<$BlogRSDUrl$>

Monday, January 09, 2006

ஐஸ் வீடும், நானும்

ஐஸ் வீட்டுக்குப் போயிருந்தேன் சில நாட்களுக்கு முன்னர். "ஐஸ் " என்று செல்லமாய் அழைக்கப்படுபவர் நமக்கு நன்றாக அறிமுகமானவர்தான். இதைக் கேட்டவுடன் ஐஸ்வர்யாராய் நினைவுக்கு வருவது நியாயமானதுதான். காதல் பட நாயகிகூட இவ்வாறு அழைக்கப்படுவதாய்க் கேள்வி.

நுழைவுக்கட்டணம் ஏதுமில்லை. உள்ளே வருபவர்களுக்குச் சாக்லேட் கொடுத்து உபசரித்தார்கள். ஐஸ் வீடு உள்ளே ரொம்பக் குளிராய் இருக்கும் இருக்குமென எதிர்பார்த்தால் வெளியே இருப்பதைவிட உள்ளே வெதுவெதுப்பாய்த்தான் இருந்தது. எஸ்கிமோக்கள் பனிவீடு நினைவுக்கு வந்தது. சுவரில் ஆரம்பித்துக் குளியல் தொட்டி, கட்டில் என வீட்டுக்கான பல ஐட்டங்கள் பனிக்கட்டியால் செதுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. உள்ளே நுழைபவர்களிடம் வீட்டிலுள்ள எதையும் தொடவேண்டாம் என்று அறிவித்து உள்ளே அனுப்புகிறார்கள். உள்ளே போகுமளவுக்குப் பாதுகாப்பாய் இருக்குமா என்றெண்ணிக் கொண்டே உள்ளே போனோம், நல்லவேளை மேற்கூரை பனியால் செய்யப்படவில்லை. ஐஸ் வீடு பார்க்க அழகாய்த்தான் இருந்தது.









சில வரிகளைப் படித்தவுடன் உங்கள் கற்பனைக் குதிரையை வேகமாய்த் தட்டிவிட்டு யாரும் ஒரு அவசர முடிவுக்கு வரவில்லை என்று நினைக்கிறேன். விளம்பரத்துக்காக ஒரு நிதி நிறுவனம் இப்படிப் பனிக்கட்டியால் வீட்டைக்கட்டி பார்வைக்கு வைத்துள்ளனர். ஜெர்மனி- கொலன் நகரில் ரைஹ்ன் நதிக்கரையில் நண்பர்களுடன் உலாவிக்கொண்டிருந்தபோதுதான் தற்செயலாய் இதைப் பார்த்தோம். ஐஸ் வீடு பார்க்க அழகாய்த்தான் இருந்தது.
| | |
Comments:
வீடு அட்டகாசமா இருக்கே!
அடுப்புப் பத்தவச்சு சமைக்கலாமா?:-)
 

துளசியக்கா,
அடுப்பு மட்டுமல்ல, சமையலறை, பாத்திரம் எல்லாம் இருந்திச்சு. ஒரு தடவை அங்கே சமைத்தால் அதைச் சாப்பிட வீடு இருக்குமோ இருக்காதோ? :-).
 

முத்து, சிலநாள்களுக்கு முன் தான், கனடாவில் க்யூபெக மாகாணத்தில், ஒவ்வொரு வருடமும், இப்படி ஜஸ்சினால் பெரிய ஹொட்டலை உருவாக்கி உல்லாசப்பயணிகளைக் கவருக்கின்றனர் என்பதைத் தொலைக்காட்சியில் ஆவணப்படமாய்ப் பார்த்தேன். அந்த ஜஸ் ஹொட்டலில், டான்ஸ் ஹோல்கள், பார்கள், படுக்கையறைகள் என்று ஒரு ஹொட்டலுக்குரிய சகல வசதிகளும் இருக்கிறது. இரவில் எல்லாம் தூங்கவும் செய்யலாம். கணகணப்பு அடுப்புக்களால் ஜஸ் உருவாகிக்கூடாது எனபதற்காய் fibre optics வழிமுறைகளால் வெப்பத்தை வழங்கிக்கொண்டிருந்தார்கள்.
 

