<$BlogRSDUrl$>

Tuesday, May 03, 2005

ஜெயகாந்தனும் நாகரீகமற்ற மேடைப்பேச்சும்


உலகம் ஒரு மனிதனை மதிப்பிடுவது மாறிக்கொண்டே இருப்பது சாத்தியமானதே. தனது சொல் தன்பிரபலத்தன்மையை வைத்து எடைபோடப்படலாம், ஆனால் அது நிரந்தரமானது அல்ல; தனது சொல்லைவைத்தும் தன்னை உலகத்தினர் எடைபோடுவார்கள் என்பதை எவ்வளவு பெரிய பிரபலமும் சற்றும் மறந்துவிடக்கூடாது. ஏனென்றால் இவ்வாறு போடப்படும் எடை மிக நிலையானது. காலம் கடந்து நிற்கும் நூல்களும், அதை எழுதியவர்களின் புகழும் இந்த வகையைச் சேர்ந்தது.

சிகரங்களைத் தொட்டவர்கள் நாவடக்கத்தை கணமும் விட்டுவிடலாகாது. தான் உதிர்க்கும் சில சொற்கள்கூட தன்மீது உலகம் வைத்திருக்கும் மதிப்பின் ஆணிவேரை அசைத்துவிடக்கூடும்.

ஜெயகாந்தன் கடைசியாய் எழுதிய புத்தகம் அவர் முந்தைய புத்தகங்களின் மூலம் சம்பாதித்த மதிப்பைக் குலைத்துவிட்டதாய்ப் பலர் கவலை கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவரோ இன்னும் அதே பாதையில் மிக வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறார் என்றே அவரின் சமீபத்திய மேடைப்பேச்சுச் சொல்கிறது.
| | |
Comments:
போற்றுவார் போற்றட்டும்
புழுதிவாரித்
தூற்றுவார் தூற்றட்டும்

பெயருக்காகவும், புகழுக்காகவும், மற்றவர் தன்மீது வைத்திருக்கும் மதிப்பிற்காகவும், மற்றவர்களுக்காகவும் தன்னுடைய சொந்தக் கருத்தை அவர் மறைக்க வேண்டும் என்று அவசியமில்லை. சிகரத்தை தொட்டால் என்ன, சாக்கடையில் வீழ்ந்தாலென்ன, தனக்கு சரியென எது படுகிறதோ தனது கருத்தாக அதை சொல்வதில் தயக்கம் இருக்கக் கூடாது. இப்படித் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிற செயலைச் செய்யாமல் தனது சுயத்தை அவர் காட்டுகிறார். இதில் என்ன இருக்கிறது. அவருடைய கருத்தில் உடன்பாடில்லாதது மற்றவர் பிரச்சினை. அதற்கு ஏன் அவர் கவலைப்படவேண்டும்?
 

இளைஞன்,
தனி மனித கருத்துச் சுதந்திரத்தைப் பற்றியல்ல பிரச்சனை. அது ஏற்றுக்கொள்ளப்படலாம் அல்லது மறுக்கப்படலாம். அவரின் கருத்தை அவர் கூற அவருக்கு முழு உரிமையுண்டு என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் ஒரு முதிர்ந்த, பலர் மதிக்கும் பண்பான எழுத்தாளர் முகஞ்சுளிக்கும் சொற்களில் பேசுவதால் முதலில் ஏற்படும் அதிர்ச்சியே இவ்வாறு பிறரால் வெளிக்காட்டப்படுகிறது. இன்னும் ஒரு முறை இவ்வாறாய் அவர் பேசினாலோ, அல்லது இதைவிடவும் மோசமாய்ப் பேசினாலோ யாரும் இந்தளவுக்கு அதிர்ச்சியடையப் போவதில்லை. ஆனால் அவர் மீது பலர் கொண்டிருக்கும் மதிப்பு என்னவாகும் என்று சொல்லத் தேவையில்லை.
 

அந்த இணைய தளத்தில் எழுதப்பட்டது மிகைப்படுத்தப் பட்டவையாகவும் இருக்கலாம் முத்து.
 

ஆமாம்.. தட்ஸ் தமிழ் அப்படியே 100% உண்மை செய்திகளை தான் வெளியிடும்! அட போங்க ஸார்..!
 

அது என்ன 'மேரி'?!
 

ஜீவா,
நன்றி.

மூர்த்தி,
காஞ்சி சொன்னதும், நான் இங்கே எழுதியிருப்பதும் , தட்ஸ் தமிழ் செய்தியை வைத்துத்தான்.

அனானிமஸ்,
மூர்த்தியின் மேரி=மாதிரி :-)
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com