<$BlogRSDUrl$>

Monday, January 10, 2005

நீங்களும் முயற்சிக்கப் போகிறீர்களா .. ?


வலைப்பூவை PDF கோப்பாக மாற்றி வைப்பது பயனுள்ளதாக இருக்குமென்று நான் நினைத்ததைப் போலவே நண்பர்களும் கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். தங்கள் வலைப்பூவையும் இதுபோல் மாற்றிவைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு PDF ஆக மாற்றுவதற்கு நான் அதிக நேரம் செலவிடவில்லை. ஒரு வகையில் இது எளிதுதான். இதை உருவாக்கத் PDF டிஸ்டில்லர் இருந்தால்போதும். இதுபோல் கோப்பாக மாற்ற விரும்புபவர்கள் செய்யவேண்டியது.

1. தற்காலிகமாகச் சிறிது நேரத்துக்கு டெம்ப்ளேட் செட்டிங்கில் சிறு மாற்றம் செய்யவேண்டும், அதாவது அனைத்துப் பதிவுகளும் ஒரே சமயத்தில் தெரியும்படி மாற்றிக்கொள்ள வேண்டும். சாதாரணமாக ஐந்து அல்லது ஆறு பதிவுகள் மட்டுமே முதல் பக்கத்தில் தெரியும்.நீங்கள் blogger வலைப்பூ வைத்திருந்தால் settings--->foramtting ல் show ---- Days/posts on the main page என்பதில் தேவையாதை தெரிவுசெய்து, பின்னர் வலைப்பூ முழுவதையும் ஒருமுறை ரீபப்ளிஷ் செய்ய வேண்டும். இப்போது புதிதாக ஒரு ப்ரௌசரில் உங்கள் வலைப்பூவைப் பார்த்தால் அதில் இதுவரை எழுதிய அனைத்துப் பதிவுகளும் தெரியும். அதை அப்படியே HTML கோப்பாக சேமித்துக்கொள்ளலாம். நான் செய்தது, அப்பக்கத்தில் ரைட் கிளிக் செய்து View source என்பதைக் கிளிக் செய்தால் அப்பக்கத்தின் மூலம் நோட்பேடில் தெரியும். அதை சேமித்துப்பின்னர் .txt என்பதை .HTML என மாற்றிக்கொண்டேன்.

இங்கே முக்கியமாகக் கவனிக்கவேண்டியது என்னவென்றால் சாதாரணமாக நோட்பேடில் சேமிக்கமுயலும்போது ANSI என்கோடிங் default - ஆக தெரிவாகும் , அதை UTF-8 ஆக மாற்றியபின் சேமிக்கவேண்டும். இல்லையென்றால் HTML ஆகச் சேமித்த கோப்பில் தமிழ் எழுத்துரு சரியாகத் தெரியாது.

2. சேமித்த பக்கத்தை திரும்பவும் நோட்பேடில் திறந்து mainClm (சாதாரணமாக முதல் வரியில் இருந்து ஒரு பத்துவரிகளுக்குள் இருக்கும்) என்று ஆரம்பிக்கும் வரியில் width என்பதை 100% ஆக மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பதிவுகள் மட்டுமே தெரியும், வலைப்பூவில் இடப்பக்கத்தில் சாதாரணமாகக் கொடுத்திருக்கும் மற்ற இணைப்புகள், தொகுப்புகள் ஆகியவை தெரியாமல் பதிவுகள் மட்டுமே தெரியும். இது நான் மாற்றம் செய்தது.

3.உங்கள் கணினியில் PDF டிஸ்டில்லர் இருந்தால், இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ப்ளௌசரில் தெரியும் பக்கத்தை file--->print என்பதைப் பயன்படுத்தி முழுவதையும் PDF ஆக மாற்றிக்கொள்ளலாம். நான் பயன்படுத்தியது PDF டிஸ்டில்லர் 5.0 . PDF ரைட்டர் மென்பொருளை நான் முயற்சித்துப் பார்க்கவில்லை. பக்கத்தின் background PDF கோப்பில் வரவேண்டாம் என்று நினைத்தால் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரில் internet options--->advanced என்பதில் print என்பதிலுள்ள டிக்கை நீக்கிக்கொள்ள வேண்டும்.

4. இப்போது PDF ஆகப் பிரிண்ட் செய்தால் நீங்கள் இதுவரை பதிந்த அனைத்துப் பதிவுகளும் மின்னூல்போன்ற வடிவத்தில் தயார். :)
| | |
Comments:
முத்து அண்ணாச்சி,

அருமையான பதிவு. நீங்கள் சொன்னப்படி நான் முயற்ச்சித்தேன். வெற்றி. என்னால் தமிழ் எழுத்துருவை பி.டி.எப்-ல் படிக்க முடிகிறது. நன்றிகள் பல.

உங்கள் வலைப்பதிவில் டெக்னிகல் விசயம் அருமையாக உள்ளது. உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் யூனிகோடு சம்பந்தமான சிலக் கட்டுரைகளை என் http://digitalhalwa.blogspot.com ஒரு பதிவில் லிங்காக கொடுக்கிறேன். உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்.
 

விஜய்,
நீங்க தாராளமாக இங்குள்ளவற்றின் லிங்கை உங்கள் அல்வாசிட்டியில் தரலாம். அப்புறம்.. நான் உங்களுக்கு அண்ணாச்சியா, தம்பியா என்பதில் எனக்குக் கொஞ்சம் சந்தேகம். :)
 

மிக்க நன்றிகள் முத்து.

சில சமயம் அண்ணாச்சி, அக்காவென்று எனக்கு முகம் தெரியாதவர்களை அழைத்து என் வயதை குறைத்துக் கொள்ளும் ஆசை தான். என்ன செய்ய. எல்லாம் பீர்பால் சின்ன கோடு பெரிய கோடு தத்துவம் தான்.
 

நல்ல நல்ல ஐடியா எல்லாம் கொடுக்கிறீர்கள் முத்து வாழ்த்துக்கள்.

விஜய் தம்பி...நானும் முத்துவை முன்பு அண்ணா என்றேன். அதன்பின் வயசெல்லாம் கேட்டுட்டு தம்பியாக்கினேன்.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com