முத்து, சிலநாள்களுக்கு முன் தான், கனடாவில் க்யூபெக மாகாணத்தில், ஒவ்வொரு வருடமும், இப்படி ஜஸ்சினால் பெரிய ஹொட்டலை உருவாக்கி உல்லாசப்பயணிகளைக் கவருக்கின்றனர் என்பதைத் தொலைக்காட்சியில் ஆவணப்படமாய்ப் பார்த்தேன். அந்த ஜஸ் ஹொட்டலில், டான்ஸ் ஹோல்கள், பார்கள், படுக்கையறைகள் என்று ஒரு ஹொட்டலுக்குரிய சகல வசதிகளும் இருக்கிறது. இரவில் எல்லாம் தூங்கவும் செய்யலாம். கணகணப்பு அடுப்புக்களால் ஜஸ் உருவாகிக்கூடாது எனபதற்காய் fibre optics வழிமுறைகளால் வெப்பத்தை வழங்கிக்கொண்டிருந்தார்கள்.
 

நன்றி டிசே. அந்த வீட்டில் அவர்கள் வினியோகித்த துண்டுத் தாளில் ஐஸ் ஹோட்டல் பற்றிய விளம்பரமும் இருந்தது. ஒரு வேளை நீங்கள் சொல்வதாகத்தான் அது இருக்குமோ என்னவோ.
 

இப்படி "ஷோ" வீடுகள் கட்டுவதற்கு பதில் உண்மையிலேயே எஸ்கொமோகளுக்கு இது போல் வீடு கட்டித்தரும் திட்டங்கள் உள்ளதா?
 

கார்த்திக்ரமாஸ்,
ஜெர்மனிக்காரர்கள் ஏன் எஸ்கிமோக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கப் போகிறார்கள்?. சும்மா அழகுக்காகத்தான் இதெல்லாம், அதிகப்பட்சம் மூணு வாரம் இந்த வீடு தாக்குப்பிடிச்சு நின்னாலே பெரிய விஷயம்.
 

எப்போதிருந்து இந்த ஐஸ் வீடு அங்கே உள்ளது? நாங்கள் கடந்த கோடை விடுமுறையில் அந்த இடத்துக்கும் போனோம். ஆனால் அது அப்போ, அங்கே இருந்ததா தெரியாது. இருந்திருந்தால், பார்க்காமல் விட்டு வொட்டோமே, ஹ்ம்ம்ம்ம்ம்.
 

கலை,
கோடையில் இந்த வீடு நிற்பது எளிதல்ல. கோலோன் சாக்லெட் மியூசியம் பக்கத்தில் இது இருக்கிறது. எனது யூகப்படி இது வருடத்தில் அதிக பட்சம் இரு வாரங்கள் நீடித்தாலே ஆச்சரியம்தான்.
 

/// எப்போதிருந்து இந்த ஐஸ் வீடு அங்கே உள்ளது? நாங்கள் கடந்த கோடை விடுமுறையில் அந்த இடத்துக்கும் போனோம்.////

கலை,
இப்போது எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. நீங்கள் சென்றபோது அங்குள்ள கொலன் கதீட்ரல் உச்சிவரை நீங்கள் அங்கு ஏறிப்பார்த்தீர்களா?. ஏன் கேட்கிறேனென்றால் அங்கே எழுதப்பட்டிருந்த ஏகப்பட்ட பெயர்களில் "கலை" என தமிழில் பெயிண்டால் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்ததுபோல் நினைவு.
 

அடாடா, அப்போ வேறு ஒரு கலையும் அங்கே வந்திருக்கிறார். நாங்கள் உச்சிக்கு ஏறவில்லை (விருப்பமிருந்தும் வேறு சில காரணங்களால் ஏறாமல் விட்டு விட்டோம்). அப்புறம் அந்த சொக்ளேட் மியூசியம் கூட பார்க்கப் போனபோது பூட்டி விட்டார்கள். :(
 

இன்னுமொன்று சொல்ல:) வேண்டும். அங்கே தமிழ் கோயில் ஒன்றுக்கு போனபோது சில இந்திய இளைஞர்களைக் கண்டேன். உங்கள் படத்தை இங்கே வலைப் பூவில் பார்த்திருந்ததால், அதில் நீங்களும் ஒருவராய் இருக்கலாமோ என்று பார்த்தேன். ஆனால் அதில் உங்கள் முகம் இருக்கவில்லை.
 

கலை,
ஜெர்மனியில் தமிழ் கோயிலா?. ஒரு வேளை ஹம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தீர்களோ?. இல்லையென்றால் கொலனில் ஒரு தமிழ்க்கோயில் இருக்கிறதா?.
 

ஹாம் கோவிலைத்தான் சொன்னேன். அந்த நேரம் சட்டென்று பெயர் வரவில்லை. :)
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com