<$BlogRSDUrl$>

Thursday, February 24, 2005

நீ காலில் விழு


வலைப்பூக்களில் ஏகப்பட்ட நல்ல பதிவுகள். பெரும்பாலானவை நிகழ்காலத்தின் கண்ணாடிகள். வருங்காலத்தில் நமது வலைப்பதிவுகள் இன்றையதேதியின் வாழ்வையும், செம்மையையும், அவலத்தையும் காட்டும் ஆவணமாக இருக்கப்போகின்றன என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்கும் என்று நினைக்கவில்லை.

கிறுக்கல்களில் இன்று ஒரு சுவாரசியமான பதிவு. அதற்குப் பலர் தங்களின் கருத்தையும் மொழிந்திருக்கிறார்கள். அங்கு கறுப்பி கொஞ்சம் சந்தோசத்துடன்(!) சொல்லியிருந்தார், "... பொண்ணுகளுக்கு நல்லாத்தான் மரியாதை கொடுக்கறீங்கள். ஆணுகளையே காலில விழ வைச்சிட்டா இந்த அம்மா". அதைப் பார்த்தவுடன் சட்டென தோன்றிய இதை இங்குப் பதித்துவிட்டேன்.

உண்மையில் பெண்களுக்கு மரியாதை கொடுப்பதோ அல்லது ஆண்கள் பெண்களின் காலில் விழுவதோ ஒன்றும் புதிதல்ல. அது காலங்காலமாய் இருந்து வரும் விஷயம். அது சில சமயம் வீட்டுககுள் ஒருவருக்கும் தெரியாமலும் நடப்பதுண்டு, அதைப் பற்றி நான் பேசுவதாய் நினைக்கவேண்டாம் :~).

சொல்லவந்தது, அம்மாக்களின் கால்களில் விழுவது பல நூற்றாண்டுகளாய் இருந்துவரும் விஷயம். அதில் தவறு இருப்பதாய் நானும் நினைக்கவில்லை. ஆனால் இங்கு முக்கியச் சர்ச்சையே அம்மா/மக்களின் தகுதிதான். இந்த அம்மா/மக்களின் தகுதியைப் பற்றிக் கணநேரம் சிந்திப்பவர்கள் யாரும் இப்பிரச்சனையை சீரியஸாய் எடுத்துக்கொள்வார்களா அல்லது சிறு நகைப்புடன் தத்தம் வேலையைப் பார்த்துகொண்டு போவார்களா என்று தெரியவில்லை. சரி இதை விட்டுவிடலாம்.

உண்மையில் காலில் விழுவதின் அர்த்தமே வேறு. ஒருவர் மற்றவரின் காலில் விழும்போது நிற்பவரிடம் தன்னுடைய பாவங்கள் அனைத்தையும் ஒப்படைத்துவிடுவதாய் ஐதீகம். பெற்றோர் மற்றும் பெரியோரின் காலில் விழுந்து தன்னுடைய பாவங்களை அவர்களுக்குக் கொடுத்துவிடுவதாய் ஐதீகம். இயேசு/மேரி அடுத்தவரின் பாவங்களைத் தாங்கள் ஏற்றுக்கொள்வதாய்ச் சொல்லப்படுவதையும் இத்துடன் கருத்தில் கொள்க.

காலப்போக்கில் ஏகப்பட்ட மாற்றங்கள்/திரிபுகள் நடக்கின்றன. அதில் இந்த விஷயமும் ஒரு விதிவிலக்கல்ல.
| | |
Comments:
////அதனால் அவங்க எல்லார் பாவத்தையும் தானே ஏத்துக்கிட்டாங்க! எனவே ஸ்ட்ரெயிட்டா டிராபிக் பிரச்னையே இல்லாம நரகம்தான்...! அப்படியா? ///

யாருப்பா அது,
இல்லாட்டிகூட ஸ்ட்ரெய்ட்டா அங்கதான் போயியாகனும் அப்படின்னு மூலைல இருந்து அங்க சவுண்ட் கொடுக்கறது... :)
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com