Wednesday, April 05, 2006
கூண்டோடு நீக்கம் - ஜெ அதிரடி
ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் எப்போதும் அதிரடியாகவே இருக்கும் என்பது அவரின் தனிச்சிறப்பு. பாண்டிச்சேரி உருளையன் பேட்டையில் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் நேரு. பின்னர் அவர் மாற்றப்பட்டு நடிகர் ஆனந்தராஜ் போட்டியிடுவதாய் அறிவிக்கப்பட்டது. இது அத்தொகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது. நேருவின் ஆதரவாளர்கள் ஆதரவாளர்கள் ஆனந்தராஜுக்கு எதிராய் கலாட்டாவில் ஈடுபட்டனர். இது வேறு கட்சியில் நடந்திருந்தால் என்ன நடந்திருக்குமோ தெரியாது, அதிமுகவில் நடந்தால் நடவடிக்கை எப்படி இருக்குமென்று பாருங்கள். இந்தக் கிளர்ச்சியில் ஈடுபட்ட அத்தனைபேரும் கூண்டோடு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில் அத்தொகுதியின் செயலாளர்கள், துணைச்செயலாளர்கள் மட்டுமல்ல, முதலில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரும் அடக்கம். சில நாட்களுக்கு முன்னால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர், இன்று கட்சியில்கூட இல்லை. இது எப்படி இருக்கு..?(ரஜினி ஸ்டைலில் வாசிக்க).
| | |
Comments:
கட்சியினரை அடக்கி வைத்துள்ளார் என்பது எல்லாம் சிறுபிள்ளைத்தனமான வாதங்கள். கேள்வி கேட்க யாரும் இருக்கக்கூடாது என்ற அளவிற்கு சர்வாதிகாரமாக நடப்பதை எல்லாம் நாம் புகழும் அளவிற்கு வந்துவிட்டது ஒரு சமூக சீர்கேடுதான்----Source thamizini
கட்சியினரை அடக்கி வைத்துள்ளார் என்பது எல்லாம் சிறுபிள்ளைத்தனமான வாதங்கள். கேள்வி கேட்க யாரும் இருக்கக்கூடாது என்ற அளவிற்கு சர்வாதிகாரமாக நடப்பதை எல்லாம் நாம் புகழும் அளவிற்கு வந்துவிட்டது ஒரு சமூக சீர்கேடுதான்
source-thamizini
source-thamizini
யாழ்ப்பாணம்,
நீங்கள் சொல்வது சரிதான். மதிமுக ஆட்சிக்கு வந்தால் அக்கட்சியின் உட்கட்சி ஜனநாயகமும் தெரியவரும் :-).
Post a Comment
நீங்கள் சொல்வது சரிதான். மதிமுக ஆட்சிக்கு வந்தால் அக்கட்சியின் உட்கட்சி ஜனநாயகமும் தெரியவரும் :-).