<$BlogRSDUrl$>

Wednesday, April 05, 2006

கடலை போடுதல் - சிறு குறிப்பு

உலகில் பலரும் பலவற்றைச் செய்தாலும், அனைவருக்கும் தாம் செய்பவற்றின் பெயர் தெரிவதில்லை. அந்த வகையில் இந்தக் "கடலை போடுதல்" அல்லது "வறுத்தல்" பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் இருந்துவந்தாலும் இந்தச் சொல்லாடல் மிகச் சமீபத்தில் உதித்ததாகவே இருக்குமென்று தோன்றுகிறது. அதிகபட்சம் 20 வருடம். அனுபவமானவர்கள் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். "கடலை" -க்கு இணையான சொற்கள் ஏதாவது பழந்தமிழ் இலக்கியத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை, சங்க இலக்கியத்தில் இருக்கக்கூடும் என்று சந்தேகம்.

உண்மையிலேயே "கடலை" பற்றித் தெரியாத அப்பாவிகளுக்காக ஒரு சிறு அறிமுகம். இளைஞர்களும், இளைஞிகளும் தனக்குப் பிடித்த எதிர்பாலருடன் காரணம் எதுவும் இல்லாமல் பேசிக்கொண்டிருப்பதே கடலையெனப்படுவதாம்.

இதற்கான பெயர்க்காரணம். மெரீனா பீச்சிலோ அல்லது தெருக்களிலோ கடலை விற்பவர்களைப் பார்த்ததுண்டா?. வெறும் டப்பாக்களில் விற்பவர்களல்ல ஈண்டு குறிப்பது. சுடச்சுட மணலுடன் முழுநிலக்கடலையை வறுத்து தள்ளுவண்டியில் இண்ஸ்டண்ட் வியாபாரம் செய்வோர்களே இப்பெயருக்குக் காரணமானார்கள். இவர்கள் வறுக்கும் கடலைக்கும் மக்களின் "கடலைக்கும்" என்ன சம்பந்தம் என்று புரியவில்லையா?. இதோ விளக்கம். கடலை வறுப்பவர்கள் யாராவது பக்கத்தில் குறைந்த பட்சம் அரைகிலோ மீட்டர் சுற்றளவில் எங்காவது இருக்கிறார்களா என்பதை எளிதாய் உணரமுடியும். பல நேரங்களில் கடலை வறுக்கும் வாணலியில் வெறும் மணலைத்தவிர ஏதும் இராது, ஆனால் ஏதோ இருப்பதுபோல் சீரியஸாய் வறுத்துக்கொண்டே இருப்பார்கள். யாராவது மக்கள் அந்த வழியாப்போனால் அவர்களின் கவனத்தைக் கவர்வதற்காகத்தான் இந்த ஏற்பாடு. சும்மா வறுத்தால் பிறர் கவனத்தைக் கவருமளவுக்குச் சத்தம் கேட்காது எனவே வாணலியின் நாலாப்பக்கத்திலும் டிரம்ஸ் போல டங் டங் என்று அவ்வப்போது ஒலியும் எழுப்புவார்கள். ஆனால், வறுப்பதற்கு நிலக்கடலையே அதில் இராது. ஆனாலும் வறுப்பார்கள்.

இப்போது புரிந்திருக்குமே. பெயர்க்காரணம் மிகப் பொருத்தமானதுதான். ஆங்கிலத்தின் இதற்கு இணையான சொல்லாய் "sweet nothing" என்பதைச் சொல்லலாமா?. எதுவுமே இல்லை ஆனாலும் இனிமையாய் இருப்பதே கடலை.
| | |
Comments:
ஆஹா... கோனார் நோட்ஸ் அளவுக்கு விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி.
அந்தக் காலத்துலே இப்படி கடலை போடாமலேயே வாழ்க்கையை ஆரம்பிச்சுட்டோமேன்னு
வருத்தமா இருக்கு.
( இதை நம்பிட்டீங்களா?)
 

அடடா!
அருமையான விளக்கம்.
இதே விசயத்துக்கு ஈழத்தில் எச்சொல்லைப் பாவிக்கிறார்களென்று எனக்குத் தெரியவில்லை.
கடலைக்குக்கூட 'கச்சான்' என்றுதான் சொல்கிறோம்.
'கச்சான் வறுப்பது' என்றும் ஒரு வழக்கமிருக்கிறது. ஆனால் அது வித்தியாசமான அர்த்தம்.
உடம்பில் எங்காவது - முக்கியமாக அரையில் கடிவந்து சொறிந்தால் அதைக் கச்சான் வறுப்பதென்று சொல்வதுண்டு;-)
 

இப்படி ஏன் பேர் வந்துச்சுன்னு இவ்ளோ நாள் தெரியாதுங்கோ..இப்படியே வேற சில நற்றமிழ்த் தொடர்களை விளக்கினீங்கன்னா நல்லா இருக்கும் ;)
 

