Wednesday, March 02, 2005
உங்கள் தலைமுடி ஒரிஜினலா ?
கொஞ்சம் நீளமான தலைமுடி உள்ள பெண்களைப் பார்க்கும்போது முடியின் உண்மைத்தன்மை பற்றிய சந்தேகம் லேசாக வருவதுண்டு. சில நேரம் ஒட்டு வைத்து கூந்தல் நீளத்தைப் பெண்கள் கூட்டிக்கொள்வதுமுண்டு. ஆண்கள் பெரும்பாலும் தற்போது நீளமான தலைமுடி வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. தலையில் கொஞ்சம் கொஞ்சமாக முடி குறைந்து வழுக்கை விழுந்துவிட்ட பின்னர் சிலர் டோப்பா வைத்துக் கொள்வதுண்டு. ஆனாலும் அவர்களின் முடியைப் பார்த்து யாரும் பெரும்பாலும் சந்தேகப்படுவதில்லை.
முடி தலையில் தாராளமாகவே இருப்பதால் எனக்கு டோப்பா வைக்கும் அளவுக்கு நிலைமை இப்போது இல்லை :-). எனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து ஹேர்ஸ்டைலை மாற்றியதே இல்லை. சாதாரண கிராப்தான். ஆனாலும் புதிதாய்ப் பார்க்கும் சிலர் என்னுடைய தலையைச் சந்தேகத்துடன் நோக்குவதன் அர்த்தம் புரியவே இல்லை.
கொஞ்ச நாட்களுக்கு முன்னர் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தபோது ஒருவர் என் தலையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். முதலில் நான் அதைக் கவனிக்கவில்லை. கொஞ்ச நேரம் கழித்து அருகில்வந்து ஜெர்மனில் ஆரம்பித்தார்.
".... மன்னிக்க வேண்டும் ... "
"... ம்ம் .. சொல்லுங்கள்..", இது நான்.
"... உங்கள் தலைமுடி ஒரிஜினலா ..? "
எனக்கு குபீரென வ்ந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, "... ஆமாம் , ஏன் கேட்கிறீர்கள் .. ? "
"... ஒன்றுமில்லை, மிகவும் சீராக இருப்பதாய்த் தெரிகிறது , அதனால்தான் கேட்டேன்...." , என்றவர் அத்துடன் நில்லாமல் எனது தலைமுடியைத் தொட்டுப்பார்த்து உறுதிசெய்துகொண்டார். கஷ்டகாலம். வேறென்ன சொல்ல. :-).
Comments:
முத்து
உங்கள் தலைமயிர் ஆடாமல் அசையாமல் அங்கிங்கென்று துளி கூட சிலும்பாமல்
அப்படியே இருக்கிறது. உங்களது இந்தப் பதிவை வாசித்த பின்தான் கவனித்துப் பார்த்தேன்.
டோப் என்று சொன்னால் நம்பக் கூடிய விதமாகத்தான் உள்ளது.
Post a Comment
உங்கள் தலைமயிர் ஆடாமல் அசையாமல் அங்கிங்கென்று துளி கூட சிலும்பாமல்
அப்படியே இருக்கிறது. உங்களது இந்தப் பதிவை வாசித்த பின்தான் கவனித்துப் பார்த்தேன்.
டோப் என்று சொன்னால் நம்பக் கூடிய விதமாகத்தான் உள்ளது.