<$BlogRSDUrl$>

Wednesday, May 04, 2005

ஒன்பது Vs தமிழர்கள், தமிழ் - குழப்பங்கள்


ஒன்பதில் நீண்டகாலமாய்க் குழப்பம் இருந்து வருகிறது. இப்போது அடிக்கடி எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய பேச்சுக் கேட்கிறது. மிகவும் வித்தியாசமாய் இருந்த எழுத்துக்கள் சில பத்தாண்டுகளுக்கு முன்பே திருத்தம் செய்யப்பட்டுவிட்டன. இன்னும் எளிமையாகத் திருத்தம் செய்ய முயற்சி நடைபெற்று வருகின்றது.

எண்களுக்குப் பெயர் சூட்டியதில் தமிழில் குழப்பம் இருக்கிறது. குழப்பம் எல்லா எண்களுக்கும் அல்ல, ஆனால் ஒன்பதின் வகைக்கு ( 9, 90, 900,....) இப்பிரச்சினை உண்டு.

பத்து - 1 X 10
இருபது - 2 X 10 ( இரு+பத்து)
.....
.....
எழுபது - 7 X 10 (ஏழு+பத்து)
எண்பது - 8 X 10 (எட்டு+பத்து)
ஒன்பது - 9 X 10=90 (???? + பத்து)

ஆனால், நாம் ஒன்பது என்பதை 8 க்கு அடுத்த எண்ணாக வைத்திருக்கிறோம்.

இதையடுத்து நூறுகளுக்கு வருவோம்.

நூறு - 1 X 100
இருநூறு - 2 X 100 (இரு+நூறு)
....
.....
எழுநூறு - (ஏழு+நூறு)
எண்ணூறு - (எட்டு+நூறு)
தொன்னூறு - 9X100=900 (???+நூறு)

நாம் தொன்னூறு என்று சொல்வது 900 இப்படித்தானே இருந்திருக்க வேண்டும், தொன்னூறு-90 ஆக ஆனதெப்படியோ ?.

அடுத்ததாய் ஆயிரத்திலும் இக்குழப்பம் தொடர்கிறது.

ஆயிரம்
இரண்டாயிரம்
....
.....
எட்டாயிரம்
தொள்ளாயிரம் (9000)

ஆனால் நாம் இன்று தொள்ளாயிரம் என்று சொல்வது 900 ( தொன்னூறை?? ).

இந்தக் குழப்பம் எப்படி வந்திருக்கலாம் என்பதற்கு குறைந்தது இருசந்தேகங்களைக் காரணங்களாய் வைக்கலாம்.

1. 9 க்கு உண்மையில் வேறு ஏதோ பெயர் இருந்து ( ஒட்டு?? அல்லது தொட்டு?? போல ) இடையில் காணாமல் போயிருக்கலாம்.

2. பூச்சியம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே தமிழில் எண்ணும் எழுத்தும் சிறப்பாக இருந்தது என்பதைக் கருத்தில் கொண்டு, 9 என்பதை பத்துக்கு ஒன்று குறைவானது என்ற பொருளில் ஒன்+பத்து என்று அழைத்திருக்கலாம். பத்து மணிக்கு ஒரு நிமிஷம் இருக்கு என்று நாம் இன்றும் சொல்வதில்லையா அதுபோலத்தான். 90, 900 ஆகியவற்றுக்கும் இதே போன்ற பொருளில் பெயர் வைக்கப்பட்டிருக்கலாம் என்பது ஒரு யூகம்.
| | |
Comments:
//உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?//

இன்னும் இல்ல சாமி. தொண்டு என்றால் 0.9ஆ? அப்படியென்றால் கணக்கு சரியா வருது சாமி :)
 

திடீரேன ஒன்று காணாமல் போய், அடுத்த படியிலிருந்து கீழே இறங்கீ வருவது - 'பிஜொவல்' (bejeweled) விளையாட்டைப்போல இருக்கிறது! ;-)
 

நாடோடி, வாய்ஸ்ஆப்விங், ஜீவா, மூர்த்தி,
உங்கள் கருத்துக்கு நன்றி.
 

You can see that a similar style is used in roman numerals.

VII, VIII, IX, X

I dont think there is anything to be confused about. Just take them as such and get along.........
 

அனானிமஸ்,
நீங்கள் சொல்வது பொருத்தமாய்த் தோன்றவில்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் சொல்லியிருப்பது பற்றி எனது கருத்துக்கள் இரண்டு.

1. நீங்கள் சொல்வது குறியீடை, நான் சொல்வது வார்த்தையை. தமிழிலிலோ அல்லது அரபி எண்களிலோ குறியீட்டில் பிரச்சினை இல்லை.

2. அடுத்தவர் குழப்பமாய்ப் பயன்படுத்துவதால் நாமும் அதையே பயன்படுத்தலாம் என்பதோ அல்லது அடுத்தவர் பயன்படுத்துவதால் மட்டுமே அது சரியாகிவிடும் என்பதோ சரியா ? :-).
 

onpathu enbathu pathil ondru kuraivanathu endrum
thon-nooru enbathu thulai konda nooru endrum siru vayathil enakku therintha periyavar oruvar kooriya gnabhagam. Oru velai idu sariyaga irrukkalam

BTW Hindi-yilum 19,29 enbathai unnnees (bees endral 20), unathees (thees endral 30) endru vazhangapadukirathu.

Srinivasan
 

9 - தொண்டு
90 - ஒன்பது
900 - தொன்னூறு
9000 - தொளாயிரம்(தொண்டு + ஆயிரம்)
90 000 - ஒன்பதாயிரம்..

தொண்டு என்ற சொல் பழம்தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கிறதாம்.
 

நன்றிகள் ஸ்ரீனிவாசன், சயந்தன்.
 

ஐயா!

அது தொண்டு அல்ல. தொல். 'தொல்காப்பியத்தில் வருவது போல் - முந்தைய' என பொருள் கொள்ளலாம். சம்ஸ்கிருதத்தில் கூட 'ஏ கோ ன' என்று சொல்வார்கள். பத்திற்கு ஒன்று குறைவு, நூறுக்கு ஒன்று குறைவு' என்றுதான் எண்ணிக்கைகளை குறிப்பிடுவர். தமிழிலும் அது போல ' நூறுக்கு முந்தையது என குறிப்பிட்டிருக்கலாம்.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com