///அந்தக் காலத்துலே இப்படி கடலை போடாமலேயே வாழ்க்கையை ஆரம்பிச்சுட்டோமேன்னு
வருத்தமா இருக்கு.
( இதை நம்பிட்டீங்களா?)///

துளசியக்கா,
உங்கள மாதிரியேதான் நானும். ( என்னுடன் படித்தவர்கள்/படிப்பவர்கள் இப்பின்னூட்டத்தைப் பார்க்காமல் இருக்கக்கடவது) :-). அப்புறம், நீங்க படித்த காலத்தில் இதற்கு என்ன பெயர்?. எவ்வளவு காலமாய் இந்தச் சொல்லாடலைக் கேள்விப்படுகிறீர்கள் என்றும் கேட்க நினைத்தேன்.
 

muthu,

engeyo poiteenga!!!!!....eppadi endha maadhiri research topic choose panni...thesis ezhdhareengalo theriyalaye??!!!!!!

Radha
 

////அடடா!
அருமையான விளக்கம்.
இதே விசயத்துக்கு ஈழத்தில் எச்சொல்லைப் பாவிக்கிறார்களென்று எனக்குத் தெரியவில்லை.////

வசந்தன்,
ஏதாவது சொல் இருக்கும். இவ்வளவு முக்கியமான விஷயத்துக்கு பெயர் இல்லாமலா இருந்திருக்கும்?. ஆனால், ஒரு இருபது வருஷத்துக்கு முன்னால் என்ன சொல் இருந்தது என்று தெரியவில்லை. அந்தக் காலத்தில் ஆணும் பெண்ணும் இவ்வளவு சகஜமாய் பழகும் வாய்ப்புக்கள் குறைவாய் இருந்ததென்பது வேறு விஷயம்.
 

kalakkals :-).
 

///இப்படி ஏன் பேர் வந்துச்சுன்னு இவ்ளோ நாள் தெரியாதுங்கோ..இப்படியே வேற சில நற்றமிழ்த் தொடர்களை விளக்கினீங்கன்னா நல்லா இருக்கும் ;)//

பொன்ஸ்,
நமக்குப் பேரா முக்கியம்? :-)). உங்கள் சந்தேகம் என்னவென்று சொல்லுங்கள், தெரிந்தால் சொல்கிறேன், தெரியாவிட்டாலும் யாரிடமாவது கேட்டுச் சொல்கிறேன்.
 

ராதா,
எல்லாம் கேள்வி ஞானம்தான். மத்தபடி அனுபவம் ரொம்ப குறைவு(நம்புங்க) :-).
 

நன்றி புதுப்புத்தகம்.
 

எங்க காலத்தில ஜொள்ளு. மதராஸ் பாசையாயிருக்கும்னு நினைக்கிறேன்
அன்புடன்
சாம்
 

சாம்,
இந்தச் சொல் இப்போதும் வழக்கத்தில் உள்ளது. இது கொஞ்சம் கடுப்பைக் காட்டும் சொல். நமக்குப் பிடிக்காத ஒரு ஆள் பிடித்த ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தால் - கடலை போட்டுக்கொண்டிருந்தால் இதை உபயோகிப்பது வழக்கம். நீங்கள் சொல்வதுபோல மெட்ராஸ் பாஷையாய் இருக்கலாம். கடலையும் கூட அங்கிருந்தே உருவாகியிருக்கலாம் என்ற சந்தேகமும் எனக்கு உண்டு.
 

முத்து.

கடலைபோட ஏற்ற காலநிலை, சீதோஷ்ணம், அதிகமகசூல் பெற நுணுக்கங்கள் என ஏதோ ஒரு தமிழ் வலைத்தளத்தில் படித்த ஞாபகம், பெயர்தான் நினைவில் இல்லை. மிகவும் நகைச்சுவையாக இருக்கும் அது.

வசந்தன்,

எங்கள் பக்கம் யாராவது அரிப்பு வந்து சொரிந்தால் 'பிடில் வாசிக்கிறார்' என்று சொல்லுவோம்! ஹாஹாஹா.
 

விடாது கறுப்பு,
மறுமொழிக்கு நன்றி. கடலை அனைத்து சீதோஷ்ண நிலைக்கும் ஏற்ற பயிர் என்பதே எனது கருத்து :-).
 

அஹா கெளப்பிட்டீங்களா ? என்னண்னே நம்ம சப்ஜெக்ட்டுக்கு வந்துட்டீங்க? ம்ம் நடத்துங்க :-)

கோலமாவில் கோலம் போடலாம் !
கடலை மாவில் கடலை போடமுடியுமா?
:))
 

வாங்க ஜொள்ளுப்பாண்டி,
கவலைப்படாதீங்க உங்களுக்குப் போட்டியாய் இராது, சும்மா ஒரு வெரைட்டிக்குத்தான் :-).
 

