<$BlogRSDUrl$>

Saturday, May 14, 2005

இணைய இதழ்கள் - சிலரின் இளக்காரம்

நிலாவின் வலைப்பதிவில் இணைய இதழ்களைச் சிலர் இளக்காரமாய்ப் பேசுவது பற்றி எழுதியிருந்தார். அங்கு எழுத ஆரம்பித்துக் கொஞ்சம் பெரிதாய்ப் போனதால் அதைத் தனிப்பதிவாகவே இங்கே பதிந்துவிட்டேன்.

அச்சு இதழ்களின் ராஜ்யத்தில் ஏற்கனவே கொஞ்சம் பிரபலம் அடைந்த எழுத்தாளர்கள் மட்டுமே பிரகாசிக்க முடியும் அல்லது பிரகாசிக்கும் வாய்ப்பிருக்கும் சிலரால் மட்டுமே அதில் எழுதமுடியும். அச்சு இதழ்களுக்கு மாற்றாய் இன்றைக்கு இணைய இதழ்கள் மாறிக்கொண்டு வருகின்றன. அனைத்துப் படைப்பாளிகளுக்கும் வாய்ப்புக் கொடுத்து நிறைய எழுத்தாளர்களை உருவாக்குவது இணைய இதழ்களால் மட்டுமே முடியும். அச்சு இதழ்களாலும் முடியுமென்றாலும் அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. 20 வருஷத்துக்கு முன்னால் இணைய இதழ்கள் வந்திருந்தால் இன்றைக்கு ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் தமிழில் இருந்திருப்பர், குறைந்தபட்சம் தரமானவற்றை வாசிக்கும் மக்களின் எண்ணிக்கையாவது அதிகமாய் இருந்திருக்கும்.

தமிழில் வலைப்பூக்கள் வந்த கொஞ்சநாளில் எழுத ஆரம்பித்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் பெருகியது/பெருகிக்கொண்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் ஆகும் நாள் வெகுதொலைவில் இல்லை. இந்த ஆயிரக்கணக்கான பேர்களில் தொடர்ந்து பயிற்சிக்கும் சில நூறுபேர்களாவது திறமையான எழுத்தாளர்களாய் வருவதற்கான வாய்ப்பை கொஞ்ச நாளிலே நாம் காணமுடியும்.

இணைய இதழ்கள், வலைப்பதிவுகள் பற்றி இளக்காரமாய்ச் சொல்லப்படும் வார்த்தைகள் இணையஇதழ்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிடுமோ என்ற உள்மன அச்சத்தின் விளைவாய் வந்தவையாயும் இருக்கலாம். புதிதாய் ஏதாவதொன்று வரும்போது அதை இளக்காரமாய் மட்டம்தட்டிப் பேச முயல்வது சகஜம்தான். பிரகாசிக்கும் எழுத்தாளர்கள் சிலர் வலைப்பதிவுகளையே கூட இவ்வாறு இளக்காரமாய்ப் பேச முனைகிறார்கள். எது நிஜமென்று, குறைகளை மட்டுமே பூதக்கண்ணாடி கொண்டு தேடாமல் தொலைநோக்கில் சிந்திக்கும் எவராலும் உணரமுடியும். எழுத்து, இதழ்கள் எனப் பொதுவாழ்வில் அனைவரின் கருத்துக்களையும் சீரியஸாய் எடுத்தால் யாராலும் எதுவும் செய்ய இயலாது. உண்மை என்ன என்பது இணைய இதழ்களைப் பொருத்தவரை மிகத்தெளிவு. இப்போதுதான் தொடங்கியிருக்கும் விதயம் இது என்பதால் குறைகளும், இளக்காரமாய்ப் பேசுபவர்களும் கொஞ்சம் அதிகமாகவே இருப்பார்கள். அதிலுள்ள உண்மையை இணைய இதழ்களை நடத்துபவர்களும், எழுதுபவர்களும், அதை அக்கறையுடன் படிப்பவர்களும் அறிவார்கள்.

இணைய இதழ்களும், வலைப்பதிவுகளும் முக்கியமான பலவற்றைச் சத்தமில்லாமல் செய்துவருகின்றன. படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைப்பது அதில் முக்கியமான ஒன்று. வாசகனின் கருத்தை படைப்பாளியை எளிதாய் எட்டச் செய்வது இன்னொன்று. இன்னும் பல நேரங்களில் வாசகர்கள் சக எழுத்தாளர்களாய் இருக்கிறார்கள் என்பது இதன் சிறப்பம்சம். இவற்றால் எழுத்தாளர்களுக்கு சில அசௌரியங்கள் கட்டாயம் இருக்கும், அதனால் சிலருக்கு இதுபிடிக்காமலும் போகலாம். எழுத்துலகில் தனிமனித வழிபாட்டைக் கிள்ளித் தூர எறியப்போவது இணைய இதழ்களும், வலைப்பதிவுகளும் என்பது ஆழமாய்ச் சிந்திக்கும் எவருக்கும் புரியும். சிலர் இவற்றைத் தவிர்க்கமுயல இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம். ஆக, இத்தகைய நடைமுறைச் சிக்கல்களும், வசதிக்குறைவுகளும் எழுத்தாளர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் மட்டுமே; இவற்றால் தமிழுக்கும், இலக்கியத்துக்கும் மிகப் பெரிய நன்மைகள்தாம் நிகழப்போகின்றன.
| | |
Comments:
நன்றாகச் சொன்னீர்கள். நன்றி
 

//எழுத்துலகில் தனிமனித வழிபாட்டைக் கிள்ளித் தூர எறியப்போவது இணைய இதழ்களும், வலைப்பதிவுகளும் என்பது ஆழமாய்ச் சிந்திக்கும் எவருக்கும் புரியும்.//

உண்மைதான். ஆனால் இங்கேயும் அத்தன்மை இருக்கிறது தானே. பெருமளவில் என்றில்லாவிட்டாலும் குறிப்பிட்ட அளவிலாவது.
 

//படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைப்பது அதில் முக்கியமான ஒன்று. வாசகனின் கருத்தை படைப்பாளியை எளிதாய் எட்டச் செய்வது இன்னொன்று. இன்னும் பல நேரங்களில் வாசகர்கள் சக எழுத்தாளர்களாய் இருக்கிறார்கள் என்பது இதன் சிறப்பம்சம்.//

இந்த வரிகள் என்னைக் கவர்ந்தன. நல்ல பதிவு, முத்து.
 

must do,
வலைப்பூக்களில் தனிமனிதவழிபாடு இப்போது இருப்பதாய் நினைக்கவில்லை. புதிதாய் எழுதும் ஒருவரை ஊக்குவிக்கச் சொல்லப்படும் வார்த்தைகளுக்கும், பிரபலமான ஒருவர் எதைச் சொன்னாலும் அதைப் பெரியவிஷயமாய் எடுத்துக்கொள்வதற்குமான வேறுபாட்டை எளிதாய் உணரமுடியும்.
 

நன்றிகள் நிலா, வாய்ஸ்ஆப்விங்.
 

நல்ல பதிவு.
 

நன்றாகச் சொன்னீர்கள் முத்து.
நல்ல பதிவு.
 

சிப்பிக்குள் முத்து,

நல்ல பதிவு தலீவா.
 

தெளிவான பதிவு..
 

முத்து, நல்ல - நேர்த்தியானப் பதிவு, நன்றி!
 

முத்து! அருமை!
 

\\இவற்றால் தமிழுக்கும், இலக்கியத்துக்கும் மிகப் பெரிய நன்மைகள்தாம் நிகழப்போகின்றன.\\

அம்புட்டுச் வெரசா, இத நடக்க விட்டுருவாங்களா என்ன?
 

இஸ்மாயில் கனி, சந்திரவதனா, விஜய்,பாலாஜி-பாரி, அபூ முஹை, அப்படிப்போடு, அல்வாசிட்டி.சம்மி, மூர்த்தி அனைவரின் கருத்துக்கும் நன்றி.
 

//முத்து நல்ல பதிவு.
நீங்கள் சொன்ன காரணத்துடன் தலைமுறை இடைவெளியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.//

அல்வாசிட்டி.சம்மி,
சரிதான். என்றைக்கும் அடுத்த தலைமுறையினர் தற்போது இருப்பதைவிடவும் தாண்டிச் சிந்திப்பவர்களாகவும் , முந்தைய தலைமுறையினர் பழைய முறைகளின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருப்பார்களோ என்று தோன்றுகிறது.
 

தெளிவான பதிவு முத்து. வாழ்த்துகள்!

-மானஸாஜென்
 

நன்றி மானஸாஜென்.
 

முத்து,
நல்ல பதிவு !
pArAttukkaL
 

நன்றி பாலா.
 

முத்து,
நல்ல பதிவு !

'''அச்சு இதழ்களின் ராஜ்யத்தில் ஏற்கனவே கொஞ்சம் பிரபலம் அடைந்த எழுத்தாளர்கள் மட்டுமே பிரகாசிக்க முடியும் '''

அதுகூட அவ்விதழ்களின் சார்பான மடங்களையும், நடிகர்களையும் பற்றி துதிபாடி எழுதும்போதுதான், இதற்கு உதாரணமாக அண்மையில் ஜயேந்திரர் கைது சம்பவத்தின்போது, பிரபலம் அடைந்த மூத்த எழுத்தளர்களின் கட்டுரைகளிலும் சில வாக்கியங்களை நீக்கிவிட்டு, அவ் எழுத்தாளனின் கருத்திற்கு எதிரான கருத்தைத்தான் பத்திரிகை நிர்வாகம் பிரசுரித்தது.

இப்படியாக பக்கச்சார்புள்ள எழுத்துலகில் தனிமனித வழிபாட்டைக் கிள்ளித் தூர எறியப்போவது இணைய இதழ்களும், வலைப்பதிவுகளும்தான்.
 

குமரேஸ்,
எழுத்தாளர்கள் அச்சு ஊடகத்தில் பிரகாசிக்க சிலபல நெளிவு சுளிவுகளைத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் - பல துறைகளுக்கும் இது பொருந்தும் என்றாலும். உங்கள் கருத்துக்கு நன்றி.
 

Innaya Idhazhgal vasagargalukum ezhuthalagalukum nerukkam undakukindrana yebathil ellallavum sandhegam illai. Irupinum Innaya Idhazhgal miga perum kuraigalaga 2 vishayangalai kuralam 1.Puthithaga ezhuthubavarin kuraigal acchu idhazhgalil thiruthapaduvatharkana vaaipugal adigam. ithil adhu kuraivu 2. Thanikai (adhavadhu thani manitha nindhanaigal ellai meruvadhu).
Ivai Irandum indha Aaramba kalangalil chatru adhigamaga irrkum. Poogapoga appadipattavargali vazagarkal thavirthu viduvargal enndre ninaikiren.

- Srinivasan
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com