<$BlogRSDUrl$>

Sunday, May 22, 2005

சொர்க்கத்திலிருந்து நல்ல செய்தி

சுப்புவும் , குப்புவும் நெருங்கிய நண்பர்கள். இருவருமே கிரிக்கெட் பைத்தியங்கள். இன்று நேற்றல்ல 50 வருடங்களாக எந்த கிரிக்கெட் போட்டியையும் பார்க்காமல் தவற விட்டதில்லை. இருவருக்கும் இப்போது வயது மிக அதிகமாகிவிட்டது. அவர்களுக்கு இப்போதுள்ள கவலையெல்லாம் சொர்க்கத்திலும் கிரிக்கெட் இருக்குமா என்பதுதான். எனவே யோசித்து ஒரு முடிவுக்கு வ்ந்தார்கள் . முதலில் யார் இறந்தாலும் சொர்க்கத்தில் கிரிக்கெட் விளையாட்டு உண்டா என்பதை மற்றவருக்குச் சொல்லிவிட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

கடைசியில் ஒருநாள், இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடி வெற்றி பெற்ற விளையாட்டைப் பார்த்துவிட்டு சுப்பு தூங்கிக்கொண்டிருக்கும்போது மாரடைப்பு வந்து சந்தோஷமாக இறந்துபோனார். இது நடந்த சில சில நாட்கள் கழிந்து குப்பு தூங்கிக்கொண்டிருக்கும்போது அவர் தலைமாட்டில் ஒரு குரல்,

" .... குப்பு ..! எழுந்திரு .. நான் சுப்பு வந்திருக்கிறேன் .."

" ஆ... என்ன ஆச்சரியம் .. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை .. "

"... சரி .. நான் உனக்கு ஒரு சந்தோஷமான விஷயமும் , வருத்தமான விஷயமும் சொல்லப்போகிறேன் , நீ எதை முதலில் கேட்க விரும்புகிறாய் ...?"

" .. அதெல்லாம் இருக்கட்டும்டா ... சொர்க்கத்தில் கிரிக்கெட் உண்டா அதை முதலில் சொல் .. "

" ... சொர்க்கத்தில் கிரிக்கெட் உண்டு ... அதுதான் நான் உனக்குச் சொல்ல வந்த சந்தோஷமான விஷயம் ... "

"... சரி இப்போது அந்த சோகமான விஷயத்தையும் சொல் .... "

" ... அது சோகமான விஷயம்தானா என்பதில் எனக்குக் கொஞ்சம் சந்தேகமுண்டு. எப்படியிருந்தாலும் அது சந்தோஷமான விஷயமா அல்லது சோகமான விஷயமா என்பதை நீதான் முடிவு செய்யவேண்டும். அந்த விஷயம் என்னவென்றால், நாளைக் காலையில் சொர்க்கத்தில் நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நீதான் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ..... "
| | |
Comments:
Muthu,

:-) good one!!!
 

துளசியக்கா,
நன்றி :-).
 

"சொர்க்கத்திலும் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றுக்கொண்டுதான் இருக்கிறது" என்பதுதான் சோகமான விடயம் என்றுதான் முதலில் எழுத நினைத்தீர்களாக்கும்,

ஏனெனில்

""இருவருமே கிரிக்கெட் பைத்தியங்கள். இன்று நேற்றல்ல 50 வருடங்களாக எந்த கிரிக்கெட் போட்டியையும் பார்க்காமல் தவற விட்டதில்லை""

என்பதில்

எந்த கிரிக்கெட் போட்டியையும் பார்க்காமல் தவற விடாத கிரிக்கெட் பைத்தியங்களை, கடைசியல்
கிரிக்கெட் ஆடுவதாக வைத்துவிட்டீர்களே?

நாட்டில் கிரிக்கெட் பைத்தியங்கள் நிறையே உள்ளனர், கிரிக்கெட் வீரர்கள்தான் குறைவு.
 

நன்றி சாரா :-).
 

குமரேஸ்,
ஒரு நகைச்சுவையை இந்த அளவுக்குப் பிரித்து ஆராய்ந்தால் அதில் நகைச்சுவையைக் காண்பது கடினம். உண்மையிலேயே சொர்க்கம் உண்டா, இருவரும் சொர்க்கத்துக்குத்தான் போவார்கள் என்பது எப்படித் தெரியும்?, சொர்க்கத்தில் கிரிக்கெட் உண்டா? இப்படியெல்லாம் ஒரு நகைச்சுவையை அறிவியல் பூர்வமாய் சிந்திக்க இயலாது/கூடாது - நகைச்சுவையை ரசிக்க நினைத்தால்.

இதுவெல்லாம் உங்களுக்கு ஏற்கனெவே தெரிந்ததுதான் என்பது எனக்குத் தெரியும், சும்மா சொல்கிறேன் அவ்வளவே :-).
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com