Sunday, January 30, 2005
காதல் காதல்
மெகாசீரியல் பார்த்துக் கண்ணீர் விடுவதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். பாசமலர் பார்த்து அழுதவர்களையும் பார்த்திருக்கிறேன். இதுபோல் நீங்கள் யாராவது சினிமா பார்த்துக் கண்ணீர்விட்டதுண்டா .. ? சமீபத்தில் வந்த காதல் படம் பலரைக் கண்ணீர்விட வைத்ததாய்க் கேள்வி. ஆனால் அதை முதலில் நான் நம்பவில்லை. மொழியே தெரியாத ஒருவர் அப்படத்தைப் பார்த்துக் குமுறி அழுதுவிட்டார். நண்பர் ஒரு மராத்தியர். அவருக்குத் தமிழ் தெரியாது. எங்களுடன் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது படத்தின் கிளைமாக்ஸைப் பார்த்துக் குமுறி அழுதுவிட்டார். எனது நண்பர்கள் சிலரும் அழுததாய்க் கேள்வி. அப்படி என்னதான் இருக்குதென்று நானும் பார்த்தேன், அந்தளவுக்கு குமுறி அழுமளவுக்கு எனக்கு அதில் ஏதுமிருப்பதாய்த் தெரியவில்லை.
"... நீ தளத்திலிருந்து விலகி இருக்கிறாய், ஒரே தளத்திலிருந்து பார்ப்பவர்களால்தான் அதைப் புரிந்துகொள்ளமுடியும்..." என்று என்னிடம் என்னென்னவோ புரியாத வார்த்தைகளில் பேசுகிறார்கள் :( . சரி இதை விடுங்கள்.
அந்த மொழி தெரியாத நண்பர் அப்படத்தைப் பார்த்தபின்னர் சில நாட்கள் கழித்து எங்களின் இன்னொரு நண்பருக்குக் கதையை அருமையாக விவரித்தார். கிளைமாக்ஸைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கும்போது குரலெல்லாம் தழுதழுக்கத் திரும்பவும் கண்கலங்கிவிட்டார். ஒண்ணுமே புரியலை..... உலகத்துல... !
Comments:
எந்த அளவுக்கு ஒன்றித்து ஒரு விசயத்தை கவனிக்கிறோம் என்பது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம். முதலில் மொழி தெரியவில்லை என்றால் நாம் மிக்க கவனம் செலுத்துவோம். அது ஒலியை விட ஒளியும் சேர்ந்தால் கவனம் நிச்சயம் கூடும். இதனோடு சேர்த்து, கவனிக்கும் விசயம் (உதாரணத்திற்கு காதல்) முக்கியமானதாக இருந்தால் சொல்லவே வேண்டியதே இல்லை.
பின் குறிப்பு: அவ்வப்போது அழுவது கண்ணிற்கு நல்லதாம். :-)



பின் குறிப்பு: அவ்வப்போது அழுவது கண்ணிற்கு நல்லதாம். :-)



நான் இதுவரைக்கும் படம் பார்க்கும்போது அழுதது ஒரே ஒரு படத்துக்குத்தான். 'துலாபாரம்' பழைய
படம்! நடிகை சாரதாவுக்கு 'ஊர்வசி'அவார்டு கிடைத்தது.
எப்பவாவது கிடைச்சால் பாருங்க!
என்றும் அன்புடன்,
துளசி.



படம்! நடிகை சாரதாவுக்கு 'ஊர்வசி'அவார்டு கிடைத்தது.
எப்பவாவது கிடைச்சால் பாருங்க!
என்றும் அன்புடன்,
துளசி.



அப்படியில்லை முத்து. சில படங்களை நீங்களாகவே மனமொன்றி அவற்றில் ஆழ்ந்துப் போகும் போது அழும் கேரக்டர்களாக மாறிப் போவது சகஜம். நான் இது வரையில் சும்மா ஜாலிக்காகத் தான் படங்களைப் பார்த்து கலாய்த்துக் கொண்டிருப்பேன். சோக காட்சியானாலும் கூட. ஆனால் நேற்று முதல் முறையாக தனியாக இருந்தப் போது "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தை ஒன்றி பார்க்கும் போது கண்கள் குளமாவதை தடுக்க முடியவில்லை. என்னையே நான் கிள்ளிப் பார்த்தேன் அது நான் தானா என்று.






காதல் படத்தை நானும் திருட்டு சவாரியில் பார்த்து முடித்தேன்
கண்ணீரும் வரவில்லை, மென்மையான வெண்ணீரும் வரவில்லை
படம் முதலிலிருந்தே ஏதோ பட்சி சொல்லிக் கொண்டே இருந்தது
இந்த லாடு லபக்குதாஸ் இல்லாத ஒன்றை பிடிக்க பார்ப்பதாக



கண்ணீரும் வரவில்லை, மென்மையான வெண்ணீரும் வரவில்லை
படம் முதலிலிருந்தே ஏதோ பட்சி சொல்லிக் கொண்டே இருந்தது
இந்த லாடு லபக்குதாஸ் இல்லாத ஒன்றை பிடிக்க பார்ப்பதாக



naan sila kadhaigaLaip padikkumbOthu kooda kaN kalanguvadhuNdu. kadaisiyaagakak kalaNgiyadhu jsri maraththadikkaaga ezhudhiya kadhai padiththuvittu






முத்து
நீங்கள் சொல்வது போல இருக்க என்னாலும் முடியவில்லை.
மனசைத் தொட்ட படங்களில் காதலும் ஒன்று. கண் கலங்குவதைத் தடுக்க முடியவில்லை.



Post a Comment
நீங்கள் சொல்வது போல இருக்க என்னாலும் முடியவில்லை.
மனசைத் தொட்ட படங்களில் காதலும் ஒன்று. கண் கலங்குவதைத் தடுக்க முடியவில்லை.


