Sunday, May 15, 2005
My Wife is 18
பதினெட்டு வயதுப் பெண்ணை 30 வயது ஆண் திருமணம் செய்வதில் இவ்வளவு சிக்கல் இருக்கிறதா?. கொஞ்ச நாளைக்கு முன்னர் இந்தச் சீனப்படத்தைப் பார்த்தேன். தலைப்பு விவகாரமாய் தெரிந்தால் நான் பொறுப்பில்லை :-) . இது உண்மையிலேயே ரசிக்கும்படியான படம். நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய உள்ளன.
உளவியலில் ஆய்வுசெய்து கொண்டிருக்கும் மாணவனுக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள்.( சீனாவில் கூட நம்ம ஊரு மாதிரிதானா .. ? ) அந்த 18 வயது சுட்டிப் பெண்ணைப் பையனின் பாட்டி உட்பட வீட்டில் அனைவருக்கும் பிடித்துவிடுகிறது. ஆனால் திருமணம் செய்வதில் 30 வயதான அந்தப் பையனுக்கோ அல்லது இன்னொரு ஊரில் தங்கிப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் அந்தப் பெண்ணுக்கோ விருப்பமே இல்லை . பெற்றோர்களுக்குத் தெரியாமல் ஒரு வருடம் மட்டும் ஒப்பந்தம் செய்துகொண்டு சேர்ந்து வாழ்வதாய் நடிக்கிறார்கள்.
"..நீ ஏன் வேறு எங்கும் தங்க வேண்டும் என்னுடைய வீட்டிலேயே தங்கிக்கொள். அங்கு கொடுக்கும் வாடகையை எனக்குக் கொடுத்துவிடு .. " என்று பேயிங் கெஸ்டாக அப்பெண் கணவனைத் தன்னுடன் தங்கச் சம்மதிக்க வைக்கிறாள். வேலை தேடிக் கொண்டிருக்கும் அந்தப் பையனுக்கு வேலை கிடைக்கிறது, அதுவும் எதிர்பாராதவிதத்தில் அந்தப் பெண் படிக்கும் பள்ளிக்கே ஆசிரியராக வருகிறான்.
பள்ளியில் யாருக்கும் அவர்கள் இருவரும் கணவன்-மனைவி என்பது தெரியக் கூடாது என்று கவனமாக இருக்கிறான் கதாநயகன். ஆனால் இடையிடையே அந்தப் பெண் பள்ளியில் கதாநாகன் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது செய்யும் குறும்புகள் , அதை மற்றவர்களுக்குத் தெரியாமல் சமாளிக்கத் திணரும் கதாநாயகனின் நிலை ரசிக்கும்படியாக இருக்கிறது ( உண்மையில் ஆண்களின் நிலையும் இப்படித்தானோ :-) ).
ஒருமுறை கதாநாயகியுடன் பள்ளியில் படிக்கும் தோழி திடீரென்று வீட்டுக்கு வந்துவிட டாய்லெட்டின் இருக்கும் அந்தப் பையனை பாதியில் அவசரஅவசரமாக பால்கனிக்குள் ஒளித்துவைக்கும் இடத்தில் நமக்குக் குபீரென வரும் சிரிப்பை அடக்குவது கஷ்டம்.
இதற்கிடையே அதே பள்ளியில் படிக்கும் டீன் ஏஜ் பையன்கள் இருவர் அந்தப் பெண்ணையே சுற்றி சுற்றி வருகிறார்கள். அதை வேண்டுமென்றே கதாநாயகனிடம் தெரியும்படி காட்டி தன் அழகைப் பற்றி அலட்டிக்கொள்வார் ( பெண்கள் எல்லா நாட்டிலும் ஒரே மாதிரிதானோ ). , அந்தப் பெண் உண்மையிலேயே அழகாய்த்தான் தெரிகிறார். அவர்களில் ஒரு பையன் தன்னை விடாமல் சுற்றிச் சுற்றி வந்து தொந்தரவு செய்து ஒரு கட்டத்தில் என்னைக் காதலிக்கவில்லையென்றால் கடலில் விழுந்துவிடுவேன் என்று என்று தடுப்புச் சுவரில் நின்று சொல்லும்போது அந்தப் பெண் எரிச்சலில் வேகமாய்ப் பின்னால் எட்டி உதைத்துக் கடலில் தள்ளுவது செந்தில்-கவுண்டமணியை நினைவுபடுத்துகிறது. இதைப் பார்த்துக் கதாநாயகன் பதற, அந்த பெண் அலட்சியமாய்ச் சொல்வார் "..அவனை விடு... அவனுக்கு நீச்சல் தெரியும் , அவனே மேலே வந்துவிடுவான்..". சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவன் தொப்பலாய் ந்னைந்துகொண்டே மேலே ஏறிவருவான். வந்ததும் அவன் சொல்லும் வார்த்தை "..நீ என்னைக் கடலில் தள்ளினாலும் உன்னைத்தான் காதலிக்கிறேன்..". இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அந்த 18 வயதுப் பையன் அவளை 16 வருஷமாய்க் காதலிப்பதாய்ச் சொல்வான்.
அந்தப் பெண் இன்னொரு டீன் ஏஜ் பையனிடம் ஈர்க்கப்பட அவனைச் சந்திக்க வைக்க கதாநாயன் உதவி செய்கிறான். ஆனால் அந்த டீன் ஏஜ் பையனை இந்தப் பெண்னிற்கு சில நாளில் பிடிக்காமல் போகிறது, அல்லது பக்குவமான கதாநாயகனைப் பிடித்துவிடுகிறது.
அதே பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியை கதாநாயகனைக் காதலிப்பது தெரிந்து, கதாநாயகி அதற்கு டீச்சருக்கு உதவுகிறாள். அப்பள்ளியில் ஆசிரியராக இருக்கும் கதாநாயகன் டீச்சரைக் காதலிப்பதாக பள்ளியெங்கும் ஒரே கிசுகிசுப்பு. கதை இப்படியே நகர்ந்து கொண்டிருக்கும்போது, கதாநாயகனும் , கதாநாயகியும் அவர்களறியாமல் மனதளவிலும் உடலளவிலும் ஈர்க்கப்படுகிறார்கள்.
ஆனாலும் கதாநாயகி அந்த டீச்சரையே சேர்த்துவைக்க முயற்சி செய்கிறார், கடைசியில் இருவரும் ஏற்கனவே இருவரும் திருமணமானவர்கள் எனப் பள்ளியில் தெரிய வந்து டீச்சர் கோபத்துடன் கதாநாயகனைத் திட்டிவிட்டுச் சென்றுவிடுகிறார். இன்னும் சில சுற்றல்களுக்குப் பின்னர் கதாநாயகனும், கதாநாயகியும் இணைவதுடன் படம் இனிதே முடிகிறது.
| | |

