<$BlogRSDUrl$>

Saturday, January 29, 2005

மன்மதராசா..... மன்மதராசா...


இப்படி நடக்குமென்று எதிர்பார்க்கவில்லைதான். பக்கத்துவீட்டுக்காரர்கள் பாடுதான் பாவம். இதற்கு இப்படி ஒரு மவுசா என்று ஆச்சரியமாக இருக்கிறது. தெளிவாகவே சொல்கிறேன். எனது நண்பர் சுரேஷிடம் ஒரு ஜெர்மன் நண்பர் ஏதாவது தமிழ் பாட்டு கொடுக்கும்படி கேட்டிருக்கிறார். சுரேஷ் அவருக்குக் கொடுத்தது தனுஷ்-சாயாசிங் மன்மதராசா பாட்டு. மனிதர் பாட்டைக் கேட்டு ரொம்பவே இம்ப்ரெஸ் ஆகிவிட்டார். கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் தொடர்ந்து அப்பாடலே ஒடிக்கொண்டிருக்கிறதாம்.

"...இந்தியாவில் இப்படி சிறந்த(?) பாடல்கள் எல்லாம் வருகிறது என்று இப்போதுதான் தெரிந்துகொண்டேன்..., அந்தப் பாடலைக்கொடுத்ததற்கு மிக்க நன்றி.." என்று பார்க்கும்போதெல்லாம் சொல்கிறாராம். அந்தப் பாட்டை எழுதியதே சுரேஷ்தான் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ.

ஆனால் திரும்ப திரும்ப இப்பாடலையே அலறவிடுவதால் அவரின் பக்கத்துவீட்டுக்காரர்கள் கதறுவதுதான் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரர்களின் நன்மையைக் கருதி அடுத்த தடவை பழைய தமிழ்திரை மெல்லிசைப்பாடல்களைக் கொடுக்க

"...இந்தப் பாடல்கள் அந்த அருமையான மன்மதராசா மாதிரி வரலையே..." என்று கோபிக்கிறாராம்.

எப்படியோ கடல்தாண்டி, கண்டம்தாண்டி உள்ளத்தைக் கவரும் மன்மதராசா நீ வாழ்க... :)
| | |
Comments:
ஜெர்மன்காரனுக்கு பாட்டோட அர்த்தம் புரியப் போறதில்லை. அதுனால பாட்ட விட குத்து தான் முக்கியம். 'மன்மத ராசா' பாட்டுல இருக்கிற குத்தை கேளுங்க.. கேக்றத விட பாருங்க... உங்களையறியாம டான்ஸ் வரும். பாட்டு வரி என்னமோ ஏப்ப சாப்பையா இருந்தாலும் எத்தனை பேரை ஈர்த்தது தெரியுமா? ஒரு சின்ன நிகழ்ச்சி. நான் சென்னையில இருக்கும் போது டிவியில அந்தப் பாட்டு போட, எங்க தெருவில சுமார் 10 நண்டு சுண்டு குழந்தைங்க திபு திபுன்னு வீட்டுக்குள்ள புகுந்து ஒரே ஆட்டம் தான்.

அப்படியே அவரு மன்மத ராசா வீடியோ கிளிப்பிங்ஸ் பார்க்கலேன்ன அதையும் கொடுங்க. அப்புறம் பாருங்க ஒரே ஆட்டம் தான். இன்னொரு அட்வைஸ் வரி புரிய போறதில்லனால நல்ல பீட் இருக்கிற பாட்டா கொடுங்க. நிறையவே இருக்கு.
 

நீங்கள் சொல்வது முற்றும் உண்மை. குத்து பாடலில் மிகவும் பிரபலமானது மன்மதராசா. போன வருடம் புளுமிங்டன் தமிழ் சங்கத்தில் ஒரு குழு இந்த பாடலை பாடிய போது வாண்டுகள் மட்டும் அல்லாது வாலிப உள்ளங்களும் சேர்ந்து கூத்தாடியது ஞாபகத்திற்கு வருகிறது
 

http://puthupunal.blogspot.com/2004_10_15_puthupunal_archive.html

:-)
 

naan saudi riyadhil saudi american vangiyil paNi seygiREn. ennudan paNi seyyum arabi naNbarukku, dhalabathi padaththil varum kaatuk kuyilu matRum jemini padaththil varum O pOdu iraNdu paadalgaLum adhigam pidikkum.

balarajangeetha
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com