எல்லாருமே மிகமிக நன்றாகக் கடலை போட்டு இருக்கிறீர்கள்.இதில் யாருக்கும் தெரியாதது போல கோனார் நோட்ஸ் வேறு.தேவையா இது?
 

கீதா,
எல்லாருக்கும் செய்பவற்றின் பெயர் தெரிந்திருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது பாருங்கள். அதனால்தான் பெயர்க்காரணம் சொல்ல வேண்டி வந்தது. நீங்கள் படித்தபோது இதற்கு என்ன பெயரோ ? :-)
 

கடலைஸ்... - The ultimate definition.

'கடலைஸ்..' இதுதான் latest usage. கடலை போடுதல் காலத்தால் மருவி இப்போது 'கடலைஸ்' in short form. நான் கோவை எஞ்ஜினீரிங் காலேஜில் படிக்கும்போது ஒரு நண்பனுடன் இந்த வார்த்தையின் பூர்வீகத்தை ஆராயும் போது அவன் சொன்னான். 'மச்சி! சில பேரு நல்ல figure களா பார்த்து வெருமனே பேசிக்கிட்டு இருப்பாங்க. மத்தவனையும் love பண்ணா விடமாட்டான்.. தானும் செய்யமாட்டான். மெட்ராஸ் கடற்கரையில் பார்த்திருப்பயே. கடலோர வேர்கடலைகாரன், இளம் சூட்டில் நாலு கடலையை போட்டு வெறுமனே sound போட்டுகிட்டு இருப்பான். அந்த கடலையை வறுக்கவும் மாட்டான்.. வெளியில எடுத்து போடவும் மாட்டான். அது போலத்தான் இதுவும். புறநானூறு பாடல்களிலேயே ' நாய் பெற்ற தெங்கம் பழம்'னு சொல்லியிருக்கு. நாய் கிட்ட தேங்கா மாட்டினா போலத்தான்.. நாய்க்கு தேங்காவை உடச்சு தானும் திங்க தெரியாது.. மத்தவங்களையும் தின்ன விடாது. அது போல்தான் இந்த நாய்களும்.. என்று வயிற்றெரிச்சலோடு சொன்னான்.

உங்கள் சிறு குறிப்பு பழைய நினைவுகளை கிளறி விட்டு விட்டது.. மீண்டும் பழைய காலத்திற்கு சில நிமிடங்கள் என்னை கொண்டு போனதிற்கு மிக்க நன்றி !!
 

ஸ்ரீதர்,
ஆக, சங்க இலக்கியத்திலே சொன்ன "நாயின் தெங்கம்பழம்" யாரோ வயிரெரிந்த புலவர் இதற்காக எழுதியதுதானா? :-).
 

கடலைபோடுதலைப் பற்றி நானும் நமது முத்தமிழ்மன்றத்திம் சிரிப்பு பகுதியில் எழுதியதாக நினைவு.
 

//இளைஞர்களும், இளைஞிகளும் தனக்குப் பிடித்த எதிர்பாலருடன் காரணம் எதுவும் இல்லாமல் பேசிக்கொண்டிருப்பதே கடலையெனப்படுவதாம்.//

கடலைக்கான அருமையான வரையறை. இக்கட்டுரையைப் படிக்கின்ற போது தான் கடந்த நிகழ்வுகள் கொஞ்சம் பின்னோக்கி வருகிறது.
 

மூர்த்தி,
மறுமொழிக்கு நன்றி.
 

//இக்கட்டுரையைப் படிக்கின்ற போது தான் கடந்த நிகழ்வுகள் கொஞ்சம் பின்னோக்கி வருகிறது.//

போஸ்கோ,
கடந்த கால நினைவுகள் மட்டும்தானா?? ;-)
 

Muthu... Ungala pathi theriyatha???? Tamil ponnuka mattum illa.. Ippa pala mozhikalil kadalai podukirirkal.
 

ஜெய்,
ஒரு அப்பாவிப் பையனைப் பத்தி இப்படித் தப்பாய்ச் சொல்லாதீங்க ;-).
 

Muthu,
கடலை என்ற அற்புதமான சொல்லாடலை GCT யில் படிக்கும்போது அறிந்தேன் !!! எனவே, ஒரு 25 வருடங்களாக புழக்கத்தில் உள்ளது என்று நிச்சயமாகக் கூற இயலும் ;-) நன்றி.

"கடலை" is mentioned here:
http://balaji_ammu.blogspot.com/2006/04/gct-part-2.html
 

ரொம்ப உபயோகமான(!) பதிவுங்க. வாசித்து, ரசித்து, சிரித்தேன்.
 

மறுமொழிக்கு நன்றி சேதுக்கரசி. உங்க பெயர் நன்றாக இருக்கிறது, இது நிஜப்பெயரா இல்லை புனைப்பெயரா?.
 

மறுமொழிக்கு நன்றி பாலா.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com