Comments:
70+ வயசு தாத்தா 18 வயசு பொண்ணை கல்யாணம் கட்டிக்கிறது தான் 'தமிழர்' பண்பாடு. தெரியாதா உங்களுக்கு?! அப்படிப் பார்த்தா நாம எல்லாம் 'சீனர்' பண்பாட்டை கடைபிடிக்கிறோம்!!!
\\70+ வயசு தாத்தா 18 வயசு பொண்ணை கல்யாணம் கட்டிக்கிறது தான் 'தமிழர்' பண்பாடு. \\
70+ ஆற்றலிலும், அறிவினிலும் இளைஞர்களை விட உயர்ந்திருந்தால்... குறிப்பாக 18 டின் மனதை வெல்லும் திறனிருந்தால்...இந்தத் தமிழர் பண்பாட்டால் ஒன்றும் குடிமுழுகிவிடாது!., எழுத ஆயிரமிருந்தாலும் 'நா கப்பதும்' நல்ல தமிழ் பாண்பாடென்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். முத்து, பெரும்பாலன சீனப் படங்கள் நமது படங்களைப் போலத்தான் இருக்கும்... நீங்கள் மேலே கூறிய படத்தைப்போலவே ... பள்ளி மாணவியை இளைஞன் மணப்பது, அமைதிப் படை போன்ற படங்களில் வந்ததுதானே?.

