Monday, March 22, 2004
இசையால் வசமாகா ..... !
கடந்த சனிக்கிழமை உடன் ஆய்வு செய்யும் ஜெர்மன் நண்பரொருவர் அவரது வீட்டுக்கு அழைத்திருந்தார். நண்பருக்கு இசையில் மிக்க ஆர்வம் உண்டு. அதுவும் குறிப்பாய் பியானோ இசையில் மிக விருப்பம். அவரது 10 வயதிலிருந்து இன்றுவரை கிட்டத்தட்ட 20 வருடமாக பியானோ சாதகம் செய்து வருகிறார். அவர் அடிக்கடி சொல்லுவார் "....நாங்கள் ஒன்றும் பணக்காரக் குடும்பம் அல்ல, ஒரு சாதாரண நடுத்தர ஜெர்மானியக் குடும்பம்...." நானும் அவரிடம் இதேபோல் சில முறை சொல்லியிருக்கிறேன், ".. நாங்களும் ஒன்றும் பெரிய பணக்காரக் குடும்பமல்ல, எங்களுடையது நடுத்தர இந்தியக் குடும்பம்..." இரு வேறு நாட்டில் "நடுத்தரக் குடும்பம்" என்று ஒரே பெயரில் சொன்னாலும் கூட , எந்த அளவுக்கு ஒப்பிட முடியாதபடி இருக்கிறது என்று விரைவிலேயே தெரிந்துவிட்டது.
"..இறைவன் இசை வடிவானவன்.." , " நாதமே இறைவனின் தொடக்கம் .." "...இசையே அனைத்தும்...", "இசையால் கல்லும் உருகும் .." இப்படிப் பலவாறாய்ச் சின்ன வயது முதல் கேட்டு வந்ததால் இசையில் என்னதான் இருக்கிறதென்று தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ரொம்ப நாளாய் எனக்கு இருந்து வந்தது. ஆனால் கற்கச் சரியான வாய்ப்புத்தான் கிடைக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் "ஆர்க்கிட் ஆராய்ச்சி நிறுவனத்தில்" வேலை பார்த்தபோது பழம் நழுவி... இல்லை .. இசை நழுவி என் மீது விழுந்தது.
"...வெஸ்டர்ன் மியூசிக் படிக்கிறீங்களா அல்லது கர்நாடக சங்கீதம் படிக்கிறீங்களா..? " என்று எனது மாஸ்டர் திரு. சிவலிங்கம் கேட்ட போது கர்நாடக இசை என்று சொன்னேன். கர்நாடக இசையில் வயலின்,வாய்ப்பாட்டு,புல்லாங்குழல்,கிடார் இவற்றில் என்ன படிக்க விரும்புகிறீர்கள்..? என்று எனது மாஸ்டர் திரும்பவும் கேட்டபோதுதான் அடடே .. கர்நாடக சங்கீதத்தில் இத்தனை வகை இருக்கிறது என்பதே நினைவுக்கு வந்தது. குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் வாசிப்பதுபோல் நான் வாசித்தால் எப்படி இருக்கும் என்று மனதில் கற்பனையில் நினைத்துப் பார்த்தேன். வயலின் கற்றுக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து, மாஸ்டரிடம் அதைச் சொல்ல நினைப்பதற்கு முன்னால் அவரிடம் ஒரு புது வயலின் விலையைக் கேட்டேன் , அவர் சொன்னார் ஒரு நாலாயிரத்தில் இருந்து ஐந்தாயிரத்துக்குள் வாங்கலாம் என்றார். அன்று அது அவ்வளவு பெரிய தொகையாக இல்லைதான் இருந்தாலும் விலையைக் கேட்டவுடன் வயலின் மீது எனக்கு ஆர்வம் குறைந்துவிட்டது. எதைக் கற்றுக்கொள்ளவும் கண்டிப்பாய் அந்த இசைக் கருவியைச் சொந்தமாய் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று வேறு கராராய் மாஸ்டர் சொல்லிவிட்டார். எதுவும் வாங்காமல் சிந்து பைரவி சிவகுமார் மாதிரி வாய்ப்பாட்டில் பெரிய ஆளாய் ஆகிவிடலாமா என்று மனதில் யோசித்தபோது, வாய்ப்பாட்டு அடிப்படையைக் கற்றுக்கொள்ளவே 2 வருடம் வரை ஆகுமென்று கேள்விப்பட்டவுடன் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். புல்லாங்குழல் விலை 80 ரூபாயாய் இருந்ததால் அதன் மீது எனக்குத் திடீர் ஆர்வம் ஏற்பட்டது. இப்படிப் பல கணக்குகளைப் போட்டுப்பார்த்துவிட்டு மாஸ்டரிடம் "... கண்ணபிரான் இசைக்கும் புல்லாங்குழலில் எனக்கு ரொம்ப நாளாய்(?) விருப்பம் என்று பதில் சொன்னேன். என்னுடைய இசை(?) அனுபவங்களை இன்னொரு நாள் விரிவாய் எழுதலாமென்று இருக்கிறேன்.
இப்போது இவற்றையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் விஷயம் இதுதான். ஜெர்மன் நணபருக்கு அவரின் பெற்றோர் புதிதாய் ஒரு கிராண்ட் பியானோ வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள், அதை அவர் வீட்டுக்குப் போயிருந்தபோது காட்டினார். நாமும் இதுபோல் வாங்கி நம் வெஸ்டர்ன் மியூசிக் ஞானத்தையும்(?) பெருக்கிக்கொள்வோமா என்ற எண்ணம் மனதில் மெலிதாய் வர, அதன் விலையைப் பற்றி விசாரித்தபோது சாதாரணமாய்ச் சொன்னார் அது 75,000 யூரோதானாம். அதாவது நம்ம ஊர் பணத்துக்கு 40 லடசம் ரூபாய்க்கும் கொஞ்சம் அதிகம். அதன் விலையைக் கேட்டவுடன் கொஞ்சமல்ல , ரொம்ப அதிகமாக அதிர்ச்சி ஆகி எனது " பழைய பிளாஷ் பேக் " மனதில் ஓடி மறைந்தது. நாளைக்குத் திடீரென ஒரு அதியம் நடந்து பில்கேட்ஸை விடப் பெரிய பணக்கார ஆளாய் ஆனாலும் அவரைப் போல் 40 லட்சம் ரூபாய்க்கு கிராண்ட் பியானோ வாங்குவேனா என்று நினைத்துப் பார்த்தால் மாட்டேன் என்றுதான் தோன்றுகிறது. ஏனோ இந்த நேரத்தில் சம்பந்தமில்லாமல் ஒரு நகைச்சுவை நினைவுக்கு வருகிறது.
| | |

Comments:
Post a Comment