<$BlogRSDUrl$>

Wednesday, May 04, 2005

சிந்து நாகரிகத்துக்கு முந்தையவை


தமிழக அரசின் தொல்லியல் துறை மேற்கொண்டு அகழ்வாராய்ச்சியில், 5,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய மண் பாண்டங்கள் ஏராளமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

தமிழக அரசின் தொல்லியல் துறையைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் மோதூர் பகுதியில் முகாமிட்டு அகழ்வாராய்ச்சி செய்து வருகின்றனர். இப்பகுதியில் 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் வாழ்ந்துள்ளதற்கு ஆதாரம் உள்ளது என்று கூறிய தொல்லியில் துறையின் சிறப்பு ஆணையர் டி.எஸ். ஸ்ரீதர், அங்குள்ள மலைப் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ததில் 365 விதவிதமான மண் பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், இவை யாவும் கி.மு. 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்றும் கூறினார்.

கோட்டை மேடு என்ற பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ததில் பல்வேறு அளவுகளில் உள்ள பானைகள் மற்றும் மண் பாத்திரங்களும், புதைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட தாழிகளும் கிட்டியுள்ளன. இவைகள் அனைத்தும் புதிய கற்காலம் என்றழைக்கப்படும் கி.மு. 8,000 முதல் 5,500 ஆண்டுகளுக்கு இடையிலானவை மேலும் வாசிக்க
| | |
Comments:
indha seidhiyin source enge. ?
 

அனாநிமஸ்,
"மேலும் வாசிக்க" அப்படின்னு இருக்குற இணைப்பைத் தட்டிப் பாருங்க, வெப்உலகம் இணையத்தளம் இட்டுச் செல்லும். அங்கேதான் இந்தச் செய்தி இருக்கிறது. அச்செய்தியில் கொஞ்சத்தைக் கொடுத்து மீதியைப் படிக்க விரும்புபவர்களுக்காக லிங்க் கொடுத்திருக்கிறேன்.
 

இப்போதுதான் பெரிய ice berg இன் துள்ளியூண்டு முனை தொலைதூரத்தில் தெரிவதாக இருக்கிறது. முழுதும் வெளிவர எவ்வளவு காலமாகுமோ?
 

இது உண்மையாக இருந்தால் உண்மையிலேயே மிக பெரிய செய்தி. எந்த பெரிய
பத்திரிகைகளிலும் இந்த செய்தியை காணவில்லை. அதனால்தான் வியப்பாக இருக்கிறது.
 

idhayum paarungal

http://www.sharmaheritage.com/atm_results.htm
 

முத்து, நல்ல பதிவு. ஆதிரையின் கேள்விக்குப் பதிலை அரசாங்கமும் ஊடகங்களும்தான் சொல்ல வேண்டும். ஏன் இப்படியொரு பழம்பெரும் பொக்கிஷங்களை அரசாங்கம் ஆரவாரமின்றி அமுக்க வேண்டும்? மேற்குலகத்தில் புதைபொருள் ஏதேனும் கிடைத்தால் அங்கு பரபரக்கும் பத்திரிகைகளைப் போல் நம்மூர்ப் பத்திரிகைகள் ஏன் பரபரப்பதில்லை? அரசியல். இங்கு வாழ்ந்த குடியை, வரலாற்றை அமுக்கும் அரசியல் என்பதாகத்தான் புரிந்து கொள்கிறேன். கேட்டால் நிதியுதவி இல்லையென்கும், முதலில் பசித்தோருக்குச் சோறிடுவோமென்று சாக்கு சொல்லும்.
 

ஜீவா, ஆதிரை, சுந்தரவடிவேல்,
நன்றிகள். இந்தியாவின் வரலாறு உண்மையில் தெற்கிலிருந்துதான் ஆரம்பிக்கும், வடக்கிலிருந்து ஆய்வு செய்யப்படுவது இடையில் இருந்து தொடங்கப்படுவதாகவெ இருக்கும். ஆனால் துரதிஷ்ட வசமாக இரண்டாவது மட்டுமே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com