<$BlogRSDUrl$>

Saturday, March 26, 2005

எங்குதான் இல்லை ?


நம்மூரில் பிக்பாக்கெட், திருட்டு போன்றவை குறித்து அடிக்கடி குறைப்பட்டுக்கொள்வது உண்டு. விகிதங்கள் கூடலாம் அல்லது குறையலாம் ஆனால் அனைத்தும் எங்கும் உண்டு. சில வாரங்களுக்கு முன் பிரான்சுக்கு போனபோது ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத்தலத்தில் பார்த்த எச்சரிக்கைத் தட்டி கீழே.

Image hosted by Photobucket.com


பின்குறிப்பு:
இது அடுத்த நாட்டிலும் திருட்டு இருக்கிறது என்று உள்ளூர சந்தோஷப்பட்டுப் பதிந்தது இல்லை :-) .
| | |
Comments:
this a test comment
- Muthu
 

முத்து,

நாடு நாடாக சுற்றி வருகிறீர்கள் போல் இருக்கிறது.
ஐரோப்பாவில் இருந்தால் இதுதான் சொளகர்யம். வெவ்வேறு கலாசாரங்களையும், மனிதர்களையும் பார்க்கலாம்.
 

ஜீவா,
நீங்க சொல்றது சரிதான். சனி,ஞாயிறு என வார விடுமுறைகளில் சில மணி நேரம் செலவழித்தாலே இங்கிருந்து அடுத்த நாட்டுக்குச் சென்று வர முடிகிறது. மேலும் விசா தனித்தனியாக ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டுக்கும் வாங்கவேண்டிய அவசியம் இல்லை என்பதால் நினைத்த நேரம் கிளம்பிப் போய்வர முடிகிறது. சுற்றுவதற்கு சரியான நண்பர் குழாம் இருந்தால் மிக சவுரியம் :-).
 

மூர்த்தி,
பட்டுக்கோட்டையார் "..திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுன்னு..." பாடுனது சரியாத்தான் இருக்குது, (பாடுனது எம்ஜிஆரோ ?) :-).
 

ஃப்ரான்ஸில் பிக்பாக்கெட் ஆச்சரியமாய் இருக்கிறதா? ரொம்ப சாதாரணமய்யா! பாரிஸ் நகர மெட்ரோவில் என்னுடன் பேச்சுகொடுத்தபடி பர்ஸை சுட்டவனின் திறமையை இன்னும் வியக்கிறேன். ஆனால் ஃப்ரான்ஸை பொறுத்தவரை ஏதோ பிரஞ்சுக்காரர் அல்லாதவர் திருடுவதாக நினைப்பு. இத்தாலியின் அந்த சந்தேகத்திற்கே இடமில்லை.மிகவும் நிறுவனமயமான இத்தாலி மாஃபியா இத்தாலிகாரர்களே உள்ளனர். இத்தாலியில் பர்ஸை விட்டது அங்கொன்று இங்கொன்று இல்லை, சென்ற அனைவரிடமே ஏதாவது ஒரு கதை இருக்கும்!
 

ரோசாவசந்த்,
போன மாசம் இத்தாலி போயிருந்தேன்.
ரயிவே ஸ்டேஷனில் இறங்கியதும் எங்களைக் கூட்டிப்போக வந்த நண்பரிடம், ".. அட இந்த மிலனோ ரயில்வே ஸ்டேஷன் நம்ம மெட்ராஸ் சென்ரல ரயில்வே ஸ்டேஷன் மாதிரியே இருக்குதே ..." என்று ஆச்சரியத்துடன் சொன்னேன்.

அவர் சிரித்துக்கொண்டே சொன்னார், "...ஸ்டேஷன் மட்டுமல்ல, எல்லாமே மெட்ராஸ் மாதிரிதான். உங்க பையைப் பத்திரமா வச்சுக்கங்க, யாராவது பிடுங்கிட்டுப் போயிடப்போறாங்க.."
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com