<$BlogRSDUrl$>

Friday, March 11, 2005

வருகிறது - Scientific Journal - தமிழில்


உலகில் நடக்கும் அனைத்து ஆராய்ச்சிகளின்(சில ரகசிய ஆராய்ச்சிகள் தவிர) முடிவுகளும், ஆய்வுக்கட்டுரைகளாக அந்தத்துறைகளின் அல்லது பொதுவான அறிவியல் ஆய்விதழ்களில் குறிப்பிட்ட கால இடைவெளில் மாதம் தோறுமோ, வாரம் தோறுமோ வந்துகொண்டிருக்கின்றன என்பது நாம் அறிந்ததே. இத்தகைய அறிவியல் ஆய்விதழ்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ரஷ்யன், ஜெர்மன், ஜப்பானீஷ்,சைனீஷ் போன்ற சில மொழிகளிலும் புகழ்பெற்ற அறிவியல் ஆய்விதழ்கள் உண்டு.

இதுபோல் போல் பல நாடுகளிலிருந்தும் அறிவியல் ஆய்விதழ்கள் வெளிவருகின்றன. இந்தியாவில் இருந்து வரும் கரண்ட் சயின்ஸ், இந்திய அறிவியல் அகாடமி வெளியீடுகள் ஆகியவைகளும் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. இதில் கரண்ட் சயின்ஸ் இதழின் அனைத்து வெளியீடுகளும் (கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு) இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. இதுபோன்ற ஆய்விதழ்களின் விலை பெரும்பாலும் யானைவிலை, குதிரை விலை இருக்கும், ஒவ்வொரு பல்கலைக்கழகமும் இதுபோன்ற ஆய்விதழ்களைத் தங்கள் நூலகத்துக்காக வாங்கச் செலவழிக்கும்தொகை மிக அதிகம். இதுபற்றிச் சொல்ல ஆரம்பித்தால் தனியாகப் பல பதிவுகள் எழுதவேண்டிவரும்.

இதுபோன்ற அறிவியல் ஆய்விதழ் ஒன்று தமிழில் தொடங்கப்பட உள்ளது. திருச்சி பாரதிதாசன் பலகலைக்கழகம் துவங்க இருக்கும் இந்த அறிவியல் ஆய்விதழ் கணிதம், இயற்பியல்,வேதியல், உயிரியல், கணினி அறிவியல் என அனைத்தையும் உள்ளடக்கியதாய் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது (கரண்ட் சயின்ஸின் உள்ளடக்கம் அப்படியே நினைவுக்கு வருகிறது). இந்தத் தமிழ் அறிவியல் ஆய்விதழுக்கு ஆய்வாளர்கள் தங்கள் ஆராய்ச்சி முடிவுகளைத் தமிழில் எழுதி அனுப்பலாம். ஆய்வுக்கட்டுரைகள் தவிர மூலஆய்வுத்தொகுப்புரைகள் (Reviews), புத்தக மதிப்புரைகள், ஆய்வுக்குறுமடல்கள்(letters and communications), அறிவியல் செய்தித்திரட்டுகள், வல்லுநர் கருத்துக்கள் என அனைத்தையும் தமிழில் அனுப்பலாம். இது பற்றிய மேலதிகத்தகவல்கள் இங்கே காணக்கிடைக்கிறது.

இந்த முயற்சி தமிழின் வளர்ச்சிக்கு ஒரு தூண்டுகோலாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
| | |
Comments:
///
TCD Wrote,
முத்து, நான் உங்களின் கருத்திலிருந்து மாறுபடுகிறேன். Current Science has never created an impact in the scientific community and the new journal will follow suit. What one needs is high impact journals from Indian Science Organizations and not such junk publications where you can publishs anything and everything.///

TCD,
நான் Current Science அறிவியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று சொல்லவே இல்லை.ஆனாலும் "இம்பேக்ட் பேக்டர்" என்று பார்க்கும்போது கரன்ட் சயின்ஸின் தற்போதைய அளவு ஒன்றும் அவ்வளவு மோசமில்லை. அறிவியல் என்று வரும்போது உலகிற்கு பொதுவான ஒரு மொழியில் இருப்பது மிக வசதி என்பதில் மாற்றுக்கருத்து எனக்கில்லை. இம்பேக்ட் பேக்டர் அதிகமாக உள்ள ஜேர்னல் என்பது வானத்தில் இருந்து கீழே விழுவது இல்லை, நாம்தான் ஏற்படுத்த வேண்டும். நாம்தான் இம்பேக்ட் பேக்டரை அதிகரிக்கத் தேவையானதைச் செய்ய வேண்டும். இது பற்றி விரிவாய் அடுத்த பதிவில் எழுதுகிறேன், பின்னர் இது பற்றி விளக்கமாய் விவாதிப்போம் :-).
 

I simply loved ur post Muthu. Coz am able to talk about scientific research to someone who is a researcher himself.
Muthu, I agree that journals with high impact factor didnt fall from heaven. And how much Indian scientific community would love to have journals which would be HOT in their respective areas of research. But, do the publishers have a vision to make it happen ? A chemist from India, for instance, would never publish his novel results in Indian Journal of Chemistry. He would go for Angewante Chemie or Journal of American Chemical Society, Science or Nature. NanoLetters is a good example. Under able leadership, the journal is progressing leaps and bounds. Unfortunately, we dont seem to have a vision (read a editor with a vision) for creating a good reputed journal, which is in fact, a long term process. First of all, there is no wide spread readership for any indian journal. Secondly, we dont seem to have archieved the issues on the world wide web. Unless such issues are addressed, our dream a high impact journal would remain a dream. TCD
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com