<$BlogRSDUrl$>

Wednesday, April 05, 2006

கூண்டோடு நீக்கம் - ஜெ அதிரடி

ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் எப்போதும் அதிரடியாகவே இருக்கும் என்பது அவரின் தனிச்சிறப்பு. பாண்டிச்சேரி உருளையன் பேட்டையில் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் நேரு. பின்னர் அவர் மாற்றப்பட்டு நடிகர் ஆனந்தராஜ் போட்டியிடுவதாய் அறிவிக்கப்பட்டது. இது அத்தொகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது. நேருவின் ஆதரவாளர்கள் ஆதரவாளர்கள் ஆனந்தராஜுக்கு எதிராய் கலாட்டாவில் ஈடுபட்டனர். இது வேறு கட்சியில் நடந்திருந்தால் என்ன நடந்திருக்குமோ தெரியாது, அதிமுகவில் நடந்தால் நடவடிக்கை எப்படி இருக்குமென்று பாருங்கள். இந்தக் கிளர்ச்சியில் ஈடுபட்ட அத்தனைபேரும் கூண்டோடு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில் அத்தொகுதியின் செயலாளர்கள், துணைச்செயலாளர்கள் மட்டுமல்ல, முதலில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரும் அடக்கம். சில நாட்களுக்கு முன்னால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர், இன்று கட்சியில்கூட இல்லை. இது எப்படி இருக்கு..?(ரஜினி ஸ்டைலில் வாசிக்க).
| | |
Comments:
சூப்பர் நைனா.
 

நன்றி புதுப்புத்தகம்.
 

கட்சியினரை அடக்கி வைத்துள்ளார் என்பது எல்லாம் சிறுபிள்ளைத்தனமான வாதங்கள். கேள்வி கேட்க யாரும் இருக்கக்கூடாது என்ற அளவிற்கு சர்வாதிகாரமாக நடப்பதை எல்லாம் நாம் புகழும் அளவிற்கு வந்துவிட்டது ஒரு சமூக சீர்கேடுதான்----Source thamizini
 

கட்சியினரை அடக்கி வைத்துள்ளார் என்பது எல்லாம் சிறுபிள்ளைத்தனமான வாதங்கள். கேள்வி கேட்க யாரும் இருக்கக்கூடாது என்ற அளவிற்கு சர்வாதிகாரமாக நடப்பதை எல்லாம் நாம் புகழும் அளவிற்கு வந்துவிட்டது ஒரு சமூக சீர்கேடுதான்
source-thamizini
 

adhudhan JJ
 

சரிதேன்...
உட்கட்சி சனநாயகம் வாழ்க...
 

இன்றைக்கு தட்ஸ் தமிழில் இதே செய்தி வந்துள்ளது. ஒரு கூடுதல் தகவல். இவர்கள் ஜெயலிதாவின் வேனைத் தாக்கவும் முயற்சித்தார்களாம். தாக்க முயற்சி செய்ததை பெரிதாகக் காட்டிக்கொள்ளாமல், நடவடிக்கையை மட்டும் பெரிதாக எடுத்திருக்கிறார்கள்.
http://thatstamil.oneindia.in/news/2006/04/05/anandharaj.html

ஜெ வேனை தாக்க முயன்ற அதிமுகவினர் நீக்கம்!
ஏப்ரல் 05, 2006

சென்னை:

பாண்டிச்சேரி மாநிலம் உருளையன்பேட்டை தொகுதி வேட்பாளராக நடிகர் ஆனந்தராஜ் அறிவிக்கப்பட்டதை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதாவின் வேன் மீது கம்பு, கொடிகளை வீசி கலாட்டா செய்த கட்சியினர் அதிமுகவிலிருந்து கூண்டோடு நீக்கப்பட்டுள்ளனர்.

முதலில் நேரு என்பவரை வேட்பாளராக அறிவித்த ஜெயலலிதா பின்னர் அவரை மாற்றிவிட்டு ஆனந்த ராஜை நிறுத்தினார்.

சில நாட்களுக்கு முன் ஆனந்தராஜுக்காக பிரச்சாரம் செய்யப் போன ஜெயலலிதாவுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதிமுகவினரே ஜெயலலிதாவின் வேன் மீது கம்புகளையும் கொடிகளையும் வீசினர்.

யார் இந்த ஆனந்தராஜ் என்று கேட்டபடி ஜெயலலிதாவைப் பார்த்து கோஷமிட்டனர். நிலைமை மோசமானதைத் தொடர்ந்து அதிமுகவினர் போலீசார் தடியடி நடத்திக் கலைத்தனர்.

இந் நிலையில் நேரு, பாண்டிச்சேரி மாநில அதிமுக துணைச் செயலாளர் செழியன், அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் லோகநாதன் ஆகிய உள்ளிட்ட 8 அதிமுகவினரை கூண்டோடு கட்சியை விட்டு நீக்கியுள்ளார் ஜெயலலிதா.

இவர்களுடன் அதிமுகவினர் எந்த உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
 

தமிழகத்தில் எந்தக் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் பின்பற்றப்படுகிறது?
கட்சியின் கணக்கை[நிதி நிலமை] கேட்ட ஒரே காரணத்தால் அமரர் M.G.R அவர்களை கலைஞர் கட்சியை விட்டு நீக்கவில்லையா? தனது மகனுக்கு சவாலாக திரு.வைகோ அவர்கள் வளர்ந்து விடுவார்கள் என்ற ஒரே காரணத்திற்காக , வைகோ மீதும் ஈழத்தமிழர்கள் மீதும் அபாண்டமாக பழி சுமத்தி வைகோ அவர்களை கலைஞர் கட்சியிலிருந்து நீக்கவில்லையா?
ஆக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் ம.தி.மு.க வைத் தவிர வேறு எக் கட்சியிலும் உட் கட்சி ஜனநாயகம் என்பது கிடையாது.
 

தரன், சிவஞானம்ஜி, பிரதீப் மற்றும் புதுப்புத்தகம் உங்கள் அனைவரின் மறுமொழிக்கும் நன்றிகள்.
 

யாழ்ப்பாணம்,
நீங்கள் சொல்வது சரிதான். மதிமுக ஆட்சிக்கு வந்தால் அக்கட்சியின் உட்கட்சி ஜனநாயகமும் தெரியவரும் :-).
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com