<$BlogRSDUrl$>

Sunday, May 22, 2005

ஜெ - குறிவைக்கும் வெடிகுண்டுப் பெண்

தமிழகத் தேர்தல் நெருங்குகிறது. பல பரபரப்பான அறிக்கைகளை, சீரியஸான அறிக்கைகளை, நகைச்சுவையான அறிக்கைகளை, வாக்குறுதிகளை அடிக்கடி இனிமேல் கேட்க முடியும். கீழேயுள்ள அறிக்கை எந்தவகையைச் சார்ந்தது எனப் படிப்பவர்களே முடிவுசெய்துகொள்ளவும்.

எனது உயிரைப் பறிக்கும் பொறுப்பை விடுதலைப் புலிகள், தற்கொலைப் படையை சேர்ந்த ஒரு வெடிகுண்டு பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர் என்று தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த ஆண்டுக்கான ஆண்டறிக்கையை மேற்கோள் காட்டி பெட்ரோல், டீஸல், மருந்துகள் முதலிய பொருட்களை இலங்கைக்கு திருட்டுத்தனமாக கடத்துவதற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழக்தை தொடர்ந்து ஒரு தளமாக பயன்படுத்தி வருகிறது என்று சில பத்திரிகைகள் பிரதானமாக தலைப்பிட்டு செய்திகள் வெளியிட்டுள்ளன.

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் அதிகரிப்பதைப் போன்று ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் சில பத்திரிகைகள் இதனைப் பெரிது படுத்தியுள்ளன. இது முற்றிலும் ஆதாரமற்றதாகும்.

தமிழக அரசு, விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக உறுதியான சமரசத்திற்கு இடமில்லாத நிலைப்பாட்டை எடுத்து வருகின்ற நிலையில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு தமிழகத்தில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கும் தீயநோக்கிலான இந்த முயற்சி எனக்கு ஆழ்ந்த கவலையையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது என்று உள்துறை அமைச்சருக்கு நான் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். முழுவதும் படிக்க தட்ஸ் தமிழ் டாட் காம்
| | |
Comments:
வலைப்பூ 'புலிகள்' இது பற்றி கருத்து சொல்லவும்.
 

அதே செய்தியில் கடைசி பாராவில் மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து இப்படி ஒரு தகவல் (வெடிகுண்டுப்பெண்) தனக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் கூறியிருப்பதை வசதியாக மறைத்து விட்டதாக தெரிகிறதே முத்து சார். தி.மு.க. பெரும் பங்கெடுத்துள்ள மத்திய அரசிடமிருந்து அப்படி ஒரு எச்சரிக்கை அனுப்பியிருப்பதும் தேர்தல் காமெடி தான் என்று கூறுகிறீர்களோ?!
 

மாயவரத்தான்,
கோபம் வேண்டாம் :-). இந்தப் பதிவில் முதல் பாராவில் இருப்பது மட்டுமே எனது கருத்து. கீழேயுள்ள ஜெவின் அறிக்கையை எப்படி எடுத்துக்கொள்வது என்ற முழுச்சுதந்திரமும் படிப்பவர்களுக்கு மட்டுமே,மேலும் இதைப்பற்றி எனது சொந்தக் கருத்து எதையும் அங்கு கூறவில்லையே. இச்செய்தி தட்ஸ் தமிழ் இணையத்தளத்தில் வெளிவந்துள்ளது. அங்குள்ள செய்தியை அப்படியே முற்றும் முழுதுமாய் வெட்டி அப்படியே ஒட்டுவது சரியானதாய் எனக்குப் படாததால், ஒரு சிறு பகுதியை மட்டும் கொடுத்து முழுவதும் படிக்க விரும்புபவர்களுக்காய் அதன் இணைப்பையும் தொடர்ச்சியாய்க் கொடுத்திருக்கிறேன்.

இதில் நான் எதை மறைக்க முயற்சி செய்தேன் என்று நினைக்கிறீர்கள்?. அதில் மறைக்க வேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாய் நானும் நினைக்கவில்லை.
 

முத்து சார்.. கோபமெல்லாம் இல்லை. இதில் தேர்தல் ஸ்டண்ட் என்று குற்றம் சாட்டுமளவிற்கு எதுவுமில்லை என்பதே என் கருத்து. ஏனென்றால் மத்திய அரசு அனுப்பிய அறிக்கையை தானே அவர் பயன் படுத்தியிருக்கிறார். அதை தான் சுட்டுக்காட்டினேன். நீங்கள் தேர்தல் ஸ்டண்ட் என்று கூறி விட்டு கடைசி பாராவை தராதது ஒரு சார்பாக இருப்பது போல தோற்றம் தருகிறது. அதான்!! :)
 

மாயவரத்தான்,
நீங்கள் சொல்ல வருவது எனக்குப் புரிகிறது. அறிக்கையில் நான் கொடுத்திருப்பது முதல் சில பத்திகளை மட்டுமே, அதற்குக் கீழே "முழுஅறிக்கை பார்க்க" என இணைப்பை நான் கொடாமல் இருந்திருந்தால், அல்லது இந்த அறிக்கை "தேர்தல் ஸ்டண்ட்" என்று நான் கூறியிருந்தாலோ நீங்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது. அப்படி இரண்டையும் நான் அங்கே செய்யவில்லை. தேர்தல் நேரத்தில் சீரியஸான அறிக்கை முதல் நகைச்சுவையான அறிக்கை வரை அனைவரிடமிருந்தும் ஏராளமாய் வரும் சாத்தியமிருப்பதை மட்டுமே கோடிட்டுக்காட்டினேன்.

நமது கடன் செய்தியை மக்களிடம் சேர்ப்பதே :-) ;-).
 

எனக்கென்னவோ இன்னும் கொஞ்ச நாளைக்கு (இடைத்தேர்தல் முடிவுகள் மக்கள் மனதிலிருந்து மறையும் வரை) - அதாவது வாரமிருமுறை பத்திரிகைகளின் கவர் ஸ்டோரியாக அடுத்த பரபரப்பு செய்திகள் வந்து ஓயும் வரை எதிர் கட்சி முகாமிலிருந்து தேர்தல் ஸ்டண்ட் டயலாக்குகள் வர வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். ஆனால் ஆளுங்கட்சியிடமிருந்து ரொம்பவே வரலாம்.
 

தேர்தல் பரபரப்பு ஒருவழியாய் ஓய்ந்ததால் மீண்டும் அறிக்கைப் போர் ஆரம்பித்துவிட்டது.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com