<$BlogRSDUrl$>

Friday, May 13, 2005

மெல்லிய இதயம் உடையோர்க்கு அல்ல

"ஆரஞ்சுப் பொருள்" எனக் குறீயீட்டுப் பெயர் சூட்டப்பட்ட ஆபத்தான வேதி்ப்பொருள் பற்றி சுந்தரவடிவேலு் மற்றும் பெயரிலி் எழுதியிருக்கிறார்கள். இப்பொருளின் பெயர் பார்ப்பதற்கு அழகாய் இருந்தாலும் அது ஏற்படுத்திய தாக்கங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இது வியட்நாம் போரில் காடுகளை அழிக்கப்பயன்படுத்தப்பட்டதாய்ச் சொன்னாலும் இந்த வேதியியலாயுதத்தை உபயோகித்த அமெரிக்காவுக்கு அதையும் தாண்டி இருக்கும் அபாயம் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.

"ஆரஞ்சுப் பொருள்" என்பது மண்ணெண்ணெய் அல்லது டீசலில் கரைக்கப்பட்ட 2,4-D(2,4dichlorophenoxy acetic acid) மற்றும் 2, 4, 5-T(2,4,5-trichlorophenoxy acetic acid) -ன் பாதிப்பாதிக் கலவைதான் இது. இதில் மாசாகக் கலந்திருக்கும் டையாக்ஸின் அதன் அபாயத்தை இன்னும் அதிகமாக்குகிறது.

இன்றுவரை இவ்வேதிப்பொருள் வியட்நாம் மக்களைத் தலைமுறை தலைமுறையாய்ப் பாதித்துவருகிறது. இதன் பாதிப்புக்குள்ளான பச்சிளங்குழந்தைகள் மற்றும் இளையோரின் சில புகைப்படங்கள் இங்கே காணக்கிடைக்கின்றன. மென்மையான மனம் படைத்தோர், மற்றும் குழந்தைகள் பார்க்க இப்படங்கள் உகந்ததன அல்ல.

புகைப்படங்கள் - 1
புகைப்படங்கள் - 2
புகைப்படங்கள் - 3
| | |
Comments:
.
 

முத்து மிகவும் டிஸ்ரேப் பண்ணும் புகைப்படங்களாக இருக்கின்றன. அமெரிக்காவின் அநியாயத்தை என்னென்பது.
 

முத்து,

"மென்மையான மனம் படைத்தோர், மற்றும் குழந்தைகள் பார்க்க இப்படங்கள் உகந்ததன அல்ல"

என்று அறிவிப்புடன் நீங்கள் Photo File ஆக போடுகின்றீர்கள், ஆனால் அண்மையில் தமிழ்த் தொலைக்காட்சி ஒன்று எந்த முன்றிவிப்பு இன்றி சில நிமிடங்களுக்கு ஒளிபரப்பியபோது வீட்டில் பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகள் எந்த அளவிற்கு பயந்திருப்பார்கள்?
 

முத்து நன்றி. இது போன்ற ஆயுதங்கள் அழிக்கும் தலைமுறையை மட்டுமல்லாது எதிர்கால தலைமுறைகளையும் (வியட்நாம் விசயத்தில் இன்றைய தலைமுறை) பாதிப்பது என்பது மிகவும் துரதிர்ஷ்டமானதும், பகிரங்கமாக கண்டிக்கப்படவேண்டியதுமாம். செய்திகளை மெதுவாக வாசிக்கிறேன் நன்றி.
 

கறுப்பி,
உண்மையிலேயே காணச் சகியாத படங்கள். சில விநாடி புகைப்படத்தில் பார்க்கும் நமக்கே தாங்க முடியவில்லை. வாழ்நாழ் முழுவதும் தலைமுறை தலைமுறையாய் நிஜத்தில் இக்கொடுமையை அனுபவிக்கும் அவர்கள் ?.
 

குமரேஸ்,
இதையா தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள் ?
 

கார்த்திக்ரமாஸ்,
துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் சம்பந்தப்பட்டவர்களுடன் நின்றுவிடும். ஆனால் இந்த வேதியியல், உயிரியல், அணுஆயுதங்கள் மிகக்கொடுமையானவை. நீங்கள் சொல்வதுபோல எந்த நாடு இதை உபயோகித்தாலும் அது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியதுதான். இதுவரை அணுஆயுதம், உயிரியலாயுதம், வேதியியலாயுதம் என அனைத்தையும் அப்பாவி அடுத்த நாட்டு மக்களிடம் உபயோகித்த நாடு ஒரேநாடுதான் :-(.
 

உண்மையில் திடுக்கிட்டுப் போனேன்! கொடுமை!.
 

நான் இதை அறிந்தேனில்லை. கெட்ட வார்த்தையாக வருகிறது.
 

முத்து, இதெல்லாம் அமெரிக்காவின் இரத்த கறை படிந்த கரங்களின் கோலங்கள். இன்னும் அதன் மற்ற கொடூரங்களை கடைவிரித்தால் அதை யாரும் பார்க்கமுடியாது!
 

APDIPODU,சுந்தரவடிவேல்,
உண்மையிலேயே இது மிக அதிர்ச்சியளிக்கும் விஷயம். அறிவியலைக் கொண்டு உலகையே வாழவைக்கமுடியும் அதே நேரத்தில் அதைவிட மிக எளிதாய் இப்பூமியை மனிதன் வாழத்தகுந்ததில்லாமல் மாற்றிவிடவும் இயலும் போலும்.
 

தங்கமணி,
இவ்வளவு செய்திருக்கும்போது/செய்துகொண்டிருக்கும்போது என்னவோ உலகையே ரட்சிக்க வந்தமாதிரி பேசுவதுதான் விந்தையாக இருக்கிறது.
 

பார்க்க முடியவில்லை முத்து. மனிதன் வாழும் காலத்தில் விதைக்கும் எதனின் பலனும் எதிர்காலத்திற்கும் போய்ச்சேர்கிறது. எந்தக் காரணங்களுமின்றித் தண்டனை அனுபவிக்கும் இந்தப் பிஞ்சுகளின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது?
 

செல்வநாயகி,
இதை எழுதும்போது எனக்கும் இதுதான் தோன்றியது. எந்தப் பாவமும் செய்யாமல் வாழ்க்கை முழுதும் துயரத்தை அனுபவிக்கும் கொடுமை மிகப் பயங்கரமானது.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com