுனாமி ஏற்பட்டது


சுமத்திரா தீவுக்கு அருகில் ஏற்பட்ட நிலநடுக்கம் 8.5 ரிக்டர் அளவாக இருந்ததாக பஸிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கோகஸ் தீவில் சிறிய அளவிலான சுனாமி உருவானதாகவும், ஆனால் பெரிய அளவிலான சுனாமியோ அல்லது பேரழிவு ஏற்படுத்தும் சுனாமியோ இதுவரை உணரப்படவில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

பஸிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தின் சமீபத்திய அறிக்கைகளை இங்கே காணலாம்.
சமீபத்திய அறிக்கை
அதற்கு முந்தையது
| | |
Comments:
அரசு மிக விழிப்புடன் செயல் பட்டு கடலோர குடியிருப்புக்களை எச்சரித்திருக்கிறது. கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் தூங்க முடியாமல் பாதுகாப்பு தேடி இரவில் ஓடியிருக்கிறார்கள். இந்தியக் கடல் விளிம்பில் வாழ்க்கைத் தரம் சற்று குறைந்து போய்தான் விட்டது.
 

உதயகுமார்,
நீங்கள் சொலவ்துபோல் கடலோர மக்கள் வாழ்க்கைத் தரம் கவலைக்கிடமாய்த்தான் இருக்கிறது :-(.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com