Monday, May 16, 2005
இடைத்தேர்தல் வெற்றிகள்
கடைசியாய்க் காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றுவிட்டது. மாயவரத்தான் சொல்லியிருப்பவை ( சிலது ஏற்கனவே நடந்துவிட்டது ) ஏதும் நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழ்நாட்டில் தேர்தலின் முடிவு எப்படி இருக்குமெனக் கணிப்பது மிகக் கடினமான காரியம் என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக வாக்குப்பதிவின் சதவீதம் அதிகமாக இருந்தால் திமுக கூட்டணிதான் வெற்றி வெறும் என்பது சில அறிவுஜீவிகளின் கணிப்பு. ஏனென்றால் வாக்குப் பதிவு குறைவாய் இருந்தால் அதில் பாமரமக்களின் பங்கு மிக அதிகமாக இருக்கும், பொதுவாக பாமர மக்களுக்கு அதிமுக பிடிக்கும் அல்லது திமுக அவ்வளவாய்ப் பிடிக்காது அல்லது கொஞ்சம் புத்திசாலி மக்களின் தீர்வு திமுக- வாகத்தான் இருக்கும், (ஆனால் அவர்கள் வாக்களிப்பதில்தான் ஆர்வம் காட்டுவதில்லை, ஓ .. அதனால்தான்தான் இவர்கள் புத்திசாலி மக்களா ? :-) ). இப்படியாக பல கருத்தேற்றங்கள் நெடுநாளாகப் பேசப்பட்டுவந்தன. இந்த தியரிகளும் பொய்யாகி இருக்கின்றன. வாக்குப் பதிவு குறிப்பிடத்தகுந்த அளவில் அதிகமாய் இருந்தும் அதிமுகதான் வெற்றி பெற்றிருக்கிறது( ஒரு வேளை புத்திசாலி மக்கள் அவ்விரு தொகுதிகளிலும் இல்லையோ :-) ). தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் அதிகமாய் இருந்ததால் தேர்தல் அமைதியாய் நடந்தது. வன்முறையோ , முறைகேடா சொல்லும்படியாய் நடந்ததாயும் தெரியவில்லை.
ஒரு பிரபல நடிகரின் ஒரு சினிமா ஓடுமா ஓடாதா என்று ஆருடம் சொல்வதைவிடவும் கடினமாகியிருக்கிறது தேர்தல் கணிப்பு. இரு கட்சிகளும் ஆளுக்கு ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருந்தால் இன்னும் சுவாரசியமாய் இருந்திருக்கும் :-).
எது எப்படியோ, திமுக கூட்டணி ஆட்டம் காணப்போவதற்கான நிகழ்தகவு அதிகமாகியிருக்கிறது. அது தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததா என்பதுதான் தெரியவில்லை.
| | |

Comments:
முத்து,
இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இடைத் தேர்தல்களில் ஆளும்கட்சி--அதுவும் ஏற்கனவே தன்வசமிருந்த தொகுதிகளில்--வெற்றிபெறுவது சாதாரணமாக நடப்பது. தோற்றிருந்தால் தான் ஆச்சரியப்படவேண்டும். மக்களுக்கு லாபம் எது? ஆட்சி செய்துக்கொண்டிருக்கும் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பதா? எதிர்த்து வாக்களிப்பதா? இதை வைத்து படித்தவர்கள் இப்படி, படிக்காதவர்கள் அப்படி என்றெல்லாம் முடிவு செய்வது சரியானதல்ல. எல்லோருமே விவரமானவர்கள் தாம். பொதுத் தேர்தல் என்பது முற்றிலும் வேறு விஷயம். அப்போது இருக்கக்கூடிய பெரிய பிரச்சினைகளே அதை முடிவு செய்யும்.
Post a Comment