<$BlogRSDUrl$>

Tuesday, April 26, 2005

இந்து, முஸ்லீம், கிறித்தவன், கிணற்றுத் தவளை


ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அந்தத் தவளை சின்னஞ்சிறியது. அது கண்களை இழந்து விட்டதா, இல்லையா என்று சொல்வதற்கு, நல்லவேளையாக அங்கே பரிணாமவாதிகள் யாரும் இல்லை. நம் கதைக்காக, அதற்குக் கண்கள் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழுபூச்சிகளையும் கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப் படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு, நம் தற்காலக் கிருமி ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விடயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது. ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளையொன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது.

"..நீ எங்கிருந்து வருகிறாய்?.."

"..கடலிலிருந்து.."

கடலா ? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரியதாயிருக்குமா? என்று கூறி, ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை. நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்? என்று கேட்டது கடல் தவளை. கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமோ? என்று கேட்டது.

"..சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?.."

நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக,இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்! என்று கத்தியது கிணற்றுத் தவளை.

காலம் காலமாக இருந்து வரும் கஷ்டம் இது தான். நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள்இருந்து கொண்டு என் சிறு கிணறு தான் முழுவுலகம் என்று நினைக்கிறேன். கிறித்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான் அவ்வாறே முகம்மதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அது தான் முழுவுலகம் என்று நினைக்கிறான்.

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் ஒருபகுதி.
| | |
Comments:
இக்கதையில் குறியீடுகள் நிறைய இருப்பதாய்த் தோன்றுகிறது. உற்றுப்பார்த்தால் தெரியும்.
 

பதிவிற்கு நன்றி முத்து, வேறு யாரேனும் குறியீடுகளைப்பற்றி சொல்கிறார்களா பார்கிறேன், இல்லாவிட்டால் நானே முயற்சிக்கிறேன்.
 

Jeeva

This posting has lots of boxes like characters showing up kindly fix it. But the message is excellent.
 

கே கே, பதிவு முத்துவுடையது.
அந்த பாக்ஸ்கள் ஐ.இ இல் தெரிகின்றன. ஃபையர் பாக்ஸில் அல்ல.
 

முத்து,
குறியீடுகள் பற்றி, என் எண்ணம்:
கடல் தவளையானது, பிரம்மத்தை அறிந்த தவளைபோல. கிணறோ கடலின் ஒரு சிறு பகுதி போல - அதுவே சமயம். சமயத்தின் நோக்கம் பக்குவப்படுத்துதலே.பல சமயங்கள் இருக்கலாம், ஆனால் முடிவில் அனைவரும் அறியவேண்டியது, அடையவேண்டியது கடலே.
 

நான் ஐந்து வயது வரை உலகில் எல்லோருக்கும் தமிழ் தெரியும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
 

ஜீவா,
குறியீடுகள் பற்றி நீங்கள் சொன்னதைத்தான் நானும் நினைத்தேன்.
 

கே.கே,
மறுமொழிக்கு நன்றி. அந்தப் பெட்டிகளைக் கழற்றிவிட்டேன் :-).
 

டோண்டு,
பக்கத்து ஊர் மக்கள் வேறு மொழி பேசுவார்களோ என்று எனக்குச் சந்தேகம் இருந்துவந்தது :-).
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com