<$BlogRSDUrl$>

Sunday, April 02, 2006

சிம்ரன் பிரச்சாரம் அதிமுகவுக்கு

அதிமுகவுக்கு ஆதரவாக மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே கிளம்பியுள்ளது ஏற்கனவே நாம் அறிந்ததே. இப்போது புதிதாய் இருவர் அந்த ஜோதியில் ஐக்கியமாகியுள்ளனர். ஒருவர் தமிழ் சினிமாவின் முன்னாள் நம்பர் ஒன் சிம்ரன். மற்றொருவர் விந்தியா. இவர்களில் விந்தியா விஜயகாந்த் கட்சியில் சேர முயன்று முடியாமல் போனவர். எனவே அதிமுகவுக்கு வந்திருக்கிறார்.

அதிமுகவுக்கு ஆதரவாய் சிம்ரனின் தீவிரப் பிரச்சாரத்திலும் ஈடுபடுவார் என்று சொல்லப்படுகிறது. இதுவரை அதிமுகவில் சேர்ந்துள்ள நட்சத்திரங்கள் முரளி, விஜயகுமார், செந்தில், ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன், குண்டு கல்யாணம் மற்றும் பலர். ஆக, ஒன்று மட்டும் உறுதி. திமுகவின் பிரச்சாரத்தைவிட அதிமுகவின் பிரச்சாரம் கவர்ச்சியாக, வண்ணமயமாக இருக்கப்போகிறது.
| | |
Comments:
தங்கத்தலைவி சிம்ரன் வாழ்க.... !!!
 

'சிம்ரன்' ராம்கி,
இன்னும் கொஞ்சநாள் போனால் சிம்ரன் அதிமுகவில் ஜெயலலிதாவுக்குப் போட்டியாய் வளர்ந்துவிடுவார் போலத் தெரிகிறதே. :-)).
 

கேப்டன் வத்து சதிக்கத்தை இந்த சிம்ரன் என்ன சாதித்து விடுவார் பார்க்கலாம்.????!!!
 

மோகன்,
சாதிக்கனும்னா எல்லாரும் வர்றாங்க.. எனக்குச் சந்தேகமாத்தான் இருக்கு :-).
 

அப்ப தி.மு.க ஆவிற்கு எதிரா கவர்ச்சி அலை வீசுதுன்னு சொல்லுங்க. கோவில்பட்டி வீரலெட்சுமி சிவகாசி ஜெயலெட்சுமிய வீழ்த்துவாங்களா ?
 

சம்மட்டி,
தேர்தலில் நிற்க சீட்டே கிடைக்கவில்லை. அப்புறம் எங்கே வீழ்த்த.
 

'ஜெ' வுக்கு சரியான மாற்றுதான் சிம்ரன்!
சமீபத்திய அவர் உடல் பருமனைக் கவனித்தீர்களா!!??
'ஜெ' கூட இப்படித்தான் , 'அப்படி' இருந்து, 'இப்படி' ஆனார்!

அந்தப் பக்கம் 'இலவச அறிவிப்புகள்'
இந்தப் பக்கம் 'கவர்ச்சி திரைமுகங்கள்'

மக்கள் வெறுப்படைந்து,
'கேப்டனுக்கு' கண்ணை மூடிக் கொண்டு
ஓட்டு போட்டால் நல்லது!
 

SK,
கேப்டனுக்கு மக்கள் அவ்வளவு சீக்கிரமாய் ஆதரவு மாறுமா என்பது சரியாகத் தெரியவில்லை. நமது மக்கள் பெரும்பாலும் அறிவால் சிந்திப்பதைவிட உணர்வால் செயல்படுபவர்கள். பார்க்கலாம் என்னதான் நடக்குமென.
 

///சிம்ரன் அதிமுகவில் ஜெயலலிதாவுக்குப் போட்டியாய் வளர்ந்துவிடுவார் போலத் தெரிகிறதே.///

///'ஜெ' வுக்கு சரியான மாற்றுதான் சிம்ரன்!
சமீபத்திய அவர் உடல் பருமனைக் கவனித்தீர்களா!!??
'ஜெ' கூட இப்படித்தான் , 'அப்படி' இருந்து, 'இப்படி' ஆனார்!///

SK,
சிம்ரனை அப்படி நினைத்துப் பார்க்க அந்தளவுக்கு நல்லாயில்லை. இருந்தாலும் நான் சொன்ன வளர்ச்சி இப்படிப்பட்ட வளர்ச்சியல்ல. நான் சொல்ல வந்தது கட்சியில் செல்வாக்கைப் பற்றி. நீங்கள் கதையை மாற்றிவிட்டுட்டீங்களே:-)).
 

//நீங்கள் கதையை மாற்றிவிட்டுட்டீங்களே:-)).//

:-)))))))))))))
 

இன்னும் நம்ம நயன்தாரா எந்தப்பக்கம்னு தெரியலீங்களே!

:-)

ஹி..ஹி...

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
 

சிபி,
நீங்களும் நயனதாரா கட்சியா? ;-).

அப்புறம், உங்கள் பிளாக்கர் எண் உட்பட பல நன்றாகத் தெரியும். எனவே, ஏதாவது விவகாரமாய் உங்கள் பெயரில் வருபவற்றை நானே பார்த்துக்கொள்வேன், எனது பதிவில் இடும் பின்னூட்டங்களுக்கு தனிநகல் தேவையில்லை.
 

சிம்ரனுக்கு வாக்கு இருக்குதாங்க முதல்ல?
 

///சிம்ரனுக்கு வாக்கு இருக்குதாங்க முதல்ல?///

தயா,
யோசிக்க வேண்டிய கேள்வி :-)). ஆனா ஓட்டு இருந்தா என்ன, இல்லாட்டி என்ன ஒத்த ஓட்டில் என்ன பெரிசாய் வந்துவிடப்போகிறது என்றும் தோன்றுகிறது.
 

நம்ம சிம்ஸ் கிராமங்களில் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டதாகப் படித்தேனே.
 

சிம்ரன் ஓட்டு கேட்டாள் மக்கள் போட்டு விடுவார்களா என்ன?
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com