<$BlogRSDUrl$>

Sunday, October 16, 2005

விமானப் பணிப்பெண், வெஜ் பர்கர், நான்

இங்கிருந்து சென்னைக்கு நான் போய்வந்தது டெல்டா ஏர்லைன்ஸில். விமானப் பயணம் சவுகர்யமாகவே இருந்தது. போகும்போது அஜித் நடித்த "ஜி" படம் விமானத்தில் திரையிட்டார்கள். அறிவிப்புக்கள் தமிழிலும் சொல்லப்பட்டன. விமானப் பணிப்பெண்கள் தமிழிலும், டமிலிலும் பேசினார்கள், இரண்டுமே நன்றாக இருந்தது :).

ஒரு விஷயத்தைக் கட்டாயம் இங்கே சொல்லியே ஆக வேண்டும். அடுத்த நாட்டிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் தமிழ் சகஜமாய் இருக்கும்போது, சென்னையிலிருந்து மதுரைக்குப் போகும் உள்நாட்டு விமானத்திலும் அதைவிட அதிகமாய்ப் புழக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. அதில் அறிவிப்புக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டில் மட்டுமே இருந்தன. அட.. சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் போகும் மக்கள் யாரும் தமிழ்பேசுபவர்கள் இல்லையோ என்று சந்தேகம்கூட வந்தது. இத்தனைக்கும் நான் வந்த விமானம் ஜெட் ஏர்வேஸ் என்ற தனியார் விமானம்தான். இதேபோன்ற ஏர்டெகான் உள்நாட்டு விமானத்திலும் இதே கதைதான். அவர்களுக்கு இதுபற்றி ஒரு வரி எழுதிப்போடலாம் என்று நினைத்தேன், இதுவரை எழுதவில்லை.

திரும்பி வரும்போது ஒரு சுவாரசியமான சம்பவம். டெல்டா விமானத்தில் நுழையும் முன்னர் பணிப்பெண்கள் பயணிகளிடம் புதிதாய் வாங்கிய பொருட்கள் பற்றி விசாரிக்கிறார்கள்.

என்னிடம் ஒரு பணிப்பெண் வந்து ஆங்கிலத்தில் ஆரம்பித்தார்.

"...நீங்கள் எதில் பேசுவீர்கள், தமிழா?, ஆங்கிலமா ?"

"..இரண்டும்..", இது நான்.

"..விமானநிலையத்தில் புதிதாய் இப்போது ஏதாவது வாங்கினீர்களா ?"

"..ஆமாம்.."

".... அதை நான் பார்க்கலாமா?, அதன் விலை என்ன?", கொஞ்சம் சீரியஸாகவே கேட்டார்.

"... விலை அதிகமில்லை, ஆனால் உங்களுக்கு அதை இப்போது உங்களிடம் காட்ட முடியாது..", நானும் சீரியஸாகவே.

இவன் கொஞ்சம் பிரச்சனை செய்யும் ஆளாக இருப்பான்போல என்று அவர் யூகிப்பதைப் பார்க்க முடிந்தது. அவர் ஏதும் பிரச்சனை செய்யும் முன்னர் நாமே சொல்லிவிடுவது நல்லது என்று நான் வாங்கியதைச் சொல்லிவிட்டேன். சொல்லி முடித்ததும் டக் என்று சிரித்து, விமானத்துக்குள் அனுப்பிவிட்டார்.

அந்தச் சிரிப்பில் இவன் சரியான குறும்புக்கார ஆள்தான் என்று நினைப்பது தெளிவாய்த் தெரிந்தது. அப்படி என்னதான் வாங்கினாய் என்று கேட்கிறீர்களா?. அதுதான் தலைப்பிலேயே இருக்கிறது. தலைப்பில் முதலில் இருப்பது இல்லை :-), இரண்டாவதாக, வெஜ் பர்கர். அதுவும் சாப்பிட்டு முடித்தபின்னர் யாரிடம் மீண்டும் காட்ட முடியும் ?, நீங்களே சொல்லுங்கள்.
| | |
Comments:
முத்து, அப்ப ஏர்போர்ட்ல எதுவும் வாங்க கூடாதா? என்ன விஷயம்ன்னு கேட்டீங்களா?
 

உஷா,
ஏர்போர்ட்ல இருக்குற கடைங்கல்ல என்ன வேணுமுன்னாலும் வாங்கலாம். ஆனா ஏர்போர்ட்டுக்குள்ள தெரியாதவங்ககிட்ட எதுவும் வாங்க வேண்டாம் அப்படின்னு சொல்றாங்க.. போதை மருந்து, வெடிகுண்டு இப்படி நமக்குத் தெரியாம நம்மகிட்ட யாராவது குடுத்துவிட்டுடுவாங்களோ அப்படின்னு சந்தேகப்படுறாங்க அவ்வளவுதான்.
 

முத்துவின் குறும்புக்கு அளவில்லையப்பா!!!
 

// முத்துவின் குறும்புக்கு அளவில்லையப்பா!!!//

:-) ;-)
 

ஆமாம், அந்த வெஜ் பர்கர் நல்லா இருந்துச்சா? என்ன விலை?
 

ஐயொ ஐயோ நானும் என்னவோ எண்டு நினைச்சன். குறுப்புக்காரன்.
 

துளசியக்கா,
வெஜ்-பர்கர் பரவாயில்லை. 45 ரூ என விலைப் பட்டியலில் இருந்தது. ஆனால் 50 ரூ வாங்கினார்கள், கேட்டால் ரூ 5 வரி என்று சொல்லி ரூ.50 க்கு பில் கொடுத்துவிட்டார்கள்.
 

நளாயினி,
உங்கள் மறுமொழிக்கு நன்றி. விமான நிலையத்தில் யாரிடமும் காட்டமுடியாத அளவுக்கு என்ன வாங்கப் போகிறேன்.. அதுவுமில்லாமல் நான் அப்பாவிப் பையனாக்கும் :).
 

அப்பாவி.. அடப்பாவி பச்சைப்பொய்.
 

முத்து., அட வந்தாச்சா?. ஊர் இப்ப எப்படி இருக்குது விரிவா எழுதுங்க.
 

nalla nakkal :)
 

Muthu, thaangal oru nalla kadai solli..
Vedikkai thangal vaadikaiyoo

anbudan
Dev http://mindcrushes.blogspot.com/
 

dai thambi,

eppadi da,

pinnura . ok every thing is good. pls help me to make myself for one blogspot. All the best

lakshmikanthan
 

டேய் லட்சுமி,
நல்லா இருக்கியா?. நீ கூட ஒன்னு இதே போல் ஆரம்பிக்கலாம். ரொம்ப ஈஸிதான். தமிழ் அல்லது ஆங்கிலம் எதில் வேண்டுமானாலும் எழுதலாம். www.blogger.com போய் ஒரு புது பிளாக் ஆரம்பிக்கலாம்.
 

What are the announcements made in Delhi-Mumbai flight?? Why Hindi announcements made in Chennai to Madurai flight??
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com