<$BlogRSDUrl$>

Sunday, May 07, 2006

சோதிடம் என்னும் அற்புதக்கலை-2

சோதிடம் என்பது முழுவதும் புரட்டு, பிற்போக்கானது என்று கூறுவது மிக எளிதானது. இதைக் கூற எவருக்கும் முழு உரிமை உண்டு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் இதைக் கூறுவதற்கு முன்னர் அவருக்குச் சோதிடத்தின் அடிப்படைகள் , தன்மைகள், ஆகியவற்றைப் பற்றி அறிவுப் பூர்வமான பரிச்சயம் இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தைப் பற்றிய முடிவையும் எடுப்பதற்கு முன்னால் எந்தப் பக்கமும் சாயாத தராசு முள்ளின் நடுநிலைத் தன்மை அவ்விஷயத்தைப் பற்றி மனதுக்கு இருக்கவேண்டும். அதன் தன்மைகள், அதைப் பற்றிய உங்களின் சொந்த அனுபவங்கள், அந்தச் சொந்த அனுபவங்களின் உண்மையான பின்புலம், இவற்றுடன் எதையும் ஆய்வு நோக்கில் சீர்தூக்கிப் பார்க்கும் தன்மை இவையனைத்தும் இருப்பின் ஒருவர் சோதிடம் என்பது முற்றிலும் மூடநம்பிக்கை, ஏமாற்றுப் புரட்டு என்று கூறவே மாட்டார்.

சோதிடம் புரட்டு என்ற முடிவை ஒருவர் தன்னுடைய முன்முடிவின் காரணமாகவோ, மெரினா பீச்சில் கையில் குச்சியுடன் குறி பார்க்கும் பெண்ணிடம் ஒரு தடவை பேசியதை வைத்தோ, தெருவில் போகும் கிளிஜோசியக்காரரிடம் சிறு வயதில் சோதிடம் பார்த்ததை வைத்தோ, தொலைக்காட்சியில் இப்போது அடிக்கடி வரும் பெயர் ராசி, அதிர்ஷ்டக்கல் என விதவிதப் பெயர்களில் அடுக்கடுக்காய் வரும் நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பார்த்தோ, சுயலாபத்துக்காய்ப் பித்தலாட்டம் செய்யும் ஏமாற்றுப் பேர்வழிகளைப் பார்த்தோ ஒருவர் எடுப்பாரானால் அது எத்தகைய தவறான முடிவு என்பதைச் சொல்லவே வேண்டியதில்லை.

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

என்று வள்ளுவர் சொன்ன சொல் இங்கே நினைவு கூறத்தக்கது. அதற்காய் சோதிடம் என்பது ஒரு முழுமையான இயல், அனைத்தும் சரியே என்று சொல்ல வரவில்லை. முழுமையான துறை என்பதாய் உலகில் இதுவரை எதுவும் இல்லை. இன்றைய அறிவியலை எடுத்துக் கொண்டால் அதன் வளர்ச்சி தொடர்ந்ததாய், நீண்ட நெடுங்காலமாய் இருந்து வந்திருக்கிறது, அறிவியலை இன்னும் ஆயிரக்கணக்காணோர் வளர்த்துவருகிறார்கள். ஆனால் இன்றைய அறிவியலில் வளர்ச்சி, அதற்காய் செய்யப்படும் முயற்சிகளின் அளவு ஆகியவற்றை சோதிடத்துடன் ஒப்பிட்டால் சோதிடம் என்பது சில நிமிடங்களுக்கு முன்னர் பிறந்த குழந்தை. அதன் வளர்ச்சி என்பது சொல்லிக்கொடும்படியாய் எதுவுமே இல்லை. சோதிடத்தை அனைவரும் பயன்படுத்த மட்டுமே விரும்புகிறார்கள், சோதிடத்தின் வரம்புகள், அதன் குறைகள் ஆகியவற்றை மறைக்க விரும்புவோர், குறையை மட்டுமே காட்டிக் கேலி செய்து இந்தச் சமூகத்தைத் திருத்தமுயல்வதாய் நினைத்துக்கொள்வோர், அதைத் தங்கள் சொந்த லாபத்துக்காய்ப் பயன்படுத்த விரும்புவோர் இப்படியாய் இவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் சோதிடத்தை வளர்க்க, அதன் எல்லைகளை நீட்டிக்க ஆய்வுப் பூர்வமாய்ச் சிந்திப்பவர்களின் எண்ணிக்கை பல நூற்றாண்டுகளாய் மிகக் கொஞ்சமாகவே இருந்திருக்கிறது.

