Friday, February 06, 2004
மோப்பம் பிடிக்கும் எலி .. !
சில நாட்களுக்கு முன் வெளியான ஆராய்ச்சிக் கட்டுரையில் சொல்லியிருக்கிறார்கள். ஏல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும், புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் ஜீன் மாற்றம் செய்த எலியை உருவாக்கியிருக்கிறார்கள்.. அவர்கள் செய்த மாற்றம் என்னவென்றால் அந்த எலியில் உள்ள ஒரு புரோட்டீனை நீக்கிவிட்டார்கள்.. அந்தப் புரோட்டீனின் பெயர் கே.வி.1.3 . நரம்பு மண்டலத்தில் தகவல்களைக் கடத்துவதுடன் இந்தப் புரோட்டீன் தொடர்புடையது .. மேலும் நுகரும் தன்மையுடன், மோப்ப சக்தியுடன் தொடர்புடையது .. அந்தப் புரோட்டீனை நீக்கிவிட்டதால் குறிப்பிட்ட அந்த எலியால் எதையும் மோப்பம் பிடிக்கமுடியாது என்று எதிர்பர்த்தார்கள் .. ஆனால் நடந்ததே வேறு .. இப்போது அந்த எலியின் மோப்பம் பிடிக்கும் திறன் ஆயிரம் முதல் பத்தாயிரம் மட்ங்கு வரை அதிகரித்துவிட்டது . இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்புதான்.. இது மணத்தை நுகர்ந்து பார்க்கத் தெரியாமல் ஆக்கும் அனொஸ்மியா என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் உதவலாம்.. அமெரிக்காவில் மட்டும் 40 லட்சம் பேர் சுவை , மோப்ப சக்திக்குறைபாடு இவற்றால் பாதிக்கப்ப்ட்டுள்ளனராம் .. மேலும் வயதாக வயதாக இந்த மோப்ப சக்தி குறைந்து கொண்டு வரும்.. இவ்வளவு ஏன் ..நம் எல்லோருக்கும் மோப்ப சக்தி ஒரே மாதிரியாக இருக்கிறதா என்ன. ? நம்முடைய நண்பர்களுக்கிடையேதான் இந்த மோப்ப சக்தி எவ்வளவு தூரம் வேறுபடுகிறது ..?இன்னொரு விஷயம் ... பொதுவாக ஆண்களைவிட பெண்களுக்கு 10 மடங்கு மோப்ப சக்தி அதிகமாம்.. அதுவும் கர்ப்பகாலங்களில் இந்த மோப்ப சக்தி இன்னும் அதிகமாய் இருக்கும். இது எல்லாவற்றுக்கும் கே.வி1.3 புரோட்டீனுக்கும் ஏதாவது தொடர்பு கண்டிப்பாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள் .
| | |
Comments:
Post a Comment