Saturday, May 01, 2004
ஜி-மெயில் - உங்கள் நண்பருக்கும் ....
இதை நேற்று ஜான் போஸ்கோ சொன்னார்.. புதிதாய் ஜி-மெயில் கணக்குத் துவங்கியிருக்கும் நண்பர்கள் மேலும் இரு ஜி-மெயில் கணக்குத் துவங்க இயலும் அல்லது அவர்கள் நண்பர்களுக்கு உருவாக்கித் தர இயலும். இதை முயற்சி செய்ய விரும்பும் ஜி-மெயிலாளர்கள் (!) அவர்கள் மின்னஞ்சல் கணக்கில் முதலில் நுழையவும் அங்கே invite friend என்ற என்ற இணைப்பதைத் தட்டினால் நண்பரின் பெயரையும் , மின்னஞ்சல் முகவரியையும் கேட்கும் அவற்றைக் கொடுத்தால் உங்கள் நண்பருக்கு ஜி-மெயில் அனுப்பும் மின்னஞ்சலில் புதிதாய்க் கணக்குத் துவங்க ஒரு இணைப்பு இருக்கும். அவரால் ஒரு கணக்குத் துவங்க இயலும். இவ்வாறு மொத்தம் நீங்கள் இருவரைச் சிபாரிசு செய்ய இயலும்.
இதைப் பயன்படுத்தி நான் இன்னொரு ஜிமெயில் கணக்கு உருவாக்கியிருக்கிறேன். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.. !
Comments:
நீங்கள் தவறாக புரிந்துள்ளீர்கள் என நினைக்கிறேன்.
ஒரு நாளைக்கு 50 ஜி-மெயில் அழைப்புகளை மற்றவர்களுக்கு அனுப்பலாம்.



Post a Comment
ஒரு நாளைக்கு 50 ஜி-மெயில் அழைப்புகளை மற்றவர்களுக்கு அனுப்பலாம்.