அக்கா மகளை மணக்கும் கலாச்சாரமுள்ள தமிழ்நாட்டில் 30-18 எல்லாம் பெரிய விஷயமே அல்ல. சராசரியாக 36-16 வரை நித்தம் நடக்கிறது.
அப்புறம் 70 வயது தாத்தாவை 18 வயதிற்கு பிடித்திருந்தால் அதைக் கேள்வி கேட்பது அநாகரிகம். அன்று கேள்வி கேட்டவர்கள் ஏன் கேட்டார்கள் என்பதும் உலகறிந்த விஷயம். 70 வயது தாத்தா 60 வயது பாட்டியை மணப்பது மேனாட்டுக் கலாச்சாரம். இங்கே தாத்தாக்களுக்கு இளமை ஓய்வதில்லை. பாட்டிகளுக்கோ நாற்பதுக்கு மேல் திருமணம் என்பது 'மகாபாவம்'.

எனக்கு முப்பது உனக்குப் பதினெட்டு தமிழ் நாட்டிலோ அல்லது வேறு எங்குமோ பெரிய பிரச்சனை இல்லைதான். ஆனால் 70 Vs 18 ரொம்பவே அதிகம், ஆனால் இதுபற்றி அதிகமாய்ப் பேச எதுவுமில்லை, தனிமனித உரிமைகளும், விருப்பங்களும் சம்பந்தப்பட்டிருப்பதால்.
இடைக்கிடை "தானோ" என்று நீங்கள் அடைப்புக்குறிக்குள் தொடுத்த சந்தேகங்கள் தான் "அந்த மாதிரி".
"அந்த மாதிரி" எண்டா எங்கட இடத்தில "சூப்பர்" எண்டு அர்த்தம்.

\\அன்று கேள்வி கேட்டவர்கள் ஏன் கேட்டார்கள் என்பதும் உலகறிந்த விஷயம்\\
"பெண்விடுதலைப் பற்றி மேடைதோறும் பேசும் நாம்
செய்யலாமா இது?" என்று கேட்டார்கள், பெண்ணே, 'உன்னை மணக்கவில்லையெனில் உயிர் விடுவேன்" என்றால், மணப்பதில் தவறென்ன?, காவியுடனும், தண்டத்துடனும் புரிகின்ற தவறுகளை விட பெரிய தவறா இது?., இதனால் எந்தச் சமூகம் பாதிக்கப்பட்டது?, எந்த உயிர் போனது?.

///இடைக்கிடை "தானோ" என்று நீங்கள் அடைப்புக்குறிக்குள் தொடுத்த சந்தேகங்கள் தான் "அந்த மாதிரி".
"அந்த மாதிரி" எண்டா எங்கட இடத்தில "சூப்பர்" எண்டு அர்த்தம்.//
நன்றி வசந்தன்,
எங்கட ஊரில் "அந்த மாதிரி" அல்லது "ஒரு மாதிரி" என மேற்கோள் குறிக்குள்போட்டால் "ஒரு மாதிரி" விவகாரமான அர்த்தம் :-).
பாருங்களேன், தமிழ் 50 கிமீ-க்கும் குறைந்த தூரத்தில் எந்த அளவுக்கு வித்தியாசப்படுகிறது!!. தமிழ்நாட்டும், ஈழத்துக்கும் எவ்வளவு தூரம்? ( 30 கி.மீ இருக்குமா ? )

//படம் பேரே இது தானா கண்ணா? //
விஜய்,
படம்பேரே இதுதான். அதில் உள்ளர்த்தம் ஏதுமில்லை ( அட நம்புங்க :-) )

