<$BlogRSDUrl$>

Wednesday, January 05, 2005

திருச்செந்தூரும் புதிர்நிகழ்வும்


திருச்செந்தூரில் ஒரு புதிரான நிகழ்வு சென்ற சுனாமி நிகழ்வன்று நடந்துள்ளது. சில பத்திரிக்கைகளில்கூட வந்திருக்கிறது. இதுபோன்ற நிகழ்வு வேறெங்கும் நடந்துள்ளதா என்று தெரியவில்லை. திருச்செந்தூருக்கு அருகிலுள்ள கன்னியாகுமரிகூட சுனாமியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் திருச்செந்தூர் கடற்சீற்றத்தில் பாதிக்கப்படவில்லை. இயல்பாகவே கடலைகள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அருகில் வந்துசெல்லும். சுனாமி நாளில் கோவிலோ, திருச்செந்தூரோ பாதிக்கப்படாததுகூட ஆச்சரியமில்லை.



தமிழகக்கரையோரங்களில் பிற இடங்களில் தண்ணீர் கடற்கரையைவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தபோது திருச்செந்தூரில் கோவிலுக்கருகில் இருந்த கடல்நீர் 700 மீட்டருக்குமேல் இயல்பைவிட பின்னே சென்றதுதான் ஆச்சரியம். தண்ணீர் உள்ளே சென்றதால் சாதாரணமாய் வெளியே தெரியாமல் கடலுக்குள் அமிழ்ந்திருக்கும் பாறைகள்கூட வெளியே தெரிய அதைப் பலர் புகைப்படமும், வீடியோவும்கூட எடுத்திருக்கின்றனர். அன்று மதியவேளையில் தண்ணீர் இயல்பான நிலைக்குத் திரும்பவும் வந்திருக்கிறது. படம்: தினத்தந்தி
| | |
Comments:
1946-ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி நடந்த ஒரு தாக்குதல்தான் புதிய கண்டுபிடிப்புக்கு வழி வகுத்தது.

சிலசமயங்களில், சுனாமி கரையைத் தொடுவதற்கு முன்பாக கடலின் நீர் மட்டம் திடீரென படுவேகமாகக் குறைந்து பிறகே அசுரத்தனமாகத் திரும்பி எழும்.அப்படித்தான் குறிப்பிட்ட தினத்தன்றும் நடந்தது. அந்த சபிக்கப்பட்ட நாளில் ஹவாய் தீவுகளின் கடல்பகுதி சரேலென ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்வாங்கிவிட்டது. கடலுக்கடியில் இருந்த பவழப்பாறைகள் எல்லாம் அப்பட்டமாக தங்கள் அழகைக் காட்டிக்கொண்டு நிற்க, பள்ளிமாணவர்களுக்கு தலைகால் புரியவில்லை. விபரீதம் புரியாமல் அவர்கள் கடல் இருந்த பகுதிக்குள் போய் அவற்றைத் தொட்டுப் பிடித்து விளையாடினார்கள். அடுத்த சில நிமிடங்களில் கடல் நீர் பலமடங்கு வேகத்துடன் கரையை நோக்கி முன்னேறி மூடிக் கொள்ள... சத்தமின்றி செத்துப்போனவர்களின் எண்ணிக்கை 159.

இது சுனாமி பற்றி ஜூ.வி யில் வந்த கட்டுரைப் பகுதி
 

அந்த கருப்பு ஞாயிறு அன்று காலை பதினோரு மணிக்கு கூட சென்னை மெரீனா கடற்கரையில் கடல் நீர் ஐம்பது அடி உள்ளே போய் வேடிக்கை பார்க்க போன எங்களை துரத்திக் கொண்டு வந்தது. தரங்கம்பாடி பக்கத்திலிருக்கும் ஒரு கிராமத்தில் நான் விசாரித்த போது கூட சுனாமி தாக்குதலுக்கு அரை மணி நேரம் முன்பாக கடல்நீர் மட்டம் சுருங்கி சாதாரணமாக இருப்பதை விட கொஞ்ச தூரம் பின்வாங்கியே இருந்ததாக சொன்னார்கள். புலிப் பாய்ச்சல் என்பது இதுதான்!
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com