Wednesday, February 04, 2004
சர்க்கரை இல்லாத சர்க்கரை ...
கடைகளில் "சுகர் ஃப்ரீ" என்ற அறிவிப்புடன் இனிப்புத் தின்பண்டங்களைப் பார்த்ததுண்டா .. நான் சில முறை அவ்வாறு பார்த்துக் குழம்பியதுண்டு .. உண்மையில் அவை இனிப்பாக இருந்தாலும் அவற்றில் சர்க்கரை சேர்க்கப்படவில்லை .. அதில் கலந்திருப்பது ஸைலிட்டால் என்ற சர்க்கரை ஆல்கஹால் . இதனைச் செரிக்க இன்சுலின் தேவையில்லை .. எனவே சர்க்கரை நோயுள்ளவர்களும் கூட இதனைச் சாப்பிடலாம் .. மேலும் இது பற்களில் பாதிப்பை உருவாக்குவது இல்லை .. எனவே பற்பசை , சூயிங்கம் மற்றும் சில மிட்டாய்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது .. பிர்ச் மரக்கூழில் இருந்து இது பிரித்தெடுக்கப்படுகிறது .. ஆக ஆடு,கோழி,மாடு முதல் கீரை,பழம் , காய் என மரக்கட்டை வரை மனிதன் சாப்பிடுவதில் எதையும் விட்டுவைப்பதில்லை ..
| | |
Comments:
Post a Comment