Thursday, May 05, 2005
நாட்டுப் பற்று
எங்கேயோ படித்த முகத்தில் அறையும் பொன்மொழி இது. சொன்னவர் பெயர் எனக்குச் சரியாய் நினைவில்லை (பெர்நாட்ஷா ?? ) " தேச பக்தி என்பது வேறொன்றுமில்லை, ஒரு நாட்டில் பிறந்துவிட்டோம் என்பதற்காய் கண்ணைமூடிக்கொண்டு அதை ஆதரிப்பதன் பெயர்தான் அது" இதைப் படித்தவுடன் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. அதிலுள்ள உண்மையை மறுப்பதற்கில்லை. ஆனால் இதைத்தவிர இன்னும் நிறைய பொறுப்பான விஷயம் தேசபக்தியில் இருக்கிறது.
குடும்பத்தினர் மீது வைத்திருக்கும் பாசத்தையும், குடும்பத்தினர் வைத்திருக்கும் அன்பையும் மேலே சொன்னபடி ஒரே வரியில் கடுமையாய்ச் சொல்லிவிடலாம். ஆனால் உண்மையில் அதில் அதைதாண்டி ஆழமான உண்மையும், சமூகப் பொறுப்பும் இருக்கிறது என்பது கண்கூடு. தனக்குச் சொந்தமான பொருளை தாம் கவனமாய்ப், பத்திரமாய் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதிலிருந்து அது ஆரம்பிக்கிறது.
| | |

Comments:
நாட்டுப்பற்று - முகத்திலறையும் உண்மை. நேரமிருந்தால் இதனை ஒத்த இந்த சுட்டியைப் படித்துப்பாருங்கள்.
http://www.nilacharal.com/news/view/talk68.html
ஒரு சில மாதங்களுக்கு முன் பார்த்த தொலைக்காட்சி டாகுமெண்டரியில் மரபணுவுக்கும் பாசத்துக்கும் தொடர்பிருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள்.(நம்ம தமிழ் சினிமாவில சொல்ற ரத்தபாசமேதான்). மரபணுவால் எவ்வளவு நெருங்கி இருக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அன்பு அதிகமாக இருக்குமாம். சில எளிமையான சோதனைகளும் செய்து காட்டினார்கள். தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்று மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறார்கள் நம் முப்பாட்டனார்கள்!

//தேச பக்தி என்பது வேறொன்றுமில்லை, ஒரு நாட்டில் பிறந்துவிட்டோம் என்பதற்காய் கண்ணைமூடிக்கொண்டு அதை ஆதரிப்பதன் பெயர்தான் அது//
மிக சரியாக கூறினார் பெர்னாட்ஷா, நாட்டுப்பற்று, பிணைப்பு unity in diversity எல்லாம் சுத்த ஹம்பக், நாட்டுபற்று எப்பொழுது வரும் நமக்கெல்லாம் இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்ல, அப்புறம் எப்பொழுது வரும் இந்தியா பாக்கிஸ்தான் சண்டையில, மீதி நேரமெல்லாம் நமது நாட்டுப்பற்றூ ரெஸ்ட் எடுக்க போய்விடும்.
அந்த நேரத்தில பெங்களூர் தமிழனை கன்னட இந்தியன் அடிப்பான், பம்பாய் தமிழனை மராட்டி இந்தியன் அடிப்பான், மொத்த தென்னிந்தியர்களையும் வட இந்தியன் மதராசி குத்தா என்பான் (குத்தாவா? குக்காவா?). தவிச்ச வாய்க்கு தண்ணி தரமாட்டான் ஆந்திர, கர்னாடக இந்தியன் தமிழக இந்தியனுக்கு.
பொதுமக்களை எடுத்துக்கொள்வோம் இன்கம்டாக்ஸ் கட்டுடானா நாட்டுப்பற்று காணாமல் போய்விடும், சேல்ஸ் டாக்ஸ் கட்டென்றால் எல்லா வியாபாரிகளுக்கும் நாட்டுப்பற்று காணாமல் போய்விடும் ஆனா கிரிக்கெட் மேட்ச் போடட்டும் எல்லா நாட்டுப்பற்றும் ஜிங் ஜிங்னு ஆட்டம் போட வந்துடும், அட போங்கய்யா உங்க நாட்டுப்பற்றும் நீங்களும்
இதெல்லாம் சொன்னால் நான் தேசத்துரோகி என பட்டம் வேறு கொடுத்துவிடுவீர்கள்
- பெயர் சொல்லவிரும்பாத குடிமகன் -
- பெயர்
Post a Comment