<$BlogRSDUrl$>

Thursday, March 24, 2005

பல் விளக்க பிரஷ் வேண்டாம் ??


பல் விளக்கப் பற்பசையோ, பிரஷோ தேவையில்லையாம். இவ்வளவு ஏன் ?, தண்ணீர்கூடத் தேவையில்லையாம். கேட்கவே மிகவும் வித்தியாசமாய் இருக்கிறது. டூத் பிரஷ் தயாரிக்கும் நிறுவனமொன்று இந்தப் புதுவிதத் தொழில்நுட்பத்தை(?) அறிமுகப்படுத்தியுள்ளது. நாம் செய்யவேண்டியதெல்லாம் கிட்டத்தட்ட பிளாஸ்திரி உறைபோலிருக்கும் அந்தப் பொருளை நம் ஒரு விரலில் மாட்டி பல்லை விளக்கிவிட்டுத் தூக்கியெறியவேண்டியதுதான். ஒரு முறை பயன்படுத்தும் facial tissue paper மாதிரிதான் போலிருக்கிறது. இது விமானப் பயணத்தில் இருப்பவர்கள், பல் விளக்கச் சாதகமான சூழ்நிலையோ அல்லது நேரமோ இல்லாதவர்களுக்கு மிக உதவியாய் இருக்குமாம்.

நண்பரின் ஆங்கில வலைக்குறிப்பில் பார்த்தது இது, அவர் இதை உபயோகிக்கஆரம்பித்துவிட்டாரா என்று தெரியவில்லை,கேட்கவேண்டும் :-).
| | |
Comments:
அமெரிக்காவில் இப்படி ஒரு விளம்பரம் டி.வி யில் பார்த்திருக்கிறேன்.
பார்ப்பதற்கு, காதிலே பூ வைப்பதாகத் தோன்றுகிறது!
 

ஜீவா,
சில சமயம் சிறுவர்கள் பல் தேய்க்காமல் துணியால் பற்களைத் துடைத்துவிட்டு பல் தேய்த்ததாய் அம்மாவை ஏமாற்றுவார்கள், அதுதான் நினைவுக்கு வருகிறது.
 

அந்திமழை,
thank you for your comments.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com