<$BlogRSDUrl$>

Thursday, April 06, 2006

கார்த்திக் - ஜெ நேரடி மோதல்

கார்த்திக் ஜெயலலிதாவை எதிர்த்து ஆண்டிப்பட்டியில் நிற்கப்போவதாய் அறிவித்துள்ளார். இதே செய்தி முன்பே வெளியானது, ஆனால் அவ்வாறு தான் நிற்கப்போவதில்லை, ஒரு அரசியல் தலைவரை எதிர்த்து இன்னொரு தலைவர் நிற்பது நாகரீகமில்லை என்று முன்பு மறுத்தார் கார்த்திக். இப்போது தான் ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவைத் தோற்கடிக்கப்போவதாய்க் கூறியுள்ளார். அவ்வாறு நிற்கும்பட்சத்தில் திமுக கூட்டணி மறைமுகமாய் கார்த்திக்குக்கு உதவக்கூடும். கார்த்திக்கை அதிமுகவினர் மிரட்டியதால் கடுப்பாகி இம்முடிவை அவர் எடுத்ததாய்க் கூறப்படுகிறது.
| | |
Comments:
Digging his own grave என்றால் என்னவென்று கார்த்திக்கு தெரியாதோ என்னவோ! ரெண்டு பெண்டாட்டிக்காரரான கார்த்திக் அரசியலில் முன்னேறுவது கடினம். கலைஞரை முன்னோடியாக எல்லா விஷயத்திலும் பின்பற்ற முடியுமா என்ன!
 

ஸ்ரீதர்,
கார்த்திக் அவ்வாறு ஆண்டிப்பட்டியில் நின்றால் அது ஜெயலலிதாவின் வெற்றி வாய்ப்பை நிச்சயம் பாதிக்கும். கார்த்திக் நிற்பதால் திமுகவின் ஓட்டைவிட அதிமுகவிற்கான ஓட்டுக்களே அதிக எண்ணிக்கையில் குறையும். மேலும் திமுக கூட்டணி வேட்பாளரை டம்மி ஆக்கி திமுகவின் ஓட்டுக்களை கார்த்திக் பக்கம் திருப்பிவிடும் சாத்தியமும் உண்டு.
 

அண்ணாத்தே!

இதுக்கு பேர்தான் 'அல்வா குடுக்கறது'! கார்த்திக்கை இந்த மாதிறியே சுத்தி நிக்கற ஜால்ராக்கள் ஏத்தி விட்டு குளிர் காயறாங்க. கடன் தொல்லை, பெண்டாட்டிகளின் தொல்லை, இழந்து போன மார்க்கெட், இதிலிருந்து மீள 'எத்தை தின்னா பித்தம் தெளியும்' என்று இருக்கிற கார்த்திக்கை எல்லாரும் use பண்ணிக்கறாங்க. சிவாஜி, SSR, பாக்கியராஜ், இன்னும் பல பேர்களுக்கு அல்வா கொடுத்த உலகமய்யா இது!. எலக்ஷன் முடிந்தபின் இந்த கும்பல் காணாமல் போய் விடும். பாருங்கள் 'கோமணம்' கூட மிஞ்சியிருக்காது கார்த்திக்கு!

Mark My Words!
 

இருக்கலாம். ஜெயலலிதாவை எதிர்த்து உறுதியாக ஜெயிப்பார் என்று சொல்ல முடியாது, கட்டாயம் தோற்பார் என்றும் சொல்ல இயலாது. ஆனால், அவரின் கட்சியைப் பற்றி அனைவருக்கும் தெரிந்ததுதான். அவரால் எம்ஜிஆர் அளவுக்கெல்லாம் வரமுடியாது, இது அவருக்கே நன்றாகத் தெரியும். பார்க்கலாம் என்ன நடக்குமென்று, இன்னும் ஒரு மாதம்தானே இருக்கிறது.
 

ஜெயலலிதாவை எதிர்த்து முன்னர் சுகவனம் என்ற திமுககாரர் ஜெயித்தாரே. எனவே எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
 

True! அப்போதைய situation வேறு! எதிர் அலை வீசும்போது எதனையும் சாய்த்துவிடும். இப்போதய நிலமை அப்படியல்ல! திறனாய்வு செய்யும்போது நாம் சூழலையும் கவனிக்க வேண்டும்.பல retired சினிமாகாரர்களை இது போன்ற தவறான முன்னுதாரங்களை காட்டித்தான் கவிழ்க்கிரார்கள்.அவர்களும் அதை நம்பி ஒரு self fulfilling prophecyஐ develop செய்து கொண்டு விடுகிறார்கள்.பிறகு எல்லாம் அழிந்ததும்தான் அவர்களுக்கு ஞானம் பிறக்கும்.

புறநானூற்று பாடல் ஒன்றில் ஒரு விலைமாது தனது தோழியிடம் கேட்பாள்.

'அன்னையே அனைய தோழி
உன்னையோர் உண்மை கேட்பேன்
நம்மையே புணருவோர்கள்
நமக்குமோர் இன்பம் நல்கி
பொன்னையும் பொருளையும் தந்து
பாதப் போதினில் வீழ்வதேனோ!

அதற்கு தோழி சொல்வாள்

'பொம்மென பணைத்து விம்மி
போர்மதன் மயங்கி வீழும்
கொம்மை சேர் ஸ்தனத்தினாளே!
முந்தையில் அறம் செய்யாதார்
திரவியம் சிதற வேண்டி
நம்மையும் கள்ளும் சூதும்
நான்முகன் படைத்தவாறே !

அந்த கவி இன்னாளில் இருந்தால்
அரசியலையும் அந்த listல் சேர்த்திருப்பார்.
 

மூர்த்தி,
மறுமொழிக்கு நன்றி. எதுவும் நடக்கலாம்தான்.
 

ஸ்ரீதர்,
பாட்டு நல்லா இருக்கு. பாட்டு இவ்வளவு எளிமையாய் இருப்பதைப் பார்த்ததும் இது புறநானூறை விடவும் பிற்காலத்தியதாய் இருக்குமோ என்று எண்ணத் தோன்றியது.

அரசியலையும் நம்ம பாட்டில் வருவர் சொல்லும் மூன்றையும் சேர்த்தால், சூது மற்றும் அரசியலில் பொருள் சேர்த்தவர்களும் உண்டுதான். ஆனால் அடுத்த இரண்டான மது, மாதில் இழப்பு மட்டும்தான். கால்காசு வருமானத்துக்குக்குக்கூட வழியே இல்லை. :-).

உங்கள் பின்னூட்டம் என் பழைய பதிவொன்றை மீண்டும் நினைவூட்டியது.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com