இந்த நிலையில், சோதிடத்தைப் பல்கலைக்கழகப் பாடங்களில் ஒன்றாக பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகரித்தது சரியே எனச் சில நாட்களுக்கு முன்னால் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது சோதிடத்தைப் பற்றி ஆய்வுப் பூர்மாய்ச் சிந்திப்பவர்கள் இன்றும் கொஞ்சப் பேர் இருக்கவே செய்கிறார்கள் என்ற நம்பிக்கையை மனதில் எழுப்புகிறது.
(இப்பதிவு இரு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த வலைப்பதிவில் எழுதப்பட்டது)
| | |
Comments:
முத்து நீங்கள் கூறியது முற்றிலும் சரி.

என்னுடைய கீழ்கண்ட பதிவுக்கு வருகை தாருங்கள்.

புது கிரக கண்டு பிடிப்பு - ஜோதிடத்தின் பலன் மாறாது -ஏன்

http://yennottam.blogspot.com/
 

உங்கள் மறுமொழிக்கு நன்றி சூப்பர் சுப்ரா. சனிக்குப் பின்னாலுள்ள கிரகங்கள் பற்றி நீங்கள் சொன்ன விளக்கம் நன்றாய் இருக்கிறது.
 

உண்மை தான் முத்து. நிறைய ஆராய்ச்சிகள் செய்து சோதிடக் கலையை வளர்க்கவேண்டும். ஆராய்ச்சிகள் செய்யாமலேயே இது அறிவியல் பூர்வமானது இல்லை என்று சொல்லி ஒதுக்குவது சரியன்று.
 

முத்து,

//சோதிடம் புரட்டு என்ற முடிவை ஒருவர் தன்னுடைய முன்முடிவின் காரணமாகவோ
...
...
ஒருவர் எடுப்பாரானால் அது எத்தகைய தவறான முடிவு என்பதைச் சொல்லவே வேண்டியதில்லை.
//

உண்மை.

சோதிடத்தின் அடிப்படைகளை
(உதாரணமாக, நாழிகை கணக்கில் ஆரம்பித்து, சோதிடம் கணிக்கும் சூத்திரங்கள், கிரகங்களின் சுற்றும் கால அளவுகள், ராசிகள், நட்சத்திரங்கள் ஆகியன பற்றி்)
தனிப் பதிவுத் தொடராக பதியுங்களேன்.
 

உங்கள் அபிப்பிராயத்தை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் விபரமாகப் பின்னூட்டம் இட யோசனையாக இருக்கிறது.
 

குமரன்,
உங்கள் மறுமொழிக்கு நன்றி.
 

கோபி,
உங்கள் மறுமொழிக்கு நன்றி. சோதிடத்தைக் கற்றுக்கொடுக்கும் அளவுக்கோ, அல்லது ஒரு ஜாதகத்தை அலசித் திறமையாகப் பலன் சொல்லும் அளவுக்கோ இதில் நான் இன்னும் தேர்ச்சி பெறவில்லை. மற்றபடி, சோதிடம் பற்றி ஓரளவு அறிமுகம் தமிழிலேயே இணையத்தில் சில இடங்களில் கிடைக்கின்றன. இங்கே போய்ப் பாருங்களேன்.
 

///உங்கள் அபிப்பிராயத்தை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் விபரமாகப் பின்னூட்டம் இட யோசனையாக இருக்கிறது.//

கீதா,
உங்கள் மறுமொழிக்கு நன்றி. முடிந்தால் அதை comments@muthu.tk -க்கு அனுப்புங்கள். மற்றபடி, நீங்கள் விளக்கமாய்ப் பின்னூட்டம் இட்டாலும் சோதிடத்தை நம்பாதோருக்கு அது எந்த விதத்திலும் உதவப்போவதில்லை.

நீங்கள் ஏற்கனவே, சோதிடம் பற்றிய உங்களின் சில அனுபவங்களை இவ்வலைப்பதிவில் பின்னூட்டமாகக் கூறியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். அந்தப் பலன்களைக்கூறிய சோதிடர்கூட இப்போது உயிருடன் இல்லை என்றும் நீங்கள் சொன்னதாய் ஞாபகம்.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com