<$BlogRSDUrl$>

Saturday, January 07, 2006

கணவரின் தம்பி=தம்பி

நாட்டுக்கு நாடு பழக்க வழக்கங்கள் எந்த அளவுக்கு மாறுகின்றன என்று நினைத்துப் பார்த்தால் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. தெரிந்த தோழி ஒருவர் கலிங்க நாட்டைச் சேர்ந்தவர். அவர் சொன்ன பல விதயங்கள் மிக சுவாரசியமாக இருந்தன. அவற்றில் ஒன்று உறவுமுறை கொண்டாடும் விதம் மற்றும் திருமணத்துக்குப் பையன் தேடும் விதம்.

சொந்தத்தில் அங்கு யாரும் திருமணம் செய்வதில்லையாம், காரணம் மிக சுவாரசியமானது. திருமணம் முடித்தால் கணவரின் உறவுக்காரர்களை கணவர் எப்படிக்கூப்பிடுவாரோ அதேபோல்தான் மனைவிக்குமாம். கணவர் தனது அப்பாவை அப்பா என்று அழைப்பதால் மனைவியும் அவரை அப்பா என்றுதான் கூப்பிட வேண்டுமாம். மனைவியின் தம்பியை மனைவி தம்பி என்று அழைப்பதால், கணவரும் அவரை தம்பி என்றுதான் கூப்பிட வேண்டுமாம். மிக எளிய முறையாய் இருந்தாலும் இது எனக்குப் புரியவே கொஞ்ச நேரம் ஆனது. விசித்திரமாக இருக்கிறது என்று சொன்னதற்குத் தோழி சொன்னார், "..திருமணம் முடித்தபின் இருவரும் ஒருவராவதால் உறவு மட்டும் எப்படி இருவகையாக இருக்க முடியும் ..?". கேள்வி நியாயம்தான், ஆனால் எனக்குத்தான் சத்தியமாய்ப் புரியவில்லை.

இந்த உறவுமுறையில் குழப்பம் வரும் என்பதால் தூரத்து உறவினர்களுக்குக்கூடப் பெண் கொடுப்பது, எடுப்பது இல்லையாம். ஒரே வீட்டில் பெண் கொடுத்துப் பெண் எடுப்பதும் நடவாத காரியமாம். இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. திருமணத்தன்று மாப்பிள்ளை தாலி கட்டமாட்டாராம், மாலை மாற்றுவதுடன் கல்யாணம் முடிந்துவிடுமாம். நம்மூரில் வரும் முதலிரவு அங்கே நாலாம் இரவாம். அதுவரை பெண்ணும், மாப்பிள்ளையும் சந்திக்க மாட்டார்கள். நாலாம் நாள் இரவில் முதல் சம்பிரதாயம் தாலி கட்டுவதில் இருந்து ஆரம்பிக்கிறது, மற்றதெல்லாம் நமக்குத் தெரிந்ததுதான். ஆனால் என்ன தாலி கட்டுவதை மூன்றாம் நபர் யாரும் பக்கத்தில் இருந்து ஆசீர்வாதம் செய்ய அருகில் இருக்க மாட்டார்கள்.
அது போகட்டும், கலிங்க நாடு எது தெரியுமா?, நம்ம ஒரிசாதான்.
| | |
Comments:
கலிங்க நாட்டை நன்றாய்த் தெரியும் முத்து. ஆனால் இந்த வழக்கங்கள் தான் புதிது. என் நெருங்கிய நண்பர் ஒருவர் கலிங்க நாட்டைச் சேர்ந்தவர் தான். அவரிடம் கேட்கிறேன்.
 

குமரன்,
உங்கள் நண்பரிடம் கேட்டுப் பாருங்கள், இன்னும் புதிதாய் சில கிடைக்கலாம். மறுமொழிக்கு நன்றி குமரன்.
 

வாங்க முத்து! பார்த்து பலநாள் ஆச்சு! :)

இங்க இன்னொரு முத்து வந்துட்டாரு.. பதிவை திறக்கறதுக்குள்ள சின்னதா ஒரு குழப்பம் வந்துருச்சு...
 

நீண்ட நாடகளாக தங்களைக் கணவில்லை இந்தியாவில் இப்படி ஒரு கலாச்சாரம் உள்ளதா? நான் கேள்விப்பட வில்லை. விந்தியமலை தாண்டியுள்ளதால் நமது பண்பாடு அங்கு போகவில்லை போலும்.
 

ஐயா, எங்க இவ்வளவு நாள் போயிருந்தியள்?
பதிவெழுதாட்டியும் பின்னூட்டமாவது போட்டு இருக்கிறதை உறுதிப்படுத்தியிருக்கலாமெல்லோ?

சுவாரசியமான பதிவு. ஆனால் இது கணவன் மனைவி உறவுக்கு மட்டும் பொருந்தாது போல:-)
 

இளவஞ்சி,
வாங்க. நல்லா இருக்கீங்களா?. ஆமா இன்னொரு முத்து வந்திருக்கார், அடிக்கடி அவரது பேரைப்பார்க்கும்போதே எனக்கே சந்தேகம் வருது, ஒருவேளை நான் போட்ட பதிவோ என்று. நவீன இலக்கியம், அது, இது என்று அவர் கொஞ்சம் கனமான விஷயமா எழுதறார், நம்ம சாய்ஸ் எழுதறதுல பெரும்பாலும் "லைட் வெயிட்" மட்டும்தான் :-).
 

என்னார்,
வந்ததுக்கு நன்றி, ஞாபகம் வச்சுருந்ததுக்கும். கொஞ்ச நாளா பதிவு எதுவும் போடலை. இப்பதான் திரும்பவும் போட்டிருக்கேன். திடீரெனக் காணாமல் போய்த் திரும்ப வருவது வலைப்பூ உலகத்தில் சகஜம்தானே :-).
 

வசந்தன்,
எங்கேயும் போகலை, இங்கேயேதான் இருந்தேன். எழுத முடியலை. வேலைப்பளு அதிகமுன்னு கதைவிடவும் மனசில்லை. அப்பப்ப வலைமேய்ந்ததோடு சரி. இனிமேல் பின்னூட்டமாவது இட முயற்சிக்கிறேன்.

வசந்தன் நினைப்பதுபோல் கணவன்-மனைவி உறவை மாற்றினால் கதையே மாறிப்போயிடுமே :-).
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com