///"பெண்விடுதலைப் பற்றி மேடைதோறும் பேசும் நாம்
செய்யலாமா இது?" என்று கேட்டார்கள், பெண்ணே, 'உன்னை மணக்கவில்லையெனில் உயிர் விடுவேன்" என்றால், மணப்பதில் தவறென்ன?, காவியுடனும், தண்டத்துடனும் புரிகின்ற தவறுகளை விட பெரிய தவறா இது?., இதனால் எந்தச் சமூகம் பாதிக்கப்பட்டது?, எந்த உயிர் போனது?. ///
அப்படிப் போடு,
ஏற்கனவே சொன்னதுபோல இதில் விவாதிக்க அதிகமான விதயம் இல்லை, தனிமனித உரிமையையும், விருப்பமும் பாதிக்கப்படாமல் இருந்தால்.
எப்படி 30 வயது ஆண் 18 வயதுப் பெண்ணை திருமணம் செய்வதில் தவறில்லையோ அதுபோலவே 30 வயது பெண் 18 வயது ஆணைத் திருமணம் செய்வதிலும் தவறில்லை. காலம் காலமாய் தீர்மானிக்கும் இடத்தில் ஆண்கள் உள்ளதாலேயே இரண்டாவது நிகழ்வதில் சிரமம் இருந்து வருகிறது. மேற்கத்திய நாடுகளில் இரண்டாவது வகைக் கல்யாணம் சாதாரணமான ஒன்றுதான். நம் நாட்டிலும் விரைவில் சாதாரணமாகிவிடும் என்றுதான் தோன்றுகிறது. சில ஆண்டுகள் இளைய ஆணை மணம் முடிப்பது ஒன்றும் பெரிய விதமில்லைதானே?. நமக்குத் தெரிந்து பல உதாரணங்கள் இல்லையா என்ன? டெண்டுல்கர், தனுஷ், ஸ்ரீவித்யா .... இப்படி. ஏன் காந்தியைவிட கஸ்தூரிபா கொஞ்சம் மூத்தவர்தான் என்று நினைக்கிறேன்.

முத்து, சிலருக்கு 70-18 பிரச்சனையாக இராது, 70 பெரியாராகவும் 18 மணியம்மையாகவும் இல்லாதுபோனால். ஆனால், அங்கிள் ரஜனிக்கு இணையாக (அதாவது ஜோடியாக) பேபி மீனா, தில்லானா தில்லான இது தித்திக்கின்ற தேனா என்று திக்கிக்கொண்டால், அது நோ ப்ராப்ளம் ;-)
///சிலருக்கு 70-18 பிரச்சனையாக இராது, 70 பெரியாராகவும் 18 மணியம்மையாகவும் இல்லாதுபோனால்.//
பெயரிலி,
இது உண்மைதான். அவர்களுக்கு திட்ட ஒரு விஷயம் அவ்வளவுதான்.
மற்றபடி சினிமாவில் முழுவதும் நடிப்பு மட்டும்தான் என்று புரிந்துகொண்ட எவருக்கும் ரஜினி மீனாவுடன் இணைசேர்ந்தாலோ அல்லது மீனாவின் பேத்தியுடன் இணையாக நடித்தாலோ நோ பிராப்ளம்தான். ஆகக் கடைசியில் அது வெறும் நடிப்புத்தானே.

/அது வெறும் நடிப்புத்தானே./
அது சரிதான். ஆனால், ஏன் கிழக்கதாநாயகியும் இளநாயகனும் ஜிஞ்சினாசானா நடிப்பிலே வேசம் கட்டியேனும் ஆடவில்லையென்று யோசித்துப் பார்த்தால், உதைக்கிறதே?

நியாமாக கேள்வி கேட்டால், திட்ட அலைகிறோமா?...ம்... நல்ல...கணிப்பு! 70 பெரியாராகவும் 18 மணியம்மை ஆகவும் மனதில் கொண்டு, இதுதான் தமிழர் பண்பாடு! என நய்யாண்டி செய்பவர்களை, படித்துவிட்டும், தவிர்த்துப் போக முத்து போல் மனம் இன்னும் பக்குவப் படவில்லையே என்ன செய்வது?
///அது சரிதான். ஆனால், ஏன் கிழக்கதாநாயகியும் இளநாயகனும் ஜிஞ்சினாசானா நடிப்பிலே வேசம் கட்டியேனும் ஆடவில்லையென்று யோசித்துப் பார்த்தால், உதைக்கிறதே?///
பெயரிலி,
சமுதாயம்தான் திரையிலே பிரதிபலிக்கிறது. வயது குறைந்த பெண்ணை இணையாகப் பார்ப்பதுதான் நம்து சமுதாயத்தில் இன்று பெரும்பாலும் நடக்கிறது, சிலஆண்டுகள் மூத்த பெண்களையும் திருமணம் செய்யலாம் என்பது பரவலாகும்போது இந்த நிலை மாறும். நம்மூரில் இது நிகழாது என்று உறுதியாய்ச் சொல்ல இயலாது, ஆனால் கொஞ்ச நாள் ஆகலாம்.

