<$BlogRSDUrl$>

Sunday, June 05, 2005

பேய்கள் நடமாடும் இரவில் நான்....

பேய்களும், காட்டேறிகளும் வந்திருந்த ஒரு இரவு விருந்தில் நான் கலந்துகொண்டேன். கீழேயுள்ள படம் கொஞ்ச நாட்களுக்கு முன்னால் அங்கே எடுத்தது. ஹலோவீன் விருந்து என்ற பெயரில் இப்படியான கூத்துகள் நடக்கின்றன. நீங்கள் காணும் படத்தில், நடுவில் சக ரத்தக் காட்டேறியுடன் இருக்கும் பேய் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானதுதான். :-).

Image hosted by Photobucket.com
| | |
Comments:
முத்துத்தம்பு,

பேயோட தலை காட்டிக் குடுத்துருச்சேப்பா:-)))))

இங்கேயும் இந்தக்கூத்து நடந்துகிட்டு இருக்கு.
அக்டோபர் 31லே!!!! அதுக்குன்னே பல்லு, முகச்சாயம், கறுப்பு முகமூடின்னு பலதும் விக்குது!!!!
 

///பேயோட தலை காட்டிக் குடுத்துருச்சேப்பா///
:-))

அக்கா,
நீங்க எப்பவாவது வேசம் போட்டு இதில் கலந்துட்டிருக்கீங்களா ?
 

ஹா...ஹா...ஹா

எனக்கு 'வேஷமே' தேவையில்லை! ச்சும்மாவே 'இப்படித்தான்' இருப்பேன்:-))))))
 

இதை நான் எனக்குச் சொல்ல நினைத்தேன் :-).
 

ஏய்! முத்து நீ ரொம்ப அழகா இருக்கே!!

தலைப்பில் இருக்கும் போட்டோவில் தான் பேய் மாதிரி இருக்கிறீர். ரத்த காட்டேரியுடன் சூழ்ந்துள்ள போட்டோவில் அழகாக இருக்கிறீர்கள். பெண் பார்க்கும் போது இந்த படத்தை மட்டுமே அனுப்பவும். எடுத்தவுடனேயே ஒரு விக்கெட் அடிச்சிரலாம்.
 

விஜய்,
படத்துல இருக்குறமாதிரியான பொண்ணு பார்க்க இந்த போட்டோவைத்தான் அனுப்பனும், ஆனால் அந்த மாதிரியான பொண்ணுங்களைப் பார்க்குறது கொஞ்சம் கஷ்டம், அடிக்கடி சுடுகாடு பக்கம் இரவில் போனால்தான் சாத்தியம் :-). ஆனால் அதில் எனக்கு விருப்பம் கொஞ்சம் குறைவு. என்னோட நண்பர்கள் சிலரின் கருத்துப்படி, எந்தப் பொண்ணைக் கல்யாணம் முடிச்சாலும் கொஞ்சம் நாள் கழிச்சு படத்தில் கண்ட குழுவைச் சேர்ந்தவர்களாய் மாறிவிடுவார்களாம். பொண்ணுங்கள் பையன்களைப் பத்தி என்ன முடிவு செய்திருக்கிறார்கள் என்று உறுதியாய்த் தெரியவில்லை,(கிட்டத்தட்ட இதே மாதிரியாய் இருக்கலாம்) :-).
 

அல்வாசிட்டியாரே.. எவ்வளவு நாளா முத்துவை 'கவுக்கணும்னு' முடிவிலே இருக்கீங்க?!
 

மாயவரத்தான்,
விஜய் ரொம்பநாளா திட்டம்போட்டிருந்துருப்பார் போலத் தெரியுது. இப்பத்தான் வாய்ப்புக் கிடைச்சுருக்கு :-).
 

சாதுவான பேயா இருகீங்க முத்து....!

(முகத்துல சாந்த களை சொட்டுது!)
 

பயந்துபோய் இருக்கிறீர்கள் போலை கிடக்கு.
 

"I just came across your blog about selling on Ebayand wanted to drop you a note telling you how impressed I was with the information you have posted here. I also have a web site & blog about **keyword** selling on Ebay so I know I'm talking about when I say your site is top-notch! Keep up the great work, you are providing a great resource on the Internet here!
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com