/// நியாமாக கேள்வி கேட்டால், திட்ட அலைகிறோமா?...ம்... நல்ல...கணிப்பு! 70 பெரியாராகவும் 18 மணியம்மை ஆகவும் மனதில் கொண்டு, //
அப்படிப்போடு,
நான் அந்தப் பொருளில் சொல்லவில்லை. 70-18 தனிமனிதனின் உரிமையும், விருப்பமும் மீறப்படாமல் இருந்தால் தவறில்லை என்பதுதான் எனது நிலைப்பாடு.

//ஏன் கிழக்கதாநாயகியும் இளநாயகனும் ஜிஞ்சினாசானா நடிப்பிலே வேசம் கட்டியேனும் ஆடவில்லையென்று யோசித்துப் பார்த்தால், உதைக்கிறதே?//
பெயரிலி சார், காசு கொடுத்து படம் பாக்க நீங்க ரெடின்னா அப்படி ஒரு படம் எடுக்க அடுத்த நிமிஷமே பல பேரு ரெடியாவாங்க. புரியுதா?!
'உன்னை மணக்கவில்லையெனாறால் உயிர் விடுவேன்' என்று சொன்னதால் தான் நாலஞ்சு பேரை மணம் செய்து கோண்டேன் என்று நாளையே இன்னொரு தலைவரின் (?!) வரலாறு திரிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வெங்காயம். 'பொருந்தாக் காதல்' என்றால் தமிழில் என்ன அர்த்தம் என்று தான் எனக்கு விளங்கவில்லை. யாரும் விபரம் புரிந்தவர்கள் அர்த்தம் சொல்லவும்.

மாயவரத்தான் சார், என்ன ஆனாலும், தெனாலி, புன்னைகைமன்னன், கன்னத்தில் முத்தமிட்டால், நளதமயந்தி போன்ற படங்களை எடுக்கிறவரைக்கும் தமிழ்ப்படத்துக்குக் காசு குடுத்துப் பார்க்க நான் தயாரில்லை :-)
80 வயது பெரியார்-18 வயது மணியம்மையைக் கல்யாணம் செய்து கொள்வது, முழுக்க முழுக்கப் பொருந்தாக்காமம் என்று சொல்லமுடியாது (அதிலே மணியம்மை கருத்து என்னவெனத் தெரிகின்றவரை). "உன்னை மணக்கவில்லையென்னால் உயிர்விடுவேன்" என்று வரலாறு திரிப்பது, நீங்கள் சொல்வது பொருந்தாக்காமமே. ஆனால், அதைவிட, புழுப்படர்ந்தகாமமென்று ஒன்றிருக்கிறது.... காஞ்சி மடத்துக்குள்ளே அப்படியாக நடந்துகொண்டேயிருந்ததென்று காஞ்சி பிலிம்ஸிலே காட்டுகிறார்கள். ஸுத்த அபஸாரம். அது புரிந்தவர்கள் எனக்கும் அர்த்தம் சொல்லுங்கப்பா ;-)

///புழுப்படர்ந்தகாமமென்று ஒன்றிருக்கிறது.... காஞ்சி மடத்துக்குள்ளே அப்படியாக நடந்துகொண்டேயிருந்ததென்று காஞ்சி பிலிம்ஸிலே காட்டுகிறார்கள்.///
மனிதர்கள் எப்படி வாழவேண்டும், நடந்துகொள்ள வேண்டும் என்று நாவால் சொல்வது யாராலும் இயலும். பாதிச் சினிமாவில் அதைத்தானே பார்க்கிறோம். உண்மையில் மனிதர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் எனத் தன்வாழ்வில் நடந்துகாட்டுவதுதான் ஒரு துறவியின் இலக்கணம். யார் வேண்டுமானாலும் சாமியார் ஆகலாம், ஆனால் எல்லாராலும் சாமியாராய் நடக்கமுடியாது. உண்மையான துறவிகள் இன்னும் உலகில் மிச்சம் இருக்கிறார்கள் என்று உண்மையாய் நம்புவோர்கள் பலர் இருக்கிறார்கள், ஆனால் உண்மையாய்ன துறவிகள் இருக்கிறார்களா என்றுதான் தெரியவில்லை.

திரு மாயவரத்தான் அவர்களுக்கு
பொருந்தாக் காமம் என்பது ஒரு பழங்கால நெறி. இந்தக் காலத்திலும் அதை அனைவரும் பின்பற்ற வேண்டுமென்றால் இன்னும் வேறு என்னென்ன பழக்கங்களைப் பின் பற்ற வேண்டும் என்று யோசித்துப் பார்ப்போம். படிதாண்டாப் பத்தினி, அடுப்பெரிக்கும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?, அந்தணர்கள் கடல்தாண்டிப் போகக் கூடாது, தலித்குகள் காலில் செருப்பணியக்கூடாது இப்படி பல இருக்கின்றன. இவற்றையும் நாம் பின்பற்றத்தான் வேண்டும் என்று சொல்வீர்களா?
திருமணம் என்பது இரு மனிதர்களின் தனி உரிமை. ஆதில் மற்றவர்கள் தவறு காண்பது அநாகரிகமானது.
இரண்டு பெண்களைத் திருமணம் செய்துகொள்வது சட்டப்படி தவறு. அதை யாராலும் நியாயப்படுத்தமுடியாது.

பகுத்தறிவினையும் வயோதிபர் இளம்பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்வதையும் குழப்பாதீர்கள். கல்யாணம் என்பது சுதந்திரமாக தன்நிலை குறித்து முடிவெடுக்கக்கூடிய இருவர் மூன்றாவது ஆளுக்குப் பிரச்சனை இல்லாமல், எந்த வற்புறுத்தலும் இல்லாதபோது நாங்கள் சொல்வதற்கு ஏதுமில்லை.
பெரியாரையும் திராவிடக்கட்சிகளையும் பிடித்தாட்டுவதுதான் உங்கள் மெய்யான நோக்கென்றால், அந்த மோஹன்தாஸ் காந்தி தாத்தாவின் Rabbit experiment இனைப் பற்றியும் பேசுங்கப்பா

///அந்த மோஹன்தாஸ் காந்தி தாத்தாவின் Rabbit experiment இனைப் பற்றியும் பேசுங்கப்பா//
பெயரிலி,
அது என்ன "ரேபிட் எக்ஸ்பெரிமெண்ட்" ?. எனக்குக் கேள்விப்பட்ட ஞாபகம் இல்லையே.

/கேள்விப்பட்ட ஞாபகம் இல்லையே?/
கேள்விப்படாதது, எப்படி ஞாபகத்திலிருக்கும்? ;-))
முத்து, இது குறித்து இணையத்திலே நேரடியான இணைப்பேதும் கிடைக்கவில்லை. ஓரளவுக்கு இந்த இந்த இணைப்பு இது குறித்து ஓரிரு வரிகளேனும், சொல்கிறது:
http://free.freespeech.org/manushi/109/fire.html

நன்றி சுட்டிக்கு. நீங்கள் சொல்ல வருவது அவரின் இந்தப் பரிசோதனையையா என்று தெரியவில்லை - அதாவது பிரம்மச்சரியத்தை உறுதிப்படுத்தச் சிலருடன் தூங்கிய சோதனை. நீங்கள் எழுதியதைப் பார்த்ததும் விலங்கியல் அறிஞர் ரேஞ்சுக்கு காந்தி ஏதோ முயல்களை வைத்து அறிவியல் பரிசோதனை செய்தாரோ என்று நினைத்துவிட்டேன்.

ரஜினிகாந்த பெரிய கடவுள் பக்தர். அவரும்தான் சிறு பெண்களைக் கட்டிப்பிடித்து ஆடுகிறார். எனவே கடவவுள் நம்பிக்கை உடையவர்கள் எல்லோரும் மோசமானவர்கள் என்று முடிவுக்கு வந்துவிடலாமா?
நடிகைகளைக் கட்டிப்பிடித்து ஆடுவதில் என்ன தவறு வந்துவிட்டது? அவர்கள் அதற்கு உடன்பட்டுத்தானே நடிக்க வருகிறார்கள்? அவர்களுக்கே அதில் கஷ்டமில்லாதபோது மற்றவர்களுக்கு ஏன் பொத்துக்கொண்டு வருகிறது?